பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டல் வெளியீடு

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை உறுப்பினர் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. கொவிட் தொற்று தொடர்பான அறிகுறிகள் இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை ஏனையோரிடமிருந்து அகற்றி பாடசாலையின் நோயாளர் அறை அல்லது தனிமைப்படுத்திய அறையொன்றில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறை …

நவ. 23 – 26 வரை மாத்தறையில் மதக மங்கள நிகழ்வு

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் இருதி அஞ்சலி நிகழ்வை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். “மதக மங்கள”(மங்கள நினைவு) நிகழ்வு நவம்பர் 23 முதல் 26, 2021 வரை நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. நாடு மூடி இருந்த வேளையில், தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், ஆகஸ்ட் 24ஆம் திகதி திடீரென மறைந்த மங்கள சமரவீரவின் சோக மரணத்தால், அவரது வாழ்க்கைப் பயணத்தில் அவருடன் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றிய அனைவருக்கும் அவரது உடலை பார்க்கக்கூட …