என் ரெயில் பயணம்

  • 12

மெதுவாக ஒருநாள் நடைபோட்டு
பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே
தள்ளி நின்று தாலாட்டியது
தண்டவாள மணியோசை

விரைந்து வந்தும் நிரல் தாண்டி
என் நிழல் கூட உள்வர முடியவில்லை
பொறுமை காத்து பெறுமையாக
பாதம் பதித்து ஜன்னலோரம் நானிருக்க
நட்ட நடு நிசிக் காற்றும்
காட்டு வழிப்பாதையும்
கண்களை நடுங்க வைத்தது

முதல் பயணமல்லவா முடிவில்லா
நெடும் பாதையாய் தோன்றியது
விரைவில் வீடு வந்து
சேர்ந்திடாதா என்ற ஏக்கத்தால்
தலையணை இல்லை என்ற போதும்
தலைவாரி விட காற்று முன்வந்தது

முதலாம் வகுப்பில்
முதுகு சுமந்த பொதியில்
மூன்று பெட்டியில்
நான் வரைந்த புகையிரதமோ இது
இல்லை அது விரல் தீண்டியதும் வீடுவரும்
இது விடியல் தாண்டியதும் வீடுவரும்
என்று என்னிய நிலையில்
சிறு உறக்கம் கொள்ள முயன்றும்
தடுத்து வைத்திருந்தது
என்னை அந்த தாலாட்டும் மணியோசை

இருளிலும் இயற்கை அழகுதான்
என்பதை உணரவே
அரைமயில் தூரம் வரை
அடர்ந்த காடாய் இருந்தது
இம்சையான பயணம் என்ற போதும்
இதமாகத்தான் இருந்தது
இந்த ரெயில் பயணம்

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08



மெதுவாக ஒருநாள் நடைபோட்டு பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே தள்ளி நின்று தாலாட்டியது தண்டவாள மணியோசை விரைந்து வந்தும் நிரல் தாண்டி என் நிழல் கூட உள்வர முடியவில்லை பொறுமை காத்து பெறுமையாக பாதம் பதித்து…

மெதுவாக ஒருநாள் நடைபோட்டு பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே தள்ளி நின்று தாலாட்டியது தண்டவாள மணியோசை விரைந்து வந்தும் நிரல் தாண்டி என் நிழல் கூட உள்வர முடியவில்லை பொறுமை காத்து பெறுமையாக பாதம் பதித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *