பலாதாரமணம், காதி நீதிமன்றம் நீக்கப்படும் – அலிசப்ரி

யார் எதிர்த்தாலும் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் திருமண சட்டம் மாத்திரமல்ல சுமாராக 50 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பொது திருமணச் சட்டத்திலும் சர்வதேச திருமண முறைகள் போன்று திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அதாவது இருவர் இணைந்து வாழ முடியாவிடின் இலங்கையில் வற்புறுத்தி வாழ வைக்கும் நடைமுறை உள்ளது. அதற்கு பதிலாக … Read moreபலாதாரமணம், காதி நீதிமன்றம் நீக்கப்படும் – அலிசப்ரி

பொருளாதார அவசரகால சட்டம் நிறைவேற்றம்

கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகளை இயல்பான நிலையில் முன்னெடுக்கும்வகையில் , அவசரகால சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணைக்கு இன்று நாடாளுமன்றத்தில் 132 வாக்குகள் ஆதரவாகவும் 51 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. இதன்படி 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30 ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை இன்று (06.09.2021) முற்பகல் 10.00 … Read moreபொருளாதார அவசரகால சட்டம் நிறைவேற்றம்

நியூஸ்லாந்தில் தாக்குதல் நடத்திய ஆதில் சிம்புவின் தீவிர ரசிகன் – ஆதிலின் தாய்

நியூசிலாந்தில் 06 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து போலிஸாரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். 2016 முதல் அவரது கொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தவர் முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில். கொல்லப்படும்போது நியூசிலாந்தில் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்த அவர் 2011இல் மாணவர் வீசா மூலம் … Read moreநியூஸ்லாந்தில் தாக்குதல் நடத்திய ஆதில் சிம்புவின் தீவிர ரசிகன் – ஆதிலின் தாய்

அக்கரைப்பற்று பொலிசாரால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் ஷாஹிர் கான்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த  சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. கடந்த 02.09.2021 திகதி காலை 11.00 மணியளவில் ஒலுவிலுக்கு செய்தி சேகரிக்க செல்வதற்காக அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த போது குறித்த பகுதியால் சென்ற அக்கரைப்பற்று பொலிசார் குறித்த ஊடகவியலாளரையும் அவரது தம்பியையும் தாக்கியுள்ளனர். அட்டாளைச்சேனையில் தனது செய்தி … Read moreஅக்கரைப்பற்று பொலிசாரால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் ஷாஹிர் கான்

கினியாவில் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி கலைப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று ஜனாதிபதியானார். தொடா்ந்து ஜனாதிபதியாக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஜனாதிபதியான போதிலும் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது. கினியாவின் ஜனாதிபதி ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து … Read moreகினியாவில் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி கலைப்பு

இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று (06) முதல் குறித்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, ஒமான், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. பயணத்தடை நீக்கப்பட்ட போதிலும் குறித்த நாடுகளில் இருந்து பிலிபைன்ஸிற்கு வருவபவர்கள் 14 நாட்கள் தனுமைப்படுத்தலில் இருக்க வேண்டும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா?

லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே … Read moreஅவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா?

இலங்கையின் சுதேச, ஆயுர்வேத வைத்தியத்தை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வோம்!

ஆராய்ச்சி முடிவுகளை உலகுக்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றுமுன்தினம் (04) தெரிவித்தார். மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன், அங்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார். தொற்றா … Read moreஇலங்கையின் சுதேச, ஆயுர்வேத வைத்தியத்தை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வோம்!

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமலிருக்க அரசு தீர்மானம்

லோரன்ஸ் செல்வநாயகம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை தொடர்பில் இறக்குமதி நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்தே அரசாங்கம் அத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் நேற்று தெரிவிக்கையில்: சில தினங்களாக கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளரும் நிதி அமைச்சின் செயலாளரும் கோதுமை மா இறக்குமதியாளர்கள் … Read moreகோதுமை மாவின் விலையை அதிகரிக்காமலிருக்க அரசு தீர்மானம்

அக்டோபர் நடுப்பகுதியில் பாடசாலைகள் திறப்பு

லோரன்ஸ் செல்வநாயகம் அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீள திறக்கும்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய வகுப்புக்கள் தொடர்பில் தற்போது விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல். எம். டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.. க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக கல்வி நடவடிக்கைகளை … Read moreஅக்டோபர் நடுப்பகுதியில் பாடசாலைகள் திறப்பு

கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துக

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆரம்பிக்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின் நிதியுதவி பெற்ற கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கெட்டம்பேயில் மேம்பாலம் அமையப் பெறுவதால் பேராதனை- கண்டி வீதியில் போக்குவரத்து … Read moreகெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துக

Michigan football, seemingly fully behind Harbaugh, gets an embarrassed Washington next week

Free Press sports writer Michael Cohen shares what he learned in Michigan football‘s 47-14 win over Western Michigan and looks ahead to the Wolverines’ game against Washington on Saturday: Next up Matchup: Michigan (1-0) vs. No. 21 Washington (0-1) Kickoff: 8 p.m. Saturday, Michigan Stadium, Ann Arbor. TV/radio: ABC; WWJ-AM (950), WTKA-AM (1050). Line: Wolverines by 1½. MORE FROM COHEN:Michigan’s blowout … Read moreMichigan football, seemingly fully behind Harbaugh, gets an embarrassed Washington next week

கொவிட் ஜனாஸாக்கள் கிண்ணியாவிலும் இன்று முதல் அடக்கம்

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம் செய்வதற்கான வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார … Read moreகொவிட் ஜனாஸாக்கள் கிண்ணியாவிலும் இன்று முதல் அடக்கம்

பரீட்சைகளுக்கான திகதியை அறிவித்தது கல்வியமைச்சு

கோவிட் -19 காரணமாக பிற்போடப்பட்ட க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார். க.பொ.த உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்தவும், க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை அடுத்த (2022) வருடம் பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்தவும் … Read moreபரீட்சைகளுக்கான திகதியை அறிவித்தது கல்வியமைச்சு

உயர்நிலை ஐசியு வெண்டிலேட்டர் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Fight cancer குழுவுடன் இணைந்து Expo lanka holdings PLC இன் நிதி உதவியில் ஒவ்வொன்றும் 3.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று இயந்திரங்கள் (மொத்தப்பெறுமதி 11 மில்லியன் ரூபாய்க்கு மேல்) (செப்டம்பர் 04) சுகாதார அமைச்சில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சார்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு … Read moreஉயர்நிலை ஐசியு வெண்டிலேட்டர் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Select your currency
LKR Sri Lankan rupee