அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 01

  • 132

அமைதியான புல்வெளிகள், பெரிய பெரிய தோட்டங்கள், கட்டிடங்கள், சந்தைக்கூடங்கள் என்று அந்நகரமே சிறந்து தோன்றினாலும். கான்மன் அரசு சோகை இழந்து வெறிச்சோடி கிடந்தது. நகரின் மத்தியில் இருக்கும் அரண்மனையில் மேலே மாடியில் இருந்து நகரை பார்த்து கொண்டிருந்த மஹாராணி, அரசரிடம்,

“அவங்க எல்லோரும் நம்மள விட்டுப்பிரிஞ்சி இருபது வருஷம் இருக்குமா?” என்று கேட்டுக்கொண்டே அவர் தோளில் சாய்ந்தாள்.

“கவலைப்படாதே மஹாராணி அவங்க நம்மள தேடி வரப்போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.” என்று அவரை சமாதானம் செய்தார். இருவருக்குள்ளும் இருக்கும் இந்த தீராத கவலையை தீர்த்து வைக்க கூடிய ஒருவன் அவர்களின் அரண்மனையிலேயே இருப்பதை ராஜாவும் ராணியும் அறிந்திருக்க வில்லை.

அரண்மனை மைதானம். மாஸ்டர் ஷா தன்னுடைய சிஷ்யனான கியோனிடம் மற்றவனை பற்றி விசாரிக்கிறார்.

“எங்கடா போய் தொலைஞ்சான் இவன்… எப்போ பார்த்தாலும் இதே தாமதம்…” என்று கடுப்பில் கூறினார்.

“எப்படி இருந்தாலும் அவன் வந்துடுவான் மாஸ்டர். அவனை பற்றியெல்லாம் அவனுக்கே கவலை இல்லை.” என்றான் கியோன்.

“இது ஒன்னும் சாதாரண பயிற்சி இல்லை கியோன். அவனோட கடைசி பயிற்சி..”

“அதோ வந்திட்டானே!”என்று கியோன் சொல்ல

“மன்னிச்சிடுங்க மாஸ்டர். கூடிய சீக்கிரம் வரத்தான் முயற்சி பண்ணேன். ஆனா வர்ற வழியில் ஒரு சின்ன பிரச்சினை ஆயிடுச்சு..”என்று சொல்லி முடிப்பதற்கிடையில் அவர்,

“நீ என்ன சொல்லுவே என்று எனக்கு முன்னாடியே தெரியும், எப்படியும் யாரையாவது பிரச்சினையில் இருந்து காப்பாற்ற போய் இருப்பே,.. இங்க பாரு. இன்னிக்கி உன்னோட கடைசி போட்டி, ஆனா அதுல நீ தோத்திட்டே..” என்று சொன்னதும் ரியூகி

“என்னது.. இன்னும் பயிற்சி போட்டி ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள நான் தோத்திட்டேன் என்னு எப்படி நீங்க சொல்லலாம்.?” குழப்பத்துடன் ரியூகி மாஸ்டரை பார்த்து கேட்டான்.

“என்னோட மாஸ்டர் யூகுவே எனக்கு சொல்லி தந்த கடைசி பயிற்சி என்ன தெரியுமா?”

“சொன்னா தானே தெரியும் “என்றான் கியோன்.

“ரெண்டு நிமிஷம் தாமதமாக வந்திருக்காயே..! சரியான நேரத்துக்கு சரியாக வந்து சேருவது தான் அவரோட கடைசி பயிற்சி அதுல நான் கூட அவ்வளவு சிறப்பா இருக்கல்ல. நீ என் நம்பிக்கையை காப்பாற்றுவாய் என்னு நினைச்சா என்னை ஏமாத்திட்டே” என்றார் ஷா.

“ஸாரி மாஸ்டர். இதை நேத்தே சொல்லி இருந்தா சரியா வந்து நின்னு இருப்பேன்…” என்றான். அவர் அவனை கோபமாக முறைத்தார்.

“சரி சரி ஆ ஊன்னா இப்படி முறைக்காமல்…. நான் இப்போ எப்ப வரணும் என்னு சொல்லுங்க.”என்றான் ரியூகி.

“இனி எங்கேயும் வரவேண்டியதில்லை.. ஒரு இடத்துக்கு போக வேண்டும்.”என்று சொல்ல கியோனும் ரியூகியும்

“என்ன ? எங்கே?”என்று கேட்டார்கள்..

“என் பின்னாடியே வாங்க..” என்று சொல்லி கொண்டே அவர்களை அரண்மனைக்குள் பெரிய பூட்டு போடப்பட்டிருந்த பிரத்தியேக அறைக்கு  முன்னாடி அழைத்து சென்றார். ரியூகியும் கியோனும் இதுவரை அரண்மனைக்குள் நுழைந்ததே இல்லை. அந்த அரண்மனையும் மனித நடமாட்டம் குறைந்த ஒன்றே. நாட்டின் முக்கிய விடயங்களை கலந்தாலோசிக்க வேண்டும் எனில் அவரவர் வீடுகளில் இருக்கும் அமைச்சர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு அழைத்து அதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும். மற்றும் படி. கான்மன் அரசு வெறுமனே பெயரளவுக்கு மாத்திரம் காணப்பட்டது. ரியூகியும் கியோனும் மிக நெருங்கிய நண்பர்கள். அத்தோடு மாஸ்டர் ஷாவின் மிக முக்கியமான மாணவர்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் மட்டுமே அவருக்கு மாணவர்கள் எல்லாவிதமான பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்திருக்கிறார் ஷா.

ரியூகி அனைத்திலும் சிறந்தவன். கியோன் கொஞ்சம் அப்பாவியான கோமாளி. ஆனால் அறிவாளி. என்றைக்கும் போலவே மைதானத்தில் ஏதேனும் பயிற்சி நடைபெறும் என்று எதிர்பார்த்து வந்தான் ரியூகி. ஆனால் மாறாக மாஸ்டர் ஷா இருவரையும் அரண்மனைக்குள் அழைத்து சென்றது இருவரையும் குழப்பியது.

“மாஸ்டர்… நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்…. ஒருவேளை நாங்களும் எல்லா பயிற்சிகளிலும் தேறி உங்களை போல மாஸ்டரா ஆகிட்டோமா?”  என்று கியோன் மாஸ்டரிடம் கேட்டான்.

“ஆமா மாஸ்டர்… இவ்வளவு பெரிய அரண்மனையில் ஒரு அமைச்சர், அரண்மனை பெண்கள், காவலாளிகள் யாரையும் காணும். ரொம்பவும் ஆச்சர்யமா இருக்கே?” என்றான் ரியூகி.

“கூடிய சீக்கிரமே உனக்கு அதுக்கான பதில் கிடைக்கும் ரியூகி…. இந்த அறையை பார்த்தாயா?”

“அறையை எங்கே பார்க்க முடிகிறது.. அதுதான் இவ்வளவு பெரிய பூட்டு போட்டு வெச்சிருக்கே” என்று கியோன் சொன்னான்.”

“அது யாரோட அறை?”என ரியூகி கேட்டான்.

“நம்ம பிரின்ஸஸ் அலீஸியாவோடது..” என்றதும்  இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்னது ? நம்ம ராஜா ராணிக்கு கொழந்தங்களே இல்லியே. என்ன பிரின்ஸஸ் என்றெல்லாம் சொல்லுரீங்க. ஒரே குழப்பமா இருக்கே..” என்றான் ரியூகி…

“ஒரு குழந்தை இல்லை ரியூகி, நான்கு குழந்தைகள் இருக்கு..” என்று இன்னொரு குண்டை தூக்கி போட்டார் மாஸ்டர் ஷா…. அதே நேரம் பூமியில் வாழும் அலைஸ், திடீர் கனவொன்று கண்டு திடுக்கிட்டு.  அலறிக்கொண்டே எழுந்தாள்.

தொடரும்…….
ALF. Sanfara.

அமைதியான புல்வெளிகள், பெரிய பெரிய தோட்டங்கள், கட்டிடங்கள், சந்தைக்கூடங்கள் என்று அந்நகரமே சிறந்து தோன்றினாலும். கான்மன் அரசு சோகை இழந்து வெறிச்சோடி கிடந்தது. நகரின் மத்தியில் இருக்கும் அரண்மனையில் மேலே மாடியில் இருந்து நகரை…

அமைதியான புல்வெளிகள், பெரிய பெரிய தோட்டங்கள், கட்டிடங்கள், சந்தைக்கூடங்கள் என்று அந்நகரமே சிறந்து தோன்றினாலும். கான்மன் அரசு சோகை இழந்து வெறிச்சோடி கிடந்தது. நகரின் மத்தியில் இருக்கும் அரண்மனையில் மேலே மாடியில் இருந்து நகரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *