நியுஸ்லாந்து தாக்குதல் தொடர்பான இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் இன்று ஆக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் 22 அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நியூசிலாந்தில்‌ நடைபெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதலை நாங்கள்‌ மிக வன்மையாகக்‌ கண்டிப்பதோடு, இதனால்‌ காயமடைந்தவர்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக்‌ கொள்கின்றோம்‌. தாக்குதல்தாரி இலங்கையைச்‌ சேர்ந்தவர்‌ என்பதை அறிந்து மிகவும்‌ கவலையடைகின்றோம்‌. அனைத்து இலங்கையர்கள் சார்பாகவும், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவும், இந்த … Read moreநியுஸ்லாந்து தாக்குதல் தொடர்பான இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஒக்டோபர் 07 வரை நீடிப்பு

தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 07ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 07 வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்  கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா வீசாக்களை கொண்டிருப்பவர்கள், வீசாக்களை மேலொப்பமிடுவதற்கு, eservices.immigration.gov.lk/vs … Read moreஇலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஒக்டோபர் 07 வரை நீடிப்பு

மருத்துவ அங்கீகாரத்துடன், பாடசாலை மாணவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசி – ஜனாதிபதி

செப்டெம்பர் 13 அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தடுப்பூசி ஏற்றலில் வெற்றிகாண உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஜனாதிபதி பாராட்டு தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், இன்று (03) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. மாகாண மற்றும் … Read moreமருத்துவ அங்கீகாரத்துடன், பாடசாலை மாணவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசி – ஜனாதிபதி

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல – நியுஸ்லாந்து அரசாங்கம்

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று  நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது, இது ஒரு நம்பிக்கை, இனம் அல்லது கலாச்சாரம் சார்ந்த தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்டார். இன்று (03.09.2021) நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் … Read moreநியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல – நியுஸ்லாந்து அரசாங்கம்

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும்

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், எமது நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார். சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் இடையில் (31) நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவின் மூன்றாவது … Read moreஇலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும்

உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் திகதி செப்டம்பர் 15 வரை நீடிப்பு

லோரன்ஸ் செல்வநாயகம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் கடந்த ஜூலை 5ஆம் திகதியிலிருந்து ஜுலை 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது எனினும் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதற்கான திகதி மீண்டும் எதிர்வரும் 15ஆம் … Read moreஉயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் திகதி செப்டம்பர் 15 வரை நீடிப்பு

இதுவரை 83,000 மெ. தொன் பதுக்கல் சீனி மீட்பு

மேல் மாகாணத்தில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83.000 மெட்ரிக் தொன் சீனி, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன் ஹெல்ல தெரிவித்தார். அதேவேளை 30 ஆயிரம் தொன் சீனி ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிலையில் மேலதிகமாக உள்ள சீனியை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக தனியார் துறை சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, நாடளாவிய ரீதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி, … Read moreஇதுவரை 83,000 மெ. தொன் பதுக்கல் சீனி மீட்பு

இலங்கை – தென்னாபிரிக்கா முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. அதேநேரம், இவ்வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 முன்னிலை பெற்றிருக்கின்றது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர்லீக்கில் அடங்கும்  … Read moreஇலங்கை – தென்னாபிரிக்கா முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்

லங்கன் பிரீமியர் லீக்கைப் போல வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்குபற்றலுடன் பெண்களுக்கான T20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இந்த லீக் போட்டிக்கு ‘Lanka Women’s Super League T20’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2022 பெண்களுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளை இலக்காகக் கொண்டு இந்த T20 லீக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. நான்கு அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் ஒரு அணியில் அதிகபட்சமாக … Read moreஇலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்

சீனி, அரிசி உச்சபட்ச விலை வர்த்தமானி வௌியீடு

சீனி, அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய வெள்ளைச் சீனி பொதி செய்யப்படாதது – ரூ. 122 பொதி செய்யப்பட்டது – ரூ. 125 சிவப்புச் சீனி பொதி செய்யப்படாதது – ரூ. 125 பொதி செய்யப்பட்டது – ரூ. 128 அரிசி வெள்ளை/ சிவப்பு பச்சை அரிசி – … Read moreசீனி, அரிசி உச்சபட்ச விலை வர்த்தமானி வௌியீடு

Select your currency
LKR Sri Lankan rupee