இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த ஒராபி பாஷா

மார்லின் மரிக்கார் அஹ்மட் ஒராபி பாஷாவின் 110 வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 21ஆம் திகதி) ஆகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்களித்தவர்களில் அஹ்மட் ஒராபி பாஷாவும் குறிப்பிடத்தக்கவராவார். எகிப்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1880 களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். அதன் விளைவாக அவரும் அவருடன் இணைந்திருந்தவர்களும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு இலங்கைக்கு வந்து சேர்ந்த ஒராபி பாஷா இந்நாட்டு முஸ்லிம்களின் நவீன கல்வி மறுமலர்ச்சிக்கு உழைத்துக் …