கல்லறையில் மூச்சு சத்தம்

இதய ஓசையில் இன்னிசை காற்றும்
இதமாய் தொட்டுச் செல்ல
இடம் மாறிப் போனது
நம் காதல் தேசம்

காதல் என்றாலே ஏன்தான்
உறவுகள் அசிங்கமாய்
எண்ணி நம் காதலை
அனாதையாகிறார்களோ தெரியவில்லை

ஏனடி சற்று போராடி இருக்கலாம்
அவசர பட்டு விட்டாயே
உன் மூச்சு சத்தம் கல்லறையில் கேட்க
நான் மூச்சுவிடாமல் ஜடமாய் வாழ்கிறேன்
உன் நினைவில்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

One Reply to “கல்லறையில் மூச்சு சத்தம்”

Leave a Reply

Your email address will not be published.