அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 05

  • 14

மறுநாள் பஸ் நிறுத்தும் இடமொன்றில் தூங்கி கொண்டிருந்த ரியூகியையும் கியோனையும் பஸ்ஸின் ஹாரன் ஒலி எழுப்பியது. திடீரென தூக்கத்தில் கேட்ட பயங்கர சத்தத்தால் பயந்து போன கியோன் பதற்றத்தில் எழும்பி “எம்மா,.. அது யாரு.. நான் ஒன்னும் பண்ணல.” என்று உளறினான்.

“ஷ்… அங்க பாரு இளவரசி வெளிய வர்ராங்க..அவங்கள பின் தொடருவோம்..”

சனிக்கிழமை என்பதால் ஷாப்பிங் செய்வதற்காக கடைக்குள் நுழைந்தாள் அலைஸ்.. இவர்களும் பின்னாடியே சென்றார்கள். பிஸ்கட்ஸ் பகுதிக்கு சென்று எதை எடுக்கலாம் என்று ஒவ்வொரு இராக்கையாக பார்த்து கொண்டு செல்லும் போது இவர்கள் இருவரும் அவளுக்கு நேரெதிராக மறுபுறம் வந்து கொண்டிருந்தார்கள். அவள் ஒரு பாக்ஸை எடுத்து அதன் விலையை பார்த்து விட்டு மறுபடியும் அதே இடத்தில் வைக்க முற்பட்ட போது துளை வழியாக ரியூகி தெரிந்ததும் அதிர்ந்து போனாள். பெட்டியை போட்டுவிட்டு பயத்தில் ஓடிப்போய் ஐஸ் வைத்திருக்கும் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து ஒளிந்து கொண்டாள். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு,

ஐயோ கடவுளே! இவன் எதுக்கு என்னையே பின்தொடர்ந்து வாரான். ஒருவேளை உண்மையிலேயே என்னை கொல்ல போறானா? ஐயோ.. என்ன காப்பாத்து நான் அவன் கண்ணுல படக்கூடாது.

என்று பிரார்த்தனை செய்துவிட்டு லேசாக கண்ணை திறந்தாள். ஆனால் ரியூகி அவள் முன்னாடி நின்று கொண்டிருந்தான்.

“ஆஹ்..” என்று கத்திகொண்டே மயங்கி விழுந்த அலைசை அலாக்காக தோளில் சாய்த்து கொண்டே அவள் வீட்டுக்கு கொண்டு வந்தார்கள் ரியூகியும் கியோனும். நண்பர்கள் யாரும் இல்லை. அவர்கள் வருவதற்கு நேரமாகும். கியோனை காவலுக்கு நிறுத்தி விட்டு அலைசை கட்டிலில் கிடத்தினான். அவள் கண்களை திறப்பதற்காக கொஞ்சம் தண்ணீர் தெளித்தான். அவளும் மெல்ல மெல்ல கண்களை திறந்தாள். மறுபடியும் அவனை பார்த்து கத்தமுயற்சித்தவளின் வாயை ரியூகி மூட அலைஸ் மீண்டும் அதிர்ந்தாள்.

“தயவுசெய்து கொஞ்ச நேரம் கத்தாம நாங்க சொல்லுற கேளுங்க பிரின்செஸ்..” என்றதும்,

“என்னது …பிரின்சசா …. “என்று கேட்டாள்.

“ஆமா.. நீங்க கான்மன் உலகத்தின் இளவரசி…”

“என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணும் புரியல..”

ரியூகி மாஸ்டர் ஷா சொன்ன எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னான். அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அலைஸ்…

“சரி நான் இதெல்லாம் எப்படி நம்புறது?” என கேட்டாள்.

“உங்க தோளில் ஒரு ட்ராகன் மச்சம் இருக்கே அது என்னன்னு தெரியுமா?”

“என். ன … அதை பத்தி உனக்கெப்படி…..” என வெட்கத்தில் தயங்கினாள்.

“அதுதான் ஆதாரம்…”

“இப்போ நான் என்ன பண்ணனும்…”

“ஒடனே புறப்பட்டு எங்க கூட உங்க உலகத்துக்கு வரணும்…”என்றான்.

அந்த நேரத்தில் கியோன் அவசரமாக உள்ளே நுழைந்து, “இளவரசியோட நண்பிகள் வராங்க” என்றான்.

அவர்கள் இருவரும் கட்டில் அடியில் மறைந்து கொண்டார்கள்..

“ஹாய் டி… என்ன இன்னிக்கி ஷாப் பக்கம் வரல…” என கேட்டாள் ஹாருஹி.

“வழக்கமா இந்நேரம் நீ ஷாப்பிங் சென்டர் ல இல்லே இருப்பே. ஒண்ணுமே வாங்கலியா?” என கேட்டாள் மீஸா

“அது அது. போனேன்.. ஒன்னும் பிடிக்கல அதான் வந்துட்டேன்…” என்றாள் அலைஸ்…

“என்னது???? நீ ரெண்டு நாளா சரியில்ல என்னடி உனக்கு உன்னோட கனவு காதலன் நியாபகமா?” என்று சீண்டினாள் மீஸா.

ரியூகிக்கி பக் என்கிறது. அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு தூங்கிய பின்னர் அலைஸ் மெல்ல எழுந்து வந்து இருவரையும் வெளியேற்றினாள்.

“என்ன”

“வெளில வாங்க”

“எதுக்கு”

“நேரத்தை வீணடிக்காமல் சீக்கிரம் வாங்க..”

மூவரும் வெளியேறி எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தர்களோ அங்கு சென்றார்கள். அலைஸ் ரொம்ப குழப்பத்தில் பயத்தில் நம்புவதா வேண்டாமா. நாம செய்றது சரியா பிழையா என்ற யோசனையில் ரியூகி பின்னாடி நடந்து கொண்டிருந்தாள்.

தொடரும்…….
ALF. Sanfara.

மறுநாள் பஸ் நிறுத்தும் இடமொன்றில் தூங்கி கொண்டிருந்த ரியூகியையும் கியோனையும் பஸ்ஸின் ஹாரன் ஒலி எழுப்பியது. திடீரென தூக்கத்தில் கேட்ட பயங்கர சத்தத்தால் பயந்து போன கியோன் பதற்றத்தில் எழும்பி “எம்மா,.. அது யாரு..…

மறுநாள் பஸ் நிறுத்தும் இடமொன்றில் தூங்கி கொண்டிருந்த ரியூகியையும் கியோனையும் பஸ்ஸின் ஹாரன் ஒலி எழுப்பியது. திடீரென தூக்கத்தில் கேட்ட பயங்கர சத்தத்தால் பயந்து போன கியோன் பதற்றத்தில் எழும்பி “எம்மா,.. அது யாரு..…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *