8 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்காவுடன் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 47 ஓட்டங்களையும் துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் கேஷவ் … Read more8 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்காவுடன் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

நாட்டின் கடனைத் தீர்க்க எண்ணெய் வளம் – மன்னாரில்

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (07.09.2021) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் … Read moreநாட்டின் கடனைத் தீர்க்க எண்ணெய் வளம் – மன்னாரில்

நிதிச் சட்டமூலம் நிறைவேற்றம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நிதி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டது. இன்று (07) முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலம் தொடர்பான  விவாதத்தின் இறுதியில், தாங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி, சட்டமூலத்திற்கு எதிராக இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்தது. அதற்கமைய, … Read moreநிதிச் சட்டமூலம் நிறைவேற்றம்

கொடபிடிய இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு

அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார். குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தினரின் பங்களிப்புடன் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் 09.09.2021 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை 8;00 மணி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 28 கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட 20 – … Read moreகொடபிடிய இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு

அமைச்சரவை முடிவுகள் – 2021.09.06

06.09.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளும் ஒரு கட்டிடத்தில் நிறுவுதல் வயம்ப மஹஎல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளுக்கு சலுகை வழங்கல் பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் ஆட்களை அழிக்கும் நிலக்கன்னி வெடிகளைத் … Read moreஅமைச்சரவை முடிவுகள் – 2021.09.06

பிரான்ஸ் – இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்த விமான சேவை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டீ கோல் விமானநிலையம் வரை நேரடி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது. புதன் ,வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. சேவையில் ஈடுபடவுள்ள A330-300 aircraft  என்ற விமானத்தில் 297 பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும். இதேவ‍ேளை … Read moreபிரான்ஸ் – இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை

Select your currency
LKR Sri Lankan rupee