பேரவையின் அறிக்கைக்கு கூட்டமைப்பு ஆதரவு

ஆர்.யசி இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை செயலில் காண வேண்டும் என  மனித உரிமை உயர் ஸ்தானிகரின் வலியுறுத்தியள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட மனித உரிமை உயர் ஸ்தானிகரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் … Read moreபேரவையின் அறிக்கைக்கு கூட்டமைப்பு ஆதரவு

இத்தாலியில் இருந்து ஐநாவை விமர்சிக்கும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்

லியோ நிரோஷ தர்ஷன் ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உலகத்தில் ஒரு பகுதிக்காக அல்ல அனைத்துலக நாடுகளுக்குமானதாக இந்த அமைப்பு அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இத்தாலியில் இடம்பெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் பக்க நிகழ்வாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற  வெளிவிவகார கொள்கை மற்றும் மதம் என்ற … Read moreஇத்தாலியில் இருந்து ஐநாவை விமர்சிக்கும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்

ஐ.நாவில் ஆணையாளரின் இலங்கை அறிக்கைக்கு பச்சை கொடி காட்டிய பிரித்தானிய

நா.தனுஜா இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. இன்றைய தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது. … Read moreஐ.நாவில் ஆணையாளரின் இலங்கை அறிக்கைக்கு பச்சை கொடி காட்டிய பிரித்தானிய

முதல் நாளிலே ஐநாவில் வாங்கிக் கட்டிய இலங்கை

நா.தனுஜா) இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவயமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன. அதுமாத்திரமன்றி இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லேட் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னாப் ஜசீஸ் ஆகியோரின் தொடர்ச்சியான தடுத்துவைப்பு, வசந்த கரன்னகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை … Read moreமுதல் நாளிலே ஐநாவில் வாங்கிக் கட்டிய இலங்கை

ஊரடங்கில் தபாலகங்கள் திறக்கும் நாட்கள்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப் பகுதியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மாத்திரம் நாட்டிலுள்ள தபால், உப தபாலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தபாலகங்களில் பணி புரியும் ஊழியர்களின் போக்குவரத்தின் போதான சிரமங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொவிட் தொற்று ஏற்படும் அவதானம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த … Read moreஊரடங்கில் தபாலகங்கள் திறக்கும் நாட்கள்

கட்டுப்பாட்டை இழந்து திடீரென பாலத்திலிருந்து வீழ்ந்த கொள்கலன் வாகனம்

இரத்தினபுரி, கெட்டன்தொல பகுதியில் உள்ள வீதியில் பார ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி பாலமொன்றிலிருந்து புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (13) காலை குறித்த வீதியில் சென்று கொண்டிருந்த கொள்கலன் லொறி, கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறிக்கு பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரின் தலைக்கவசத்திலிருந்து கமெராவில் இவ்விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்று வரும் குறித்த வீதியில் லொறி விபத்திற்குள்ளாக முன் மோட்டார் சைக்கிள் … Read moreகட்டுப்பாட்டை இழந்து திடீரென பாலத்திலிருந்து வீழ்ந்த கொள்கலன் வாகனம்

காஷ்மீரில் இந்திய மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் புதிய ஆவணம்

பாகிஸ்தான், காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு குறித்து ஒரு ஆவணத்தை தயார் செய்துள்ளது, அதில் இந்தியாவின் உஸண்மை முகம் அம்பலமாகியுள்ளதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார். இந்திய ஆக்கிரமிப்பு மற்றும் காஷ்மீரில் உள்ள குற்றங்கள் குறித்த இந்த ஆவணத்தில் 131 பக்கங்கள் உள்ளன, அதில் போலி என்கவுண்டர்கள், பெண்களின் அவமானம், துஷ்பிரயோகம், போன்றவற்றுக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மூன்று அத்தியாய ஆவணங்கள் இந்திய போர்க்குற்றங்களையும் குறிப்பிடுகின்றன, 113 குறிப்புகள் ஆவணத்தில் … Read moreகாஷ்மீரில் இந்திய மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் புதிய ஆவணம்

Future Science Prize சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ்

பேராசிரியர் மலிக் பீரிஸ் சீனாவின் ‘Future Science Prize’ விருதை வென்றுள்ளார். SARS, MERS தொடர்பான ஆராய்ச்சிக்காக, 2021 ‘Future Science Prize’ விருது அவருக்கு வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. பேராசிரியர்களான மலிக் பீரிஸ் மற்றும் Yuen Kwok-yung ஆகியோர் இணைந்து இவ்விருதை வென்றுள்ளதாக, தூதரகம் விடுத்துள்ள ட்விற்றர் இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மில்லியன் டொலர் பரிசும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுகள், புத்தாக்கம் தொடர்பில் ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த … Read moreFuture Science Prize சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ்

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு அமைச்சரவையில் இன்று (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. புதிதாக அரச சேவையில் நியமனம் பெற்ற இந்த பட்டதாரிகளின் ஒரு வருட பயிற்சி காலம் செப்டம்பரில் முடிவடைகிறது. பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட அமைச்சின் செயலாளர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த பட்டதாரிகளை மாகாண சபைகள், அமைச்சுகள் மற்றும் ஏனைய அரச துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு இணைக்க முடிவு … Read moreஅரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு

அதிவேக பாதையின் காசாளர் 14 இலட்சம் ரூபாவுடன் மாயம்

எம்.எப்.எம்.பஸீர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அதிவேக பாதையின் களனி கம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந் நிலையில், குறித்த பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் ஒருவரும் மாயமாகியுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பண்டாரகம பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தனது கடமை நேரம் … Read moreஅதிவேக பாதையின் காசாளர் 14 இலட்சம் ரூபாவுடன் மாயம்

ஒரு தேசத்தின் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜகக்ஷ

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்று (12) முதலாவது அமர்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜி20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30-31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி … Read moreஒரு தேசத்தின் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜகக்ஷ

T20 ​தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில், 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றுக்காக தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (12) களமிறங்கியது. கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் ஆரம்பமாகிய … Read moreT20 ​தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

Select your currency
LKR Sri Lankan rupee