குஷிநகர் புனிதத் தலத்தில் விமான நிலையம் பிரதமர் மோடியினால் திறந்துவைப்பு

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் உட்பட 100 பௌத்த குருமாரும் பயணத்தில் பங்கேற்பு புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணமடைந்த புனிதம் நிறைந்த தலத்தைப் பார்வையிட வருகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரிகர்களுக்கு வசதியாக, உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான …

கண்டெடுத்த தங்கச் சங்கிலியை பொலிஸில் ஒப்படைத்த சிறுவனின் முன்மாதிரி

பேரின்பராஜா சபேஷ் மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்துக்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார். மட்டு, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இராசதுரை தனுகரன் என்ற இச் சிறுவன் கண்டெடுத்த தங்க ச்சங்கிலியை, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்தவிடம் நேற்று (20.10.2021) கையளித்தார். இதன்போது பிரதேச கிராம சேவை …