அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 09

  • 34

ரியூகியை மெல்ல அழைத்தாள் அலைஸ் அவன் என்ன என்பது போல் தலையசைக்க மறுபடியும் தன் நன்றியை தெரிவித்து கொண்டாள்.

“அட கடவுளே.. இன்னுமா அதை நீங்க மறக்கல.”

“மறக்கிறதுக்கு அது என்ன சாதாரண செயலா என்னோட உயிரையே காப்பாற்றி இருக்கே”

“அது என்னோட கடமை. ஏன்னா உங்களால் மட்டும் தான் இந்த கான்மன் உலகத்துக்கு ஏற்படபோற மிகப்பெரிய ஆபத்தை தடுக்க முடியும்.” என்றான்.

“நீயும் உன்னோட அன்பு தங்கச்சியும் போதும் இந்த உலகத்தை அழிக்க.” என்றான் கியோன்.

“என்னது… உங்களுக்கு தங்கச்சி இருக்கா?”

“அவனை விடுங்க அவனை பற்றி நான் சொல்லுறேன். அவனுக்கு குடும்பம் என்னு சொல்லுறதுக்கு ஒரே ஒரு தங்கச்சி இருக்கிறா பேரு சோஃபி.”

“சோஃபி… ரொம்ப நல்ல பெயர். ஆனா நான் அவளை பார்த்ததே இல்லையே…”

“கவலை வேண்டாம்… நாம அடுத்து போக போற ஊரு தான் ரியூகியோட ஊரு அங்க போய் கண்டிப்பாக சோஃபியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவ ரொம்ப சுட்டி…. அப்படியே ரியூகியை போல.” என்றான் கியோன்.

“டேய்… உன்னை யாரு இதெல்லாம் கேட்டா…” என்று கியோனை முறைத்தான் ரியூகி.

மாஸ்டரின் இடத்தில் இருந்து மூன்று குதிரைகளில் பயணமாகி இருந்தனர். மூவரும் அலைஸ் கூட காலேஜ் ஃபெஸ்டிவலுக்காக குதிரை ஓட்ட பழகியது வசதியாக போய்விட்டது.

இப்போது சாப்பிட்டு கொண்டிருந்த போது, அலைசுடைய குதிரை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது.

“ஐயோ என்னோட குதிரை… அதை பிடிங்க… யாராவது….” அவர்கள் பிடிக்க முதலே அது ஓடி தப்பித்து விட்டது.

“எதுக்கு இவ்வளவு சோகம். அதான் நம்ம ரியூகி இருக்கானே. அவன் மேலே.. ஸாரி.. அவன் குதிரை மேலே போகலாமே” என்றான்.

ரியூகி கியோனை ஒரு பார்வை பார்த்தான்.

“ஓஹ் ஓஹ்…” என மெல்ல நழுவினான் கியோன். ரியூகி குதிரையில் ஏறி கொண்டு அலைசை பார்த்தான்.

“என்ன?”

“என் பின்னாடி ஏறிக்க…”

என்றதும் சற்றே தயக்கத்துடன் ஏறிக்கொண்டாள். குதிரையை ஓட்டியதும் அது கொஞ்சம் தடுமாற சட்டென அலைஸ் ரியூகி வயிற்றை பிடித்து கொண்டாள். கியோன் குதிரையில் அருகே வந்து,

“என்ன ரியூகி செட் ஆவிடுச்சா…” என்று கிண்டலடிக்க,

“டேய்.. உன்னை…”

என்று திட்டுவதற்கிடையில் குதிரையில் முன்னோக்கி சென்றான் கியோன். இவர்களும் தொடர்ந்தனர்.

தொடரும்…….
ALF. Sanfara.

ரியூகியை மெல்ல அழைத்தாள் அலைஸ் அவன் என்ன என்பது போல் தலையசைக்க மறுபடியும் தன் நன்றியை தெரிவித்து கொண்டாள். “அட கடவுளே.. இன்னுமா அதை நீங்க மறக்கல.” “மறக்கிறதுக்கு அது என்ன சாதாரண செயலா…

ரியூகியை மெல்ல அழைத்தாள் அலைஸ் அவன் என்ன என்பது போல் தலையசைக்க மறுபடியும் தன் நன்றியை தெரிவித்து கொண்டாள். “அட கடவுளே.. இன்னுமா அதை நீங்க மறக்கல.” “மறக்கிறதுக்கு அது என்ன சாதாரண செயலா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *