தல்கஸ்பிட்டிய கிராமத்தில் அர்ப்பணிப்பான சமூகசேவகர் எம்.ஐ.எம். தாஹா

என்.எம். அமீன் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் தாஹா இப்ராஹிம் லெப்பை_ அம்ரத் பீபி தம்பதியரின் மூன்றாவது புதல்வராக 1942.04.25 ஆம் திகதி பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாயை இழந்ததனால் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி கல்வியைப் பெற்றார். அவர் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று, பின்பு திப்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சேர்ந்து சா.த பரீட்சையில் சித்தி பெற்றார். ஆரம்பத்தில் இவர் மலேரியா திணைக்களத்தில் …

தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்

இலங்கை மண் ஈன்­றெ­டுத்த தேச நல­னுக்­காக செயற்­பட்ட உன்­னத ஆளு­மை­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜியார் திகழ்­கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த முஹம்­மது இஸ்­மாயில், ஷரீபா உம்மா தம்­ப­தி­க்கு வாரி­சாக நளீம் ஹாஜியார் பிறந்தார். மிகுந்த வறு­மைப்­பட்ட குடும்பப் பின்­ன­ணியில் பிறந்து வளர்ந்த அவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே பாட­சாலைக் கல்­வியைத் தொடர முடி­யு­மாக இருந்­தது. இளம் வய­தி­லேயே சுய­மாக தொழில் செய்து உழைக்க வேண்­டிய நிர்ப்­பந்த …

வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார். பரீட்சைக்குத் தோற்றிய மாணசவர்களுள் 80 சதவீதமானோர் க.பொ.த. உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். சித்தியடைந்தவர்களுள் ஏ.எப்.எப். ஆயிஷா பாஸி, எம்.எச்.எப். ஹப்ஸா ஹாபிழ்தீன், எம்.எம்.எப். ஹுமைரா மர்ஜான், எம்.எப்.எப். ஷஹீமா பைறூஸ் ஆகியோர் 9 பாடங்களிலும ‘ஏ” சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை …

இலங்கையில் மீண்டும் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கையா?

ஞானசார தேரரினால் இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று ஊடக நேரலையொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு வாரம் கடந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கைக்குண்டு மீட்பு, மின்னஞ்சல் எச்சரிக்கை என்று சில சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு பரவுகின்ற இன்னொரு செய்தியே தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாகும். தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல்? நேற்றைய தினம் (28) கடற்படை அதிகாரிகள் குழுவினர், ஜா-எல போபிட்டியவிலுள்ள புனித நிக்கலஸ் தேவாலயத்திற்கு சென்று, குண்டுத் தாக்குதல் …

ஊரடங்கு ஒக்டோபர் 01 அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். அத்துடன் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் விரைவாக அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார …

பாடசாலைகளை திறந்தாலும் பாடம் நடக்காது

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார்? அவரது நகைச்சுவைகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உடனடியாக இந்த நகைச்சுவைகளை சொல்வதை நிறுத்துங்கள். பாடசாலைகளை திறந்து …

மாட்டிறைச்சியின் விலையை அதிகரிக்க முடியாது

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மாட்டிறைச்சியை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயால் அதிகரித்து விற்க மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் அனுமதி கோரியிருக்கின்றார்கள் என்றும் எனினும், மக்களின் சமகால கொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு விலையை மேலும் அதிகரிக்க அனுமதிக்க முடியாதென ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார். ஏறாவூர் நகர சபையின் 42ஆவது மாதாந்த சபை அமர்வு, நகர சபையின் சபா மண்டபத்தில் (28.09.2021) நடைபெற்றது. நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், வாழ முடியாது மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற அதேவேளை …

ஒரு சிகரெட்டின் விலையை 20.00 ரூபாவினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் சம்பாதிக்கலாம்

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துளார். கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. …

சிகரம் தொடும் மாவனல்லை ஸஹிரா

மாவனல்லை ஸஹிராக்கல்லூரி இவ்வருடம் தன் நூற்றாண்டை வெகுசிறப்பாய் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் வெளியாகியுள்ள கா.பொ.த சாதரண தர பெறுபேறுகள் அப்பாடசாலையின் நூற்றாண்டை மென்மேலும் சிறப்பிப்பதாய் அமைந்துள்ளமை போற்றத்தக்கது. இவ்வருட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 9A s – 24 மாணவர்கள் பெற்றுள்ளதுடன் 8As- 12, 7As -10 மாணவர்கள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துத்தந்துள்ளனர் . எத்துறையிலும், உலகெங்கிலும் மாவனல்லை தேசிய பாடசாலை மாணவர்கள் மிளிர்ந்து வருவது பாடசாலைக்கு என்றும் பெருமைசேர்க்கவல்லது பின்த் அமீன்

அமைச்சரவை முடிவுகள் – 2021.09.27

27.09.2021 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இராஜதந்திர, விசேட மற்றும் கடமைக்கான கடவுச்சீட்டு உரித்துடைய நபர்களுக்கு வீசா அனுமதி பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை ஜனநாயக குடியரசு மற்றும் பஹரேன் இராஜதானிக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம். சந்தஹிருசாய தூபியின் பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறங்காவலர் சபையை நிறுவுதல். இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (அம்ரிதா மருத்துவமனை) மூலம் இதயநோயுடன் கூடிய பிள்ளைகளுக்காக இதய சத்திரசிகிக்சையை மேற்கொள்ளல். நீரைத்தேக்கி …

ரூ.28 ஆயிரத்து 400 மில்லியன் அறவிடப்பட வேண்டியுள்ளது – மின்சார சபை

லோரன்ஸ் செல்வநாயகம் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தினால் மின் பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்களினால் பாவனையாளர்களிடமிருந்து 28,400 மில்லியன் ரூபாவை மின்சார சபை அறவிட வேண்டியுள்ளது. அந்த வகையில் மாதாந்தம் 7000 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளதாகவும் அதேவேளை மூன்று மாதங்களுக்கு 8,600 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளதாகவும் அத்துடன் மூன்று மாதங்களுக்கு மேற்பட்டு 12, 800 மில்லியன் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை தெரிவிக்கின்றது. நாட்டின் வீட்டு மின் பாவனையாளர்கள் அறுபத்தி மூன்று இலட்சமாக …

பளையில் மாற்றுத் திறனாளியின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக நாசம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். …

பாடசாலைகள் விரைவாக திறப்பதை விரும்பும் மாணவர்கள்

பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு மாணவர்களாகிய நாங்களும் பெற்றோரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம். கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதால் மாணவர் சமூகம் கவலை கொண்டுள்ளதாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் அதிசித்திபெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது கல்வி முறை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக இணைய தளம் வாயிலாக மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களின் கவனிப்பு காரணமாகவே …

தாய்க்கோர் அஞ்சலி

I lost my mom 4 years ago. The pain is still there. May Allah forgive all her sins and grant her Jennathul Firdowse. Aameen! இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே திகதியில் எனது அன்புக்குரிய தாயை இழந்து நின்றேன். இன்னும் அதன் தாக்கங்கள் தீரவில்லை. உலகமே மாயை என்பதை எந்தன் அன்புத் தீபத்தின் பிரிவு எடுத்தியம்பியது. எனது தாய் K.T. Rahuma Umma அவர்களுக்கு மேலான சுவனத்தை …

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 ஏக்கரில் எரிபொருள் களஞ்சியம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கையின் மூலோபாய ஆற்றல் மையமாக அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சமீபத்தில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவுடன் (HIPG) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. . உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதியை எளிதாக்கும் சேமிப்பு முனையம் துறைமுகத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள குழாய் வழியாக துறைமுகத்துடன் இணைக்கப்படும். பெரும்பான்மையான பெட்ரோலிய பொருட்களை உள்ளூர் நுகர்வோருக்கு வழங்கும் அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம், இந்த திட்டத்திற்காக இலங்கை மகாவலி ஆணையத்திற்கு …

டிசம்பரில் பாடசாலை விடுமுறை கிடையாது

ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக டிசம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அதேவேளை, பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நாட்டிலே 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் 5 ஆயிரத்து 131 பாடசாலைகள் …

வாழ்த்து மழை பொழிகிறேன்!

கல்விக் கூடத்தில் மாணவர் கல்விக் கல்லூரியில் பயிலுனர் காலங்கள் பல காத்திருந்து கல்லானாலும் கணவன் என கண்ணென எம்.ஏ. முஹம்மது றிப்தியை கணவனெனப் பெற்றேன் நானும்! கடவுள் அமைத்துத் தந்தவர் காதலெனும் அன்பு பொழிந்தவர் கணவனென அன்பு கொண்டவர் கல்விக் கடமையில் கைகோர்த்து கண்ணியம் தான் காத்து கடமைகள் பல நிறைவேற்றி காதல் விளக்கேற்றியவர்! உயிருக்குள் உயிரானவர்! உறவுக்குள் உறவானவர்! உண்மையின் ஒளியானவர்! ஆங்கில அறிவை அள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியராக நற்பண்புகளை போதிக்கும் போதகராக ஆசிரியர்களுக்கு …

உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் வியாபாரியை பிடிக்க போராடிய பொலிஸ் அதிகாரி

ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது தமது உயிரையும் பணயம் வைத்தாகும். அவ்வாறான துணிச்சலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகள் வரலாற்றிலும் காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் சீசீடிவியில் பதிவான அவ்வாறான துணிச்சல் மிக்க பொலிஸ் ஹீரோ ஒருவரின் செயலை முழு நாடுமே பார்த்தது. கடந்த 20ம் திகதி காலை 9.00 மணியளவில் நுகோகொடை பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவினது அதிகாரிகள் …

நீத்தார் பெருமை – பாரம் தூக்கல் சம்பியன் யாசீன்

எயாபோஸ் (AIRFORCE) யாசீன் என்றால் மாவனல்லையில் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவு எல்லோருடனும் கலகலப்பாய் பேசி உறவுகொண்டாடும் ஒர் நபர். அவரின் பேரிழப்பு குடும்பத்துக்கோ, மாவனல்லைக்கோ மட்டுமல்ல நாட்டுக்கே என்றால் மிகையாகாது. தனது நாட்டுக்காய் நாட்டுப்பற்றுடன் விமானப்படையில் போர்காலங்களில் கூட முனைப்புடன் பணிபுரிந்தவர். தன் முன்னே குண்டுகள் வெடிக்கும் என தன் போர்கால நினைவுகளை என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதுமட்டுமன்றி பாரம் தூக்குதல் போட்டியில் மிகத்திறமையாக விளையாடிய இவர் இந்நாட்டின் …

வாழ்வோமா நாம்?

கோரம் இந்தக் கொரோனா அகோரம் அதன் விளைவுகள்! கொத்துக் கொத்தாக கொன்று உயிர் பறித்து ஏப்பமிடும் பொல்லாத கொடுங் கோலன்! உயிரைக் குடிக்கும் பேய் உறவைப் பறிக்கும் எமன் உணர்வுகளைச் சிதைக்கும் வடு உள்ளத்தைத் தாக்கும் ஆயுதம்! உலகை உலுக்கும் உலை! கண்களைக் குருடாக்கி காதுகளையும் செவிடாக்கி கால்களையும் கட்டிப்போட்டு கைகளையும் முடமாக்கி கைவரிசையை காட்டுகிறதே! தடிமன் இருமலெனத் தொடங்கி தலைவலி காய்ச்சலென விரிந்து உடல் வலியென வளர்ந்து தருகிறதே தாங்கொனா வேதனை ஏனெதற்கு இந்த சோதனை! …

ஒவ்வொரு வீட்டுக்கும் சுதேச மருத்துவப் பொதி – கொவிட் செயலணி அறிக்கை

பசில் தலைமையிலான கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சுதேச மருந்துப் பொதி விநியோகிக்க ரூ. 6,000 மில்லியன் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு சுற்றுலா வலயங்களுக்கு அருகில் ஆயுர்வேத கொவிட் சிகிச்சை நிலையங்கள் தாமதமின்றி விமான நிலையத்தில் PCR பரிசோதனை நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி நாட்டை மீண்டும் திறக்கும் போது பிறப்பிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் …

இலங்கையிலிருந்து சவப்பெட்டி ஏற்றுமதி

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, குறுகிய காலத்தில் இலங்கை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 1,200 காட்போர்ட் சவப்பெட்டிகளைக் கொண்ட இரண்டு 40 அடி கொள்கலன்கள் நேற்று (23) தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வியட்நாமிற்கு அனுப்பப்பட்டன. திட்ட நிறுவனர் தெஹிவளை கல்கிஸ்ஸை நகராட்சி மன்ற சிரேஷ்ட்ட நகராட்சிஉறுப்பினர் தேசபந்து பிரியந்த சஹபந்து தெரிவித்தார். 2019 முதல், எனது தனிப்பட்ட பரிந்துரையின் பேரில், சுற்றுச்சூழல் நட்பு அட்டை சரக்கு கொள்கலன்கள் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, ​​இது …

உலகளவில் கொரோனா பாதிப்பு குறைகிறது

உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு நாடுகளில் தினமும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தாக்கியது. இதனால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்தபடி இருந்தது. டெல்டா வகை கொரோனா காரணமாக புதிதாக …

முஸ்லிம் அமைச்சரே அல்லாஹ் உங்கள் மீது விதித்த பொறுப்பை சரியாக நிறை வேற்றுங்கள்

பேருவளை ஹில்மி கௌரவ அமைச்சர் அவர்களே கடந்த காலங்களில் பதவிகளையும், ஆட்சிகளையும் பாதுகாக்க, மத குருக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிகை பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் சூட்சகமாக கை கொள்ளப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகின்றது . இந்த வகையில் அரசுக்கு ஆதரவு குறைவடைந்து எதிர்ப்புக்கள் வலுவடையும் இந்த வேளையில், மீண்டும் வழமைபோல் முஸ்லிம்களை நிந்திக்கும் மத குரு கூவத் தொடங்கியுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி, தாங்கள் உட்பட, முஸ்லிம்கள் …

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று (22)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முன்வைத்த வாதப் பிரதிவாதிங்களைத் தொடர்ந்து எவ்வித திருத்தங்களுமின்றி, வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் …