பாடசாலைக்கு வந்த யானைகள்

புத்தல மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன. இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை முடிவுகள் – 2021.10.11

2021.10.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும், அடையாளங் காண்பதற்கும் பொருத்தமான பொறிமுறையைச் சமர்ப்பித்தல். இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பான சட்டம் வகுத்தல். தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டம். குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்தல். 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் 2021.10.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் …

அமைச்சரவை முடிவுகள் – 2021.10.05

05.10.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கான புவிசார் வளங்களைப் பயன்படுத்தல். ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நியூசிலாந்து மெஸ்ஸி (Massey University of New Zealand) பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். ‘கிராமத்திற்கு தொடர்பாடல்’ தேசிய கருத்திட்டம். கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணி எடுத்தல். ஏற்றுமதி சந்தைக்கான மென்பொருள் அபிவிருத்தியை மேற்கொள்ளும் போது தகவல் தொழிநுட்பங்கள் தொடர்பான சேவைகள் வழங்கும் …