விசமான வினாடிகள்

  • 20

விண்மீன்கள் கூட தோற்று போகும்
விழி மூடிய அவள் உறக்கத்தினை
நெருக்கத்தில் ரசித்திட முயன்றால்
விதி என்ற சிறைச்சாலை விட்டு
என் துணை சென்ற பாதை வந்தேன்
வியர்வை சிந்தி விரண்டோடி வந்தும்
மறைந்தோடியவளை என் விழி தேடிய போது
விசமாய்ப் போனது என் வினாடிகள்!

துளி கூட நகராத என்
நாட்காலியோ துணையாக எனை அழைக்க நாட்காட்டி பார்த்து
ஆட்காட்டி விரலசைத்து எண்ணிய
நாட்களில் என்னவள் முகம் காண
ஏங்கிய தருணமோ விசமாய்ப் போனது!

என் உயிர் நாடித்துடிப்பை உறுஞ்சுகின்ற
அவள் நினைவுகள் உள்நுழைகையில்
அவள் முகம் காணாத போது ஏங்குகின்ற
என் இதயத் துடிப்பின் வினாடிகளும்
விசமாய்ப் போனது !

இறங்காமனம் கொண்டவள் தந்த
உறங்கா விழிகளால்
உதிக்கும் விடியலின் வருகையை
எண்ணிய தருணம் கூட
விசமாய்த்தான் உள்ளது!

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

விண்மீன்கள் கூட தோற்று போகும் விழி மூடிய அவள் உறக்கத்தினை நெருக்கத்தில் ரசித்திட முயன்றால் விதி என்ற சிறைச்சாலை விட்டு என் துணை சென்ற பாதை வந்தேன் வியர்வை சிந்தி விரண்டோடி வந்தும் மறைந்தோடியவளை…

விண்மீன்கள் கூட தோற்று போகும் விழி மூடிய அவள் உறக்கத்தினை நெருக்கத்தில் ரசித்திட முயன்றால் விதி என்ற சிறைச்சாலை விட்டு என் துணை சென்ற பாதை வந்தேன் வியர்வை சிந்தி விரண்டோடி வந்தும் மறைந்தோடியவளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *