அப்பா

  • 9

என்னில் புதைந்திட்ட
வலிகள் உங்களை
புன்னகைத்து விடப்
போவதில்லை மாறாக
நீங்கள் அழுதுடப்
போவதுமில்லை என்னதான்
செய்கிறீர்கள் எனப்
பார்க்கிறேன் உங்கள்
பதிவுகள் மூலம்!

நான் பிறந்து
நாளும் நரகமாய்
போனது இரக்கம்
காட்ட தந்தையில்லை
என்பதால்!

நான் தவழ்ந்து
நடக்க துணையாய்
எதுவுமில்லை பேச
முடியாத நடைவண்டியை
தவிர!
இருந்தாலும் நடந்திடப்
பழகினேன் விதியால்!

வயதும் கூடியது
வறுமையும் எங்களை
சூழ்ந்தது உதவிட
உறவுகளும் வரவில்லை
உபசரிக்க தகப்பனுமில்லை
தாகம் தீர்க்க
தர்மமும் கேட்டவில்லை
மாறாக என்னுடன்
பிறக்காத உறவு
என் தொப்புள்
கொடியுடன் பிறந்திட்ட
உறவு உழைத்து
வந்தது எனக்கான
பால்மாவினை!

இவைகள் பரவில்லை
என்று படைத்தவன்
மேல் பழி
சொல்லி பட்டனியாய்
கிடந்த தாய்மையின்
கண்ணீர் அறியாத
வயதில் நானும்
அழுதபடி கிடந்தேன்
மாற்று ஆடை
கூட இல்லாது!

அடித்து பிடித்து
வயது ஓடிக்
கொண்டு இருந்தது
என் தொப்புள்
கொடியும் உழைத்திட
ஆரம்பித்தது அவலங்களை
சுமந்து வந்த
சுனாமிக்கு பின்னர்!

உடுத்திட சிறு
சிறு ஆடைகள்
வந்தது ஆடைகளை
போட்டு அழகு
பாரத்திட கண்ணாடியும்
இல்லை என்னோடு
தந்தையும் இல்லை!

அவள் உழைத்திட்டு
உணவிட்டுப் போனவள்
அதனால்தான் அவளிடத்தில்
மன்டியிட்டு கிடக்கின்றேன்
மறு ஜெம்மமும்
அவள் மகனாய்
பிறந்திட! என்
தந்தையும் என்னுடன்
இருந்திட பிராத்தித்த  படி!

நான் இங்கு
பொய்களை உரைத்திடவில்லை
என் வாழ்வில்
மறைந்திடாத உண்மைகளைக்
கூறி உள்ளேன்!

இன்று அகவை
காணும் தந்தையே
கொஞ்சம் எனக்காய்
இரக்கம் கொண்டு
என் மரண
ஊர்வலத்தில் வாருங்கள்
நீங்கள் இருந்தால்!

எனக்கொரு ஆசை
நான் உங்கள்
கைபிடித்து சிறு
மணிநேரம் இருந்திட
ஆசை ஏனெனின் என்
குழந்தை பருவம்
இருந்து இன்றுவரை
உங்களை தடவிக்
கூட பார்த்ததில்லை!

உங்களை காயப்படுத்த
நான் கூறவில்லை
இவைகளை நான்
என் வாழ்வில்
வாங்கி வந்த
வலிகளைக் கூறி
உள்ளேன்!

நான் உங்கள்
மனம் வலிக்கும்
அளவு பேசி
இருந்தால் என்னை
மன்னித்து விடுங்கள்
பொறுமை கொண்டு
தந்தையே……!

பொத்துவில் அஜ்மல்கான்

என்னில் புதைந்திட்ட வலிகள் உங்களை புன்னகைத்து விடப் போவதில்லை மாறாக நீங்கள் அழுதுடப் போவதுமில்லை என்னதான் செய்கிறீர்கள் எனப் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் மூலம்! நான் பிறந்து நாளும் நரகமாய் போனது இரக்கம் காட்ட…

என்னில் புதைந்திட்ட வலிகள் உங்களை புன்னகைத்து விடப் போவதில்லை மாறாக நீங்கள் அழுதுடப் போவதுமில்லை என்னதான் செய்கிறீர்கள் எனப் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் மூலம்! நான் பிறந்து நாளும் நரகமாய் போனது இரக்கம் காட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *