தேசிய உள்ளாடைகளை சதொச மூலம் விநியோகிக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால்  உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை  சதொச விற்பனை  நிலையத்தின் ஊடாக  குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்நிய செலாவணியை வலுப்படுத்துவதற்காகவே  இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற … Read moreதேசிய உள்ளாடைகளை சதொச மூலம் விநியோகிக்க நடவடிக்கை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட்

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் எனும் பொலிஸ் அதிகாரி சுகவீனம் காரணமாக கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்றைய தினமே அவர் காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் அவர் கண்டுபிக்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நான்கு நாட்களாக தேடப்பட்டு வரும் … Read moreவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட்

ICC T20 2021 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி

ICC T20 உலகக்கிண்ணம் 2021 இற்கான இலங்கை அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் குறித்த அணி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, இன்றையதினம் (12) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குறித்த குழாமில், தென்னாபிரிக்க அணியுடனான கடந்த ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் அறிமுகமாகி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கையின் மர்ம சுழல்பந்துவீச்சாளர் (Mystery Spinner) … Read moreICC T20 2021 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி

சிறந்த பொறுமை

என் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல! திருமணம் என்பது மேடையில் ஏறி அலங்காரமிட்டு! ஆபரணங்கள் அணிந்து! புத்தாடை உடுத்தி! தலைகுணிந்த படியும், புன்னகையுடனும் அமர்ந்து! கணவன் வந்த பின்னே தலை குணிந்து தலைநிமிர்ந்து கொள்வது மட்டுமல்ல! அந்த மேடையை விட்டு கீழே இறங்கி வாழ்க்கையில் இறுதி வரை சோதனைகளுடனும், வேதனைகளுடனும், நம்மை முடி கொண்டு சொந்தமிட்ட உறவை!! உயிர் போகும் கட்டம் வந்தாலும் … Read moreசிறந்த பொறுமை

கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம்

நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் … Read moreகல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம்

செப்டெம்பர் 21 முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் (21.09.2021) இருந்து அவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சிறுவர்களுக்காக பைஃசர் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆர் … Read moreசெப்டெம்பர் 21 முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம்

ஈராக் விமான நிலையம் மீது ‘ஆளில்லாத விமானம்’ மூலம் தாக்குதல்

ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக குர்திஷ் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் எர்பிளில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கள் படையினரை நிலைநிறுத்தி வைத்துள்ளன. ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், எர்பிள் விமான நிலையத்தை குறிவைத்து இன்று டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் மூலம் வெடிகுண்டுகள் … Read moreஈராக் விமான நிலையம் மீது ‘ஆளில்லாத விமானம்’ மூலம் தாக்குதல்

ஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று பிரதமர் சிறப்புரை

இத்தாலி, போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். … Read moreஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று பிரதமர் சிறப்புரை

இறக்குமதி பதிலீட்டுக் கொள்கை எமது நாட்டுக்கு சாத்தியப்படுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் கோவிட் 19 கொள்ளை நோய் மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. உலகில் நோய்த்தொற்று ஆரம்பகாலகட்டத்தில் நோயைக்கட்டுப்படுத்துவதில் இலங்கை எய்திய சாதனைகள் பலமட்டங்களிலும் பாராட்டுக்கு உரித்தானது. ஆனால் நாட்டில் முழு முடக்க நிலை நீக்கப்பட்டு நாடு திறந்து விடப்பட்டதன் பின்னர் நோய்த்தொற்று இரண்டாம் அலை முன்றாம் அலைஎனத் தொடங்கி தற்போது கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்வந்த உத்தியோக … Read moreஇறக்குமதி பதிலீட்டுக் கொள்கை எமது நாட்டுக்கு சாத்தியப்படுமா?

Select your currency
LKR Sri Lankan rupee