18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பிரதான 18 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும 24 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். எதிர்வரும் 24 மணிநேரத்தில் வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வட மாகாணத்திலும் …

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றுமாறு ஆரப்பாட்டம்

பத்தரமுல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வியற் கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் மற்றும் அதில் கற்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றக் கோரி இன்று (08) காலை முதல் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.