அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 11

  • 10

“ரியூகி…”

“சோஃபி. நீயா…” ஆச்சர்யத்தை முழுங்கி கொண்டே இருவரும் ஒன்று சேர

“நீ என்ன பண்ணுறே இங்கே…?”

என்று கேட்டுக்கொள்ள அதே நேரத்தில் கியோனும் அலைசும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இருவருக்கும் நடுவில் திருடன் மாட்டிக்கொண்டு முழிக்க அவனை ஆளுக்காள் மாறி மாறி அடித்து கொண்டே சண்டை போட்டனர்..

“போன நீ அப்படியே போய் இருக்கலாமே இத்தனை நாளா எங்க போய்ட்டே?”

“நான் போனது இருக்கட்டும் நீ இந்த சந்தையில் என்ன காட்சி இது உன்னோட வயசென்ன உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை”

ஐயே.. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை.. எனக்கு பதினெட்டு வயசாகுது.. புரிஞ்சிதா… பதினெட்டு

என்று அழுத்தமாக சொன்னாள். சோஃபி திருடனுக்கு ஒரு அறை போட்டு விட்டு,

“எனக்கு நீ சின்ன தங்கச்சி தான்.”

“ஒன்ன”

என்று கோபமாக வந்து பாசமாக அண்ணனை கட்டி அணைத்து கொண்டே

“எங்க நீ வராம இருந்துடுவேயொன்னு பயந்துட்டேன் தெரியுமா?”

அப்போது நழுவ பார்த்த திருடனை பிடித்த கியோன் அந்த பாட்டியும் அந்த இடத்துக்கு வர,

“இந்தா பாட்டி உன்னோட பை… இவனை நான் தான் பிடித்தேன்.”

என்று பொய்யாக கூறினான். அந்த பையை பறித்து கொண்டே,

“என் கிட்ட கொடு உன் மூஞ்சியும் மொகர கட்டையும்” என்றபடியே பாட்டி விசுக் விசுக் என்று நடந்தார்.

“இந்த பாட்டி கூட நம்பறா இல்லியே!” என்று வருத்தப்பட,

“சரி சரி… வா… போகலாம்.” என்று எல்லோருமாக ரியூகி வீட்டுக்கு சென்றனர்.

ஆயா உணவு பரிமாற நால்வரும் சாப்பிட்டு கொண்டே பேச்சை ஆரம்பித்தனர்.

“நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம் அண்ணா…”

“ஆமா இந்த ரெண்டு வருஷத்தில் நீ கூட எவ்வளவு வளர்ந்திட்டே” என்றான் கியோன்.

“நீ கூடத்தான் அது சரி உன்னோட அக்கா சொய் என்ன பண்ணுறாங்க அவங்கள பார்த்து கூட ரொம்ப நாளாச்சு.” என்றாள் சோஃபி.

“சோஃபி… கியோன் உன்னை விட நாலு வயசு மூத்தவன். இவ்வளவு மரியாதை இல்லாம பேசற.” என கொஞ்சம் அதட்டுவது போலவே சொன்னான் ரியூகி.

“விடு ரியூகி… நாங்க நண்பர்கள் தானே” என கியோன் சொல்ல,

“எல்லாம் நீ கொடுத்த செல்லம்” என்றான் ரியூகி

“அது சரி.. இவங்க யாருன்னு இதுவரையில் சொல்லவில்லையே…” என்று அலைசை காட்டினாள் சோஃபி. அங்கிருந்து ஆயாவை ஒரு வேலையாக அனுப்பி விட்டான் ரியூகி,

“எதுக்காக இப்போ ஆயாவை கழட்டி விட்டே…”

“காரணம் இருக்கிறது. இவங்க யாரு தெரியுமா?”

“யாரு. உன்னோட கேர்ள் பிரண்டா…” என சோஃபி கேட்டதும் ரியூகிக்கும் அலைசும் புரையேறி விட்டது.

“ஐயோ… இது நம்ம இளவரசி… அலீஸியா…” என்றவன் நடந்தவற்றை சொல்லி முடித்தான்.

தொடரும்…….
ALF. Sanfara.

“ரியூகி…” “சோஃபி. நீயா…” ஆச்சர்யத்தை முழுங்கி கொண்டே இருவரும் ஒன்று சேர “நீ என்ன பண்ணுறே இங்கே…?” என்று கேட்டுக்கொள்ள அதே நேரத்தில் கியோனும் அலைசும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இருவருக்கும் நடுவில்…

“ரியூகி…” “சோஃபி. நீயா…” ஆச்சர்யத்தை முழுங்கி கொண்டே இருவரும் ஒன்று சேர “நீ என்ன பண்ணுறே இங்கே…?” என்று கேட்டுக்கொள்ள அதே நேரத்தில் கியோனும் அலைசும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இருவருக்கும் நடுவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *