இஸ்லாத்தின் பார்வையில் ஆசிரியர் தொழில்

  • 54

ஆசிரியர்கள் என்போர் யார்??? அவர்கள் ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டும். அதன் எதிர்பார்ப்பு என்ன??? இஸ்லாம் கூறும் ஆசிரியர்கள் யார் ??? சமூகம் எதிர் பார்த்து நிற்கும் ஆசிரியர்கள் யார்??? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் தான் இந்த ஆசிரியர் தொழில் சென்று கொண்டு இருக்கின்றது.

உண்மையில் ஆசிரியர்கள் செய்வது ஓர் தொழிலா அல்லது அது ஒரு சமூக சேவையா என்பதை இன்றைய ஆசிரியர்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

ஆசிரியர் என்போர் யார்?

நல்ல ஆசிரியர், தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். தேசத்தை வடிவமைப்பவர், வரலாற்றை உருவாக்குபவர், மனிதனை மனிதனாக்குபவர், தேச எல்லைகளைக் கடந்து உலக உணர்வை வளர்ப்பவர், நாகரிகத்தைப் பேணிக்காத்து வரும் தலைமுறைக்கு அளிப்பவர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்பவர் ஆசிரியர்.

ஒரு தொழிலில் அல்லது நம்பிக்கையில் ஒவ்வொரு தனிநபரும் வெளிப்படுத்தும் சுயமுயற்சியின் அளவே உறுதிப்பாடு’ – மார்சியா (1967)

“தனது சுய விருப்பங்களை முன்னிறுத்துவோரை விட, பிறர்மீது அக்கறையும், அர்ப்பணிப்பு உணர்வும், பணியின் மீதுள்ள ஆழ்ந்த பற்றும் உடைய ஆசிரியரை உறுதிப்பாடு மிக்கவர்” என்று எலியட் மற்றும் கிராஸ்வெல் கூறுகின்றனர்.

பணி விருப்புக்கான ஒர் அடையாளமாகவும், மகிழ்வினை அளிக்கும் ஒர் உந்துதலாகவும் ஆசிரியர் உறுதிப்பாடு அமைகிறது.

வேத காலத்தில் ஆசிரியர் உறுதிப்பாடு என்பது குருவின் அர்ப்பணிப்பு, உபாசனை, சமர்ப்பணம், சத்தியம் போன்ற உன்னதத் தன்மைகளாகக் கருதப்பட்டன.

கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான எண்ணமும், செயலும் கற்றல் தேவைகளைப் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் ஆற்றல் கண்டறியப்பட்ட கற்றல் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் செயல் ஆர்வம் எழுச்சி சார்ந்த உயர் பண்புகளை உருவாக்குவதற்கான செயல் ஆர்வம்.

குழந்தைகள் பால் அக்கறை மனசாட்சியுடன் தனது பங்கு மற்றும் பொறுப்புணர்வைச் செயல்படுத்துதல். கண்ணியமான தொழில் நோக்கு மாற்றத்திற்கான தேவை மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, ஆசிரியர் தமது பணிப்பாங்கினை மாற்றிக் கொண்டு, புதிய கருத்துகளுக்கேற்ப தமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொண்டு, புதிய சமூகத்தை உருவாக்கும் பெரும் பணியினை ஆற்றிட ஆசிரியர் உறுதிப்பாடு மிகவும் அவசியமாகும்.

பாடம் நடத்துபவர் கற்றல் நிகழ்வுகளுக்கு ஏதுவாளர். தகவல் தொடர்பாளர். குழந்தைகளின் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர். புதிய உத்திகளை நாளும் தேடிப் புகுத்துபவர். கவர்ச்சியற்ற வகுப்பறைச் சூழலை ஆர்வமும், ஈடுபாடும் மிக்க கற்றல் களமாக மாற்றி அமைக்கும் அன்பால் அகிலத்தை வெல்லுவதில் நம்பிக்கை உள்ளவர்.

ஆசிரியர்கள் பின்வருவனவற்றிற்குத் தயாராக இருக்க வேண்டும்.
  1. பிள்ளைகளைக் கண்காணித்தல் மற்றும் அவர்களோடு இருத்தலை விரும்புதல்.
  2. சமூக கலாச்சார, அரசியல் சூழ்நிலையில் குழந்தைகளைப் புரிந்து கொள்ளுதல்.
  3. கருத்துக்களை ஏற்கத் தயாராகவும், எப்போதும் கற்க விருப்பமுள்ளவராகவும் இருத்தல்.
  4. பாடப்புத்தகங்களில் இருக்கும் பொருளாக அறிவைக் கருதாமல், கற்றல் – கற்பித்தல் முறையாலும் சுய அனுபவத்தாலும், விவாதித்தும் கருத்தேற்றமடைந்து கட்டமைப்பு செய்து கொள்வது அறிவு எனப் புரிந்துகொள்ளுதல்.
  5. சமுதாயத்திற்குப் பொறுப்புள்ளவராக இருந்து நல்ல உலகைப் படைக்க முயலுதல்.
  6. பாடப்பொருளறிவைப் பள்ளிக்குத் தொடர்பு படுத்திக் கற்பித்தல்.
  7. கலைத்திட்ட வடிவமைப்பில், செயல்திட்டங்களை இணைத்து அனுபவ அறிவாக்குதல் மற்றும் பாடப்புத்தகங்களை நன்கு ஆராய்தல்.
கற்போர் சார்ந்த ஆசிரியர் உறுதிப்பாடு
  1. கற்போரின் அறிவுசார்ந்த உறுதிப்பாடு.
  2. கற்போரின் பரஸ்பர உறவு சார்ந்த உறுதிப்பாடு.
  3. கற்போரின் உடல்நலம் சார்ந்த உறுதிப்பாடு.
  4. உளவியல் சார்ந்த உறுதிப்பாடு.
  5. கற்போரின் குடும்பச் சூழல் சார்ந்த உறுதிப்பாடு.
  6. பாடப்பொருள் அறிவு மற்றும் ஆசிரியர் உறுதிப்பாடு

பாடக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தி ஆசிரியர் உறுதிப்பாடு செயல்பாடுகளை வடிவமைத்தல். பொருளுடன் திரும்பக் கூறுதல். கண்மூலம் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளல். சொற்களை வெளிப்படுத்தும் வேகம். மொழி, குரல் வளம். கற்றல், கற்பித்தல் துணைக் கருவிகள் பயன்படுத்தல். அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல். சக ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.

இன்றைய குழந்தைகளே வருங்காலத்தில் சிறந்த குடிமக்களாக – சமுதாயமாக உருப்பெறுகிறார்கள். சமுதாய ஒத்துழைப்பின்றி எப்பள்ளியும் இயங்க, வளர முடியாது. சமுதாய முன்னேற்றத்திற்கும் வாழ்க்கைச் சூழல் மாற்றத்திற்கும் ஆசிரியர் தாமாகவே முன்வந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சமூக அமைப்பை மேம்படுத்த உதவ வேண்டும்.

இஸ்லாம் கூறும் ஆசிரியர்கள் யார்?

இன்றைய குழந்தைகளே வருங்காலத்தில் சிறந்த குடிமக்களாக – சமுதாயமாக உருப்பெறுகிறார்கள். சமுதாய ஒத்துழைப்பின்றி எப்பள்ளியும் இயங்க, வளர முடியாது. சமுதாய முன்னேற்றத்திற்கும் வாழ்க்கைச் சூழல் மாற்றத்திற்கும் ஆசிரியர் தாமாகவே முன்வந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சமூக அமைப்பை மேம்படுத்த உதவ வேண்டும்.

  • அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்யுங்கள். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு வேறு இலாஹ் இல்லை. அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுங்கள்.
  • இந்தப் போதனையைப் புரிவதற்காக எங்களுக்கு எந்தவோர் ஊதியத்தையோ சம்பளத்தையோ கூலியையோ உங்களிடம் நாம் கேட்கவில்லை. நாம் உங்களுக்கு கற்பிக்கிறோம். சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம். சரி, பிழையை பிரித்துக் காட் டுகிறோம். இதற்கான கூலியை உங்களிடம் நாம் எதிர்பார்க்கவில்லை. இதற்கான கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது.
  • நல்ல விடயங்களைக் கற்றுக் கொடுப்பது என்பதன் அர்த்தம், இஸ்லாத்தைக் கற்பிப்பது மாத்திரமல்ல. புவியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏனைய விடயங்களைக் கற்பிப்பதும் நல்ல விடயங்கள்தான். அதனை முறையாக கற்பித்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின் கூலி கிடைக்கும். செய்யும் தொழிலுக்கூடாக சுவனம் செல்ல வேண்டுமென்றால் இந்தப் பார்வை அவசியம். ஏனெனில், செய்யும் தொழில் அமானத் ஆகும். ஓர் ஆசிரியர் மாத்திரமல்ல, எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் தொழில் ஓர் அமானத் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
  • அர்ப்பணமும் தியாகமும் தொழிலில் அர்ப்பணமும் தியாகமும் இருக்க வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க வந்தவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்தவர்கள். எனவே, அவர்களிடத்தில் இந்த ஆசிரியப் பணிக்கான அழகியல் முன்மாதிரிகளைக் காணலாம். இறைதூதரைப் பற்றி அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது:

“(விசுவாசிகளே! ) நிச்சயமாக உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் (அது) அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி, உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது மிகவும் அன்பும் கிருபையும் உடைய வராகவும் இருக்கின்றார்.” (9: 28)

இத்தகைய அர்ப்பணம் ஆசிரியர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய நபித் தோழர்களைப் பார்த்து கூறினார்கள்:

“நிச்சயமாக ஒருவருக்கு அவருடைய தந்தையைப் போல உங்களைப் பொறுத்தவரையில் நான் இருக்கிறேன்.” (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா)

ஒரு தந்தை தனது பிள்ளைகளுடன் எந்தளவு அன்பாக, அக்கறையாக இருக்கின்றாறோ அந்தளவுக்கு அல்லது அதைவிட அதிக அக்கறையுள்ளவனாக நான் உங்கள் விடயத்தில் இருக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள்.

ஆசிரிய பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?
  • தவறு செய்யும் மாணவர்களை அரவணைக்க வேண்டும்.

ஆசிரியர்கள் பணியாற்றுவது இயந்திரங்களோடோ, இரும்போடோ அல்ல! மாறாக பிஞ்சு உள்ளங்ளோடு பணியாற்றுகிறார்கள். தவறு செய்யும் மாணவனை அரவணைத்து தவறை திருத்தி நெறிப்படுத்துவது இலகுவில் மாணவனின் தப்பை களைய உதவும்.

ஆசான்களின் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர் உள்ளத்தில் பதிகின்றன. பெற்றோருக்கு கட்டுப்படாத எத்தனையோ பிள்ளைகள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படுகின்றனர். எனவே அவர்களை ஏசியோ அடித்தோ அவர்களின் உள்ளத்தை நொறிங்கடித்து விடக்கூடாது பொறுமையாக தவறை எடுத்துச் சொல்லி, சகிப்புத்தன்மையை பேணி படிமுறை அடிப்படையில் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் அதீத தண்டனையால் அன்பு கலந்த கண்டிப்புக்கள் குறைந்து பாம்பும் கீரியுமாய் மாணவர்கள் ஆசிரியரை எதிரியாக நோக்கும் நிலை உருவாகிறது.

இதனால் அவ் ஆசிரியர் புகட்டும் பாடத்தை வெறுத்து, கல்வியை வெறுத்து, பாடசாலையை வெறுத்து உள, உடல் ரீதியாக பாதிப்புற்று பிரயோசனம் அற்ற பிரஜையாக மாறும் சூழல் ஏற்படுகின்றன. எனவே மாணவர்கள் எதிர்பார்ப்பது தாய் தந்தை போன்ற ஆசிரியரின் அன்பினால், அக்கறையினால் ஆன தண்டிப்பையும் அரவணைப்பையுமே!

  • மாணவர்களின் விடயத்தில் ஆர்வமுள்ளவராக இருத்தல்.

மாணவர் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டும். தன் வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் தனிப்பட்ட நலனில் கரிசனை கொள்வது ஆசிரியரின் கடமையாகும்.

மணவர்களில் ஒருவர் பல நாள் விடுமுறை எடுத்தால் அவர் குறித்து விசாரித்து காரணம் கண்டறிய வேண்டும். உதாரணமாக நோயுற்றால் விசாரிக்க செல்லல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தொழிலிலா? அல்லது சேவையா? சத்தியமா அது ஒரு சமூக சேவை தவிர வேறு ஏதும் இல்லை

தொழில் என்பது பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வழியேயன்றி அது இலட்சியம் அல்ல.

இறைவனின் திருப்தியை நாடி சேவை செய்கின்றோம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாறாக ஆசிரியத் தொழிலில் பண்டமாற்று வியாபரம் அரங்கேற்றக் கூடாது.

தனது பிரத்தியோக வகுப்பிற்கு வரும் மாணவர்க​ளை மட்டும் பாடசாலையில் கவனித்தல். பாடசாலையில் புகட்டும் பாடத்தை விட பணத்திற்காக டியூசன் வகுப்புக்களில் அதிக அக்கறை கொள்வது என்ற நிலையில் இருத்தல் கூடாது.

இன்று மாலைநேர டியூசன் வகுப்புக்கள் மாயையாய் அதிகரித்து விட்டன. இது மாணவர்களின் கல்வியை உயர்துவதற்கான தூய சிந்னையா? இல்லை பெற்றோர் பிள்ளைகளின் கண்களில் மாயையை விரித்து விட்டு இதுதான் கற்றலுக்கான சிறந்த வழிகாட்டி என்று சொல்லும் பித்தலாட்டமா?

ஒரு மாணவனின் கல்வியில் பாடவிதான செயற்பாடுகள் முக்கியமானதே. ஆனால் கற்பித்தல் பணியில் ஈடுபடுபவர். பாடவிதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்து விடக்கூடாது. மாணவனுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ வேண்டும்.

எனவே நானும் ஆசிரியர் சேவையை தொடர்ந்து கொண்டு இருப்பவர்களும் இந்த சேவையை சிறந்த முறையில் ஒரு உன்னதமான சமூகம் ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் எமது சேவையை இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆயின்.

நபீஸ் நளீர் (இர்பானி)
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம்

ஆசிரியர்கள் என்போர் யார்??? அவர்கள் ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டும். அதன் எதிர்பார்ப்பு என்ன??? இஸ்லாம் கூறும் ஆசிரியர்கள் யார் ??? சமூகம் எதிர் பார்த்து நிற்கும் ஆசிரியர்கள் யார்??? என்ற பல…

ஆசிரியர்கள் என்போர் யார்??? அவர்கள் ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டும். அதன் எதிர்பார்ப்பு என்ன??? இஸ்லாம் கூறும் ஆசிரியர்கள் யார் ??? சமூகம் எதிர் பார்த்து நிற்கும் ஆசிரியர்கள் யார்??? என்ற பல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *