பெண் வீட்டாரை அடக்கும் ஆண் வீட்டாரது ஜாஹிலிய்யக் குணம்!

  • 13

ஆளுக்காள் மதித்து நடப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் பல்லாண்டு காலமாக திருமணம் என்று வந்துவிட்டால் பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் அடக்குவதும் சற்று குரலை உயர்த்திப் பேசி அதிகாரம் செலுத்துவதும் ஒரு நடைமுறையாக கொண்டு செயற்படுகின்றனர்.

இந்நேரத்தில் பெண் வீட்டுத்தரப்பினர் தமது பெண் பிள்ளை வாழப் போகும் இடம் என்பதால் அனைத்தையும் சகித்துக் கொண்டு சமூகத்தில் கௌரவமிக்கவர்களாக இருந்தாலும் கூட மாப்பிள்ளை வீட்டாரின் கட்டளைகள், அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு கூனிக்குறுகி அடங்கி நடப்பதற்கு தள்ளப்படுகின்றனர்.

யதார்த்தத்தில் மாப்பிள்ளை என்பவரும் மனித இனம் என்பதைப் போன்று பெண்ணும் மனித இனம் என்பதைப் புரிவதுடன் அவர்களுக்கும் மனம், உணர்வு அனைத்தும் இருக்கின்றன என்பதை ஆண் வீட்டாரும் புரிந்து கொள்ள வேண்டும்.


மாப்பிள்ளையோ மாப்பிள்ளை வீட்டாரோ ஒரு படி ஏற்றமாக தம்மைக் கருதுவதற்கு அவர்கள் ஒன்றும் சுவனத்திலிருந்து நேரடியாக இறங்கியவர்களுமல்லர் அத்தோடு உலகில் சுவனவாதிகள் என யாராலும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டவர்களுமல்லர்.

உண்மையில் கண்ணியவான்கள் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள். அவர்களை அல்லாஹ் மறுமையில் அடையாளம் எமக்கு காட்டயிருக்கிறான், இதுவல்லாமல் ஆண் வீட்டார்கள் தாமாக தம்மை கண்ணியவான்களாக நினைத்து பகல் கனவு கண்டு பெண் வீட்டாருக்கு உத்தரவுகள் இடுவதும் அவர்களுக்கு பட்டும்படாதவாறு குத்தலாகவும் நோவினை செய்வது இஸ்லாமியர்கள் என்ற வகையில் பொருத்தமாகாது.

இறுதி ஹஜ்ஜின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

“يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى.”

“மக்களே, உங்களது இரட்சகன் ஒருவன் மேலும் உங்களது தந்தையும் ஒருவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அரபியாக இருப்பவர் அரபியல்லாத அஜமியை விட உயர்ந்தவரல்ல, அரபியல்லாதவர் அரபிரயை விட உயர்ந்தவரல்ல, வெள்ளையர் கருப்பரை விடவும் கருப்பர் வெள்ளயரை விடவும் உயர்ந்தவர்களல்லர். தக்வா (இறையச்சம்)வைக் கொண்டே தவிர.” (நூல்: முஸ்னத் அஹ்மத் 22978)

விடயம் இவ்வாறிருக்க, இஸ்லாம் ஜாதி, இனம் வேறுபாடுகளை ஒழித்துக் கட்டியது மாத்திரமல்லாது அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் அடியார்கள் எனும் நாமத்துக்குரியவர்களாக இருக்கும் போது மேல் ஜாதி போன்றோ அல்லது மேல் கௌரவத்திற்குரியவர்கள் போன்றோ நினைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு முரணான ஜாஹிலிய்யத்தை வழக்காறாக சித்தரித்து பெண் வீட்டாரை அடக்கியொடுக்குக்குவதும் பணிப்புரைகள் விடுப்பதும் இஸ்லாத்தை விளங்கி அதனை நடைமுறைப்படுத்தும் இஸ்லாமியனுக்கு அழகல்ல.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை வழங்குவதுடன் மடமை, ஜாஹிலிய்யப் பண்புகளை விட்டும் தூரமாக்கி மனித உணர்வுகளை மதித்து நடக்கும் மனிதமுள்ள மக்களாக வாழ அருள் புரிவானாக!

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா

ஆளுக்காள் மதித்து நடப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் பல்லாண்டு காலமாக திருமணம் என்று வந்துவிட்டால் பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் அடக்குவதும் சற்று குரலை உயர்த்திப் பேசி அதிகாரம் செலுத்துவதும் ஒரு நடைமுறையாக கொண்டு…

ஆளுக்காள் மதித்து நடப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் பல்லாண்டு காலமாக திருமணம் என்று வந்துவிட்டால் பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் அடக்குவதும் சற்று குரலை உயர்த்திப் பேசி அதிகாரம் செலுத்துவதும் ஒரு நடைமுறையாக கொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *