குப்பை கொட்டியவர்களை கண்டுபிடிக்க புது நுட்பம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம் என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையினால் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் …

சிறைச்சாலையில் 56 பட்டதாரிகள்

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு, 3,845 பேர் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, தண்டனைப் பெற்று வருபவர்களில் 56 பட்டதாரிகளும் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தரம் 8 வரை கல்வி பயின்றுள்ள 7,352 கைதிகளும், …

14 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலி

வீரக்கெட்டிய – வேகந்தவல பகுதியில் தந்தை ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் உறவினர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் …

பல்கலைக்கழகங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு திட்டம்

இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் இரண்டையும் வழங்கி, பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UCG) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழகங்களை துரிதமாகத் திறப்பது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு (17) தெரிவித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து இதற்காக துரித வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் கல்வி சாரா …

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

ஏ.ஆர்.ஏ.பரீல் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்­ச­ரவை தீர்­மானத்தை எதிர்த்து காதி நீதி­ப­திகள் போரம், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் உல­மாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காதி நீதி­ப­திகள் போரம் அண்­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமை அவ­ரது காரி­யா­ல­யத்தில் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்­தி­யது. 20ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்கி வாக்­க­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒத்­து­ழைப்­பினை இவ்­வி­வ­கா­ரத்தில் பெற்­றுக்­கொள்­வ­தென பேச்­சு­வார்த்­தை­யின்­போது …