பட்ஜெட் முதல் வாக்கெடுப்புக்கு ⅔ ஆதரவு

2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 2022 வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் …

அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்க தடை – சமூக வலைத்தளங்களும் கண்காணிப்பு

அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என உத்தரவுவெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது. உள்துறை இராஜாங்க அமைச்சு இந்தஉத்தரவை பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும், கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து …