மீசை வளர்ப்பிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோம்

  • 9

அல்லாஹ்விற்கு விருப்பமான இயற்கை ஸுன்னாக்களில் ஒன்று தான் மீசையை கத்தரிப்பது ஆனால் இன்றைய வாலிபர்களது நிலை நேர்மாற்றமாக உள்ளது.

சினிமா நடிகர்களது பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றை அச்சொட்டாகப் பின்பற்றும் புது யுகத்தினர், மீசையை உதடுகள் மறைக்குமளவு வளர்ப்பதோடு அதை வேறு முறுக்கிவிட்டு “மீசையை முறுக்குடா” என்று வீராப்பு பேசுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்வதைக் கருத்திற்கொண்டு தாடியை நன்கு அழகாக வளர்த்தும் மீசையை கத்தரிக்குமாறும் (Short ஆக்குமாறும்) பணித்திருக்கும் போது, இல்லை “நாம் நீங்கள் கூறிய வழிமுறையைப் பின்பற்றமாட்டோம் எமக்கு சினிமா, மற்றும் விளையாட்டுத்துறை வீரர்களே முன்னுதாரணப் புருஷர்கள்” என்ற தோற்றப்பாட்டில் நடந்து கொள்வதானது உண்மையில் அல்லாஹ்வின் தூதரையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் புறக்கணித்து நடக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும், அத்தோடு நபி (ஸல்) அவர்களது வழிமுறைக்கு மாற்றம் செய்வது அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விடயம் என்பதை தற்போதையை வாலிபர்கள் உணர்வதற்கு மறந்துவிட்டனர்.

மீசை வளர்க்கும் போது حمرة الشفة என்றழைக்கப்படும் மேல் உதட்டின் ஓரத்தில் காணப்படும் சிகப்புக் கோட்டைத் தாண்டாமல் இருப்பதைக் கவனத்தில் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

Azhan Haneefa

[ebayfeedsforwordpress feed=”https://www.ebay.com/itm/333490140473″ items=”கவித்தொகுப்பு”]

அல்லாஹ்விற்கு விருப்பமான இயற்கை ஸுன்னாக்களில் ஒன்று தான் மீசையை கத்தரிப்பது ஆனால் இன்றைய வாலிபர்களது நிலை நேர்மாற்றமாக உள்ளது. சினிமா நடிகர்களது பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றை அச்சொட்டாகப் பின்பற்றும் புது யுகத்தினர், மீசையை உதடுகள்…

அல்லாஹ்விற்கு விருப்பமான இயற்கை ஸுன்னாக்களில் ஒன்று தான் மீசையை கத்தரிப்பது ஆனால் இன்றைய வாலிபர்களது நிலை நேர்மாற்றமாக உள்ளது. சினிமா நடிகர்களது பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றை அச்சொட்டாகப் பின்பற்றும் புது யுகத்தினர், மீசையை உதடுகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *