அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 03

  • 8

கான்மன் நகரம். ரியூக்கியும் கியோனும் மாஸ்டர் ஷாவை பின் தொடர்ந்து ஒரு மலையை அடைந்தார்கள். அது சற்று உயரமான மலை.

“இளவரசியை கண்டுபிடிக்குறதா சொல்லிட்டு.. இப்படி மலையேற சொல்லுறீங்க… இது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல…” என்றான் கியோன்.

“இது நம்ம உலகத்த காப்பாற்ற வேண்டிய வேலை, நிழல் தேவதைகளிடம் இருந்து  நம்ம உலகத்தை காப்பாற்றனும் என்றால் நாம இளவரசியையும் சகோதரர்களையும் கண்டுபிடிக்கணும்.”என்றான்  ரியூகி.

“எனக்கு தெரியும் நீ ஒன்னும் ரிபீட் பண்ணாதே!” என்றான். கியோன்.

“நான் எதுவும் சொல்லல. நீ ஏதாச்சும் பேசினே இந்த மலையில் இருந்து உருட்டி விட்டுடுவேன்.” என மிரட்டினான்.

“எப்போ என்ன கொல்லலாம் என்னு காத்துகிட்டு இருக்கே யடா…” என்றான் கியோன்.

“இடம் வந்துடுச்சு.” என்றார் மாஸ்டர் ஷா.

மலை உச்சியில்  ஒரு பெரிய கண்ணாடி கதவு இருந்தது.

“அம்மாடி எவ்வளவு பெரிய கண்ணாடி..” என்ற கியோன் அதன் முன்னாடி சென்று தன்னை அழகுபார்த்து கொள்ள மாஸ்டர் ஷா அவனை உதைத்து உள்ளே தள்ளி விட நீருக்குள் மூழ்கியவன் போல கியோன் மறைந்து விட்டான்.

“ஆஹ்….”

“என்ன இப்படி பொசுக்கென தள்ளி விட்டீங்க… இப்போ எப்படி நாங்க அவங்கள கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டான் ரியூகி.

“அவளோட வலது பக்க தோளில் டிராகன் மச்சம் இருக்கும்…”

“என்னது அதெல்லாம் நான் எப்படி பார்க்கிறது..?”

“மறந்திடாதே ரியூகி அடுத்த சூரிய கிரகணத்துக்குள் அவங்க நாலுபேரும் அரண்மனையில் இருக்கணும்.”என்றார் ஷா.

“அதெல்லாம் சரி…..”என்று இழுத்தவன்..

“அவ அழகா இருப்பாளா?” என்று ஷாவிடம் கேட்க அவர் அவனை முறைத்து கொண்டே கண்ணாடி வழியாக தள்ளிவிட்டார். பூமியில் விழுந்து எழுந்த ரியூகி

“திருப்பி எப்படி வர்றதுன்னு சொல்லவே இல்லியே…” என்று கத்தினான். அங்கு கியோனை தவிர யாரும் இல்லை.

“சே….”

“அவரு எப்பவோ போயிட்டாரு… டா…”

“கியோன்…! வா போகலாம்… நம்ம இளவரசியை தேடி….”

இருவரும் நகரத்துள் நுழைந்தார்கள். தெருவில் வருவோர் போவோர் எல்லாம் இருவரையும் வினோதமாக பார்த்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடை அப்படியானது. பழங்கால போர் வீரர்களின் ஆடை போல. இவர்களும் பூமியில் உள்ள மனிதர்களையும், இடங்களையும் வியப்புடன் பார்த்து கொண்டே அதிவேக நெடுஞ்சாலைகளில் கண்ணா பின்னா என குறுக்கருத்து ட்ராபிக்கை குழப்பி விட்டார்கள்.

“யாருடா நீங்க சர்கஸில் இருந்து பாதில ஓடி வந்தவனுங்க போல….” என்று கண்ணா பின்னா திட்டு அவனுக்கு..

“ஏய்.. யாரை திட்டுறே? ரியூகி…. இது திட்டு தானே!” என்று கியோன் கேட்டான்.

“நம்ம ஆடைகள் அவங்கள போல இல்ல.. அதனால் நம்மள வித்தியாசமா பார்க்குறாங்க அதை மொதல்ல போட்டுக்கணும்..”

என்று சொல்லிக்கொண்டே வீதியோரமாக பார்த்தால் ஒரு ஆடைக் கடை அதிலே மாடல் பொம்மைக்கு ஆடைகளை அணிவித்து காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

“இவங்கல்லாம் கடைக்கு பாதுகாப்பு செய்யுறே வீரர்களோ!” என கியோன் கேட்டான்.

“வா போய் அவங்க கிட்ட பேசி பார்ப்போம்.” என்ற ரியூகி கடைக்குள் நுழைந்து அந்த பொம்மைகளில் ஒன்றை நெருங்கினான்.

“இந்த ஊரு ட்ரெஸ் எல்லாம் இங்க கிடைக்குமா?”என கேட்டான்.

“என்னடா யாரும் பேசவே மாட்டேன் என்கிறாங்க…” அவற்றை நன்றாக அவதானித்த ரியூகி.

“இதெல்லாம் பொம்மைங்கடா… சரியா போச்சு போ..”என்றான்..

“சரி இதுங்க போட்டிருக்குற ட்ரெஸ் நல்லா தான் இருக்கு வா எடுத்து போட்டுக்கலாம்.” 2என்றான் கியோன். அப்படி சொல்லி கொண்டே கியோன் ஒரு பெண் பொம்மையை நெருங்க..

“அடேய் அது பொண்ணுங்களோடது. இவன் ஒருவன்….” என்று ரியூகி தலையில் கைவைக்க அடுத்து திருட்டு தனமாக தங்களுக்கு வேண்டிய ஆடைகளை போட்டுவிட்டு.  அங்கிருந்து வெளியேறி விட்டனர். பதுங்கும் பயிற்சி நன்றாகவே உதவியது.

“இப்போ இளவரசியை எப்படி கண்டுபிடிக்குறதாம்?”

“அந்த மச்சம்…”

“எந்த மச்சம் டா?”

“இரு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு….”என்றான் ரியூகி.

“முகத்தை பார்த்தே வயதை கணிப்பிடும் யுக்தி தெரிஞ்சவங்க நாம…. கிட்டத்தட்ட இருபது வயசு பொண்ணுங்களை பின்தொடர்ந்தால்…..”

“எப்படி??”

“என்னை கவனி….” என்றவன் சிரித்து கொண்டே நகர்ந்தான்.

தொடரும்…….
ALF. Sanfara.

கான்மன் நகரம். ரியூக்கியும் கியோனும் மாஸ்டர் ஷாவை பின் தொடர்ந்து ஒரு மலையை அடைந்தார்கள். அது சற்று உயரமான மலை. “இளவரசியை கண்டுபிடிக்குறதா சொல்லிட்டு.. இப்படி மலையேற சொல்லுறீங்க… இது கொஞ்சம் கூட நல்லாவே…

கான்மன் நகரம். ரியூக்கியும் கியோனும் மாஸ்டர் ஷாவை பின் தொடர்ந்து ஒரு மலையை அடைந்தார்கள். அது சற்று உயரமான மலை. “இளவரசியை கண்டுபிடிக்குறதா சொல்லிட்டு.. இப்படி மலையேற சொல்லுறீங்க… இது கொஞ்சம் கூட நல்லாவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *