பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று (29.10.2021) இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொவிட் …

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிடம் திறப்பு

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (29.10.2021) அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டார். மாத்தறை கொடவில பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்தை திறந்துவைத்து அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் அதன் நினைவு பலகையை திறந்துவைத்தார். 1,286.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒரு உயர் நீதிமன்றம், …

ஜனாதிபதி கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை மற்றும் கைது செய்ய நடவடிக்கை?

தனுஜா மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கோரும் 200 இலங்கைத் தமிழர்கள் சார்பிலான மிகமுக்கிய சமர்ப்பணம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள …

பற்கள் சொற்கள்

பால் வயதிலே பற்கள் முளைக்க பள்ளி சென்று பல்லாயிரம் சொற்களை பக்குவமாய் உச்சரித்து பாட்டுப் பாடி மகிழ பாஷைகள் பரிமாற பாவையாய் அழகு பொழிய பாற் பற்களுக்கு பலம் தேவை! காலை மாலை தினம் உணவுண்ட பின் நிதம் பல் துலக்கி சுத்தி செய்து பல்லீறுகள் நீக்கி போக்கி சிரித்து சிந்தித்து வாழ்ந்தால் முற்றம் எங்கும் மணக்கும் வீடே மல்லிகைப் பந்தல்! அன்றேல் மனது கனக்கும் வீடே துயரின் விம்பம்! பல்லுப் போனால் சொல்லும் போகும்! கண்ணும் …

நாட்டை இருநாள் இருளில் மூழ்க வைத்து ஆர்ப்பாட்டம்?

இப்னு அஸாத் நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று (26.10.2021) இரவு கொழும்பில் இடம்பெற்ற விமல் அணி தலைமையிலான பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிகாவுக்கு விற்பனை செய்தமை குறித்த அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் கெரவலபிடிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க …

ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்ட செயலணி – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஒரே நாடு மற்றும் ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2251/ 30 ஆம் இலக்க 2021.10/26 ஆம் திகதி குறித்த அதி விசேட வர்த்தமாணி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரும் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் தயானந்த பண்டா, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேதா சிறிவர்தன, என்.ஜி.சுஜித் …

முன்னேறு

சுற்றி உள்ள இருட்டு சூழ்ந்து விட்ட கருமை மறைக்க வரும் மேகங்கள் நெருங்கி வரும் கார்முகில்கள் அத்தனையும் கடந்து விட்டால் பிராகாசிப்பது நீ மட்டுமல்ல! உன்னை சுற்றி உள்ளதும் உனக்காய் சுற்றி வருவதுமாகும் தடைகளை தாண்டி விட்டால் தடம் பதிப்பது நீ மட்டுமல்ல! உச்சம் அடைய உயிர் கொடுத்தவரும், பிராகாசிக்க பிரார்த்தனை செய்தோருமாகும். தகர்த்தெறிந்து முன்னேறு உனக்காய் அல்லாமல் ஊக்குவித்தவருக்காய்! SHIMA HAREES UNIVERSITY OF PERADHENIYA

அமைச்சரவை முடிவுகள் – 2021.10.25

25.10.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒஃப் பயோடெக்னொலோஜி (பிறைவெட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு ஹோமாகம> பிட்டிபன பிரதேசத்தில் காணித்துண்டொன்று வழங்கல் ‘No New Coal’ உலகளாவிய எரிசக்தி ஒப்பந்தம்/ உலகளாவிய தூய எரிசக்தி நிலைமாற்றம் தொடர்பான பிரகடனம் SPMC லோட்டஸ் மருந்துகள் உற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டம் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை கெரவலப்பிட்டியில் அமைத்தல் ‘சிலோன் தேயிலை’ இற்கான புவியியல் குறிகாட்டியை …

பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி

நவம்பர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு எந்தவொரு நவம்பர் 1 முதல் எந்தவொரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தின் கீழ், இரண்டு வாரங்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய …

இங்குருகொட முதல் துறைமுக நகருக்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை

இலங்கையில் முதன்முறையாக புதிய தொழில்நுட்ப முறையான கொங்கிரீட் பால பகுதிகளை பொருத்திப் பாலம் நிர்மாணிக்கும் முறை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய முன்கூட்டியே பொருத்தப்பட்ட 3279 கொங்கிரீட் பால பகுதிகளின் மீது இங்குருகொட சந்தியில் இருந்து காலி முகத்திடல் துறைமுக நகரம் வரை, துாண்களின் மீது செல்லும் துறைமுக நகர நுழைவு அதிவேக நெடுஞ்சாலை வீதி அமைக்கப்படவுள்ளது. இதற்கமைய முதலாவது முன் தயாரிக்கப்பட்ட கொன்கிரீட் பால பிரிவுகளை பொருத்தும் விழா நேற்று ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை …

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் புதிய தளர்வுகள் – 2021.10.25

இன்று நள்ளிரவு (25.10.2021) முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன திருமண மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமல் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளமுடியும். மேலும், திறந்த வெளி திருமண நிழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மதுபானம் பகிரப்பட அனுமதி இல்லை. உணவகங்களின் மூன்றில் …

அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள …

மாகாணங்களுக்குள் மட்டும் ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பருவச் சீட்டி வைத்திருப்பவர்கள் மாத்திரமே இன்று முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் இன்று ஆரம்பம்

அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. கொவிட் வைரஸ் தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துவது அவசியமாகும். பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது, இதேவேளை, சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து வழங்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக கல்வி …

ஏற்றுமதி நோக்கான மரமுந்திரிகை உற்பத்தி; பூநகரி பெண் தொழில் முயற்சியாளரின் சாதனைப் பயணம்

ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பதப்படுத்திய மரமுந்திரிகை உற்பத்தியை மேற்கொண்ட கிளிநொச்சி, பூநகரி, மட்டுவில்நாடு பிரதேச தொழில் முயற்சியாளர் ஜெஸ்மின் ஜெயமலர் தனது சாதனைப் பயணம் தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: உங்கள் தொழில் முயற்சி, நீங்கள் இத்தொழில் முயற்சியை எப்போது ஆரம்பித்தீர்கள், ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தொழில் முயற்சியின் மூலம் என்ன வகையான உள்ளூர் உற்பத்திகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறீர்கள்? பதில்: நேச்சவின் பிறைவேற் லிமிட்டெட் (Naturewins Pvt Ltd எனும் வியாபாரப் பெயரைக் கொண்ட எமது …

இலங்கை – பங்களாதேஷ் தொடரில் இலங்கை வெற்றி

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போடடியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. பந்து வீச்சில் சமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா …

தென்கிழக்கு பல்கலையில் சட்டபீடம், மருத்துபீடம் அமைக்கும் பணி முன்னெடடுப்பு

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக கல்வி தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு, பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களது தொழில் நிலை சார்ந்ததாக உள்ளது. எனினும் எமது பல்கலைக்கழகம் மாணவர்களது தொழில் நிலைத் தராதரங்களைக் கூட்டுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2012 இல் எமது மாணவர்களின் தொழில் நிலை சராசரியாக 36 சதவீதமாக இருந்தது. ஆனால் 2018 இல் அது 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனை. இன்று இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் …

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அகுறஸ்ஸ திருமண தம்பதி

இலங்கையில் திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வறுமையில் வாழும் குடும்பம் ஒன்று வீடு கட்டி கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை, அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் தனது மனைவியும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் மக்கள் வங்கியில் பணியாற்றுகின்ற நிலையில் மனைவி ஆயுர்வேத வைத்தியராகும். தெற்கில் உள்ள பிரபல ஹோட்டலில் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பிரம்மாண்டமாக திருமணம் …

தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் – ரமீஸ் அபூபக்கர்

சர்வதேச தரப்படுத்தல் நிலையினை மேலும் முன்னேற்றம் பெறச் செய்ய பல்கலைக்கழகத்தின் சமூகப் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டியுள்ளது பல்கலைக்கழகமொன்றுக்குரிய வளங்கள் எதுவும் இன்றியே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று கல்வியிலும் ஆராய்ச்சியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் கண்டுள்ளதாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். எமது நாட்டு ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு அமைய எமது பல்கலைக்கழகம் முயற்சியாளர்களையும் தொழில்நுட்பவியலாளர்களையும் உருவாக்கும் ஒரு உயர் கல்வி கேந்திர நிலையமாக மாறவேண்டும். அதன் மூலம் எமது பல்கலைக்கழகத்தின் …

திரவ நனோ நைட்ரஜன் உரம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை

நா.தனுஜா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ நனோ நைட்ரஜன் உரம் என்பது இரசாயன உரமேயன்றி சேதன உரம் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனம், நனோ நைட்ரஜன் உரத்தின் ஊடாக யூரியாவின் பயன்பாட்டை நூற்றுக்கு 50 சதவீதமாகக் குறைக்கமுடியுமே தவிர, அது யூரியாவிற்கான முழுமையான மாற்றீடாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தரநியமங்களின் பிரகாரம், சேதனமுறையிலான விவசாயத்தில் நனோ உரத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து …

விவாகரத்து பெற்ற ஜோடி ஒரே அறையில் சடலங்களாக மீட்பு

விவாகரத்துப் பெற்ற, கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த கணவனும் மனைவியும் ஒரே அரையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலி – ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொரகீன பகுதியில் வசித்துவந்த 39 வயதுடைய ஆணொருவரும், 38 வயதுடைய பெண்ணொருவருமே அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இவ்வாறு சடலங்களாக நேற்று (22.10.2021) மீட்கப்பட்டுள்ளனர். அந்த வீட்டின் அறையொன்றின் கட்டிலில் கையில் பூச்செண்டுடன் பெண்ணின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், கடந்த …

ஏறாவூரில் ​பொலிஸார் இரு இளைஞர்களை தாக்கும் காணொலி

ஏறாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோவை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷானகியன் ராசமாணிக்கம் வெளியிட்டுள்ளார். இன்று மாலை (21.10.2021) இடம்பெற்ற தாக்குதலுக்கு வழிவகுத்த சம்பவம் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் உறுப்பினர் சாணக்கியன் தனது பதிவில், பொலிஸ் மிருகத்தனமான நடவடிக்கை மட்டக்களப்பில் தொடர்கிறது என்றாலும் அமைச்சர் சரத் வீரசேகரவின் காது கேட்காது என்று …

திங்கள் முதல் ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பம்

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு ஒக்டோபர் 25 முதல் பாடசாலை ஆரம்பம் இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி மீள திறக்கப்படுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, உரிய வழிகாட்டல்கள் அந்தந்த பாடசாலைகளின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற …

வெலிபிடிய கைத்தொழில் வலயம் மூலம் மாத்தறை மாவட்டத்திற்கு புதிய வேலை வாய்ப்புகள் – நிபுண ரணவக்க

மாத்தறை மாவட்ட வெலிபிடிய பிரதேச செயலகத்தில் கைத்தொழில் வலயம் அமைப்பதன் மூலம மாத்தறை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் நிபுண ரணவக குறிப்பிட்டார். மாத்தறை வெலிகம சாலிமவுண்ட் தோட்டத்தில் புதிய கைத்தொழில் வலயம் அமைப்பது குறித்த விசேட கலந்துரையாடல் 22.10.2021 இன்று பாராளுமன்ற வளாகத்தில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. மேலும் …

குஷிநகர் புனிதத் தலத்தில் விமான நிலையம் பிரதமர் மோடியினால் திறந்துவைப்பு

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் உட்பட 100 பௌத்த குருமாரும் பயணத்தில் பங்கேற்பு புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணமடைந்த புனிதம் நிறைந்த தலத்தைப் பார்வையிட வருகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரிகர்களுக்கு வசதியாக, உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான …