அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 22

  • 9

அலைஸ் கண்களை திறந்து பார்த்தாள்.ஏதோ ஒரு குடிசை போன்ற வீடு அது.

“நா… நான் எங்க இருக்கேன்…”

என்று புலம்பிக்கொண்டே எழுந்தவள் கடைசியாக நடந்த சம்பவங்களை மீட்டினாள். அப்போது அவளை காப்பாற்றியவன் அங்குதான் இருந்து ஏதோ பழங்களை வெட்டி கொண்டிருந்தான். சட்டென எழும்பி உட்கார்ந்த அலைஸ்.

“ரொம்ப நன்றி…” என்று மட்டும் அவனிடம் சொன்னபோதே அவன் அலைஸ் பக்கமாக திரும்பினான்.

“ஓஹ்… எழுந்திடீங்களா.. நான் கவனிக்கவே இல்லை.. உங்களுக்கு தான் இதை தயார் பண்ணினேன்.” என்றவன் அந்த பழங்களை அவளிடம் நீட்டினான்.

“நன்றி.” என்று கூறி அவற்றை வாங்கியவள்.

“நான் இப்போ எங்க இருக்கேன்.” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

“இது என்னோட வீடுதான் ஆமா இந்த காட்டுப்பக்கம் தனியா வரக்கூடாதுன்னு உங்களுக்கு யாரும் சொல்லலியா..?” என்று கேட்டான். ஒரு சிறு மௌனத்துடன் அந்த பழத்தில் ஒரு துண்டை கடித்தாள்,

“உண்மையிலேயே எனக்கு தெரியாது.. மிஸ்டர்… மிஸ்டர்…”

“சின் கே… அதுதான் என்னோட பெயர்… ஆமா உங்க பேரென்ன.?” என்று கேட்டான் அவன்.

“அலீஸி… இல்ல அலைஸ்…” என்றால் சுருக்கமாக,

“ரொம்ப அழகான பெயர்… அப்படியே உங்களை மாதிரி.” என்றான் அவன்.

“நன்றி..”

“ஒரு மணி நேரத்தில் இத்தனை நன்றிகளா. ரொம்ப பிடிக்குமோ.” என்றான் சிலேடையாக. அவள் பதில் சொல்ல தடுமாறும் போது,

“இல்ல நன்றி சொல்ல ரொம்ப பிடிக்குமோ என்னு கேட்டேன்.” என்று சமாளித்தான் சின் கே.

********************************

மறுபுறம் நால்வரும் தெற்கு நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

“என்ன ஒரு மாதிரியாக இருக்கே இளவரசியை எண்ணியா?” என சோஃபி கேட்டாள். அவன் ஒன்றும் பேசவில்லை.

“அவனை விடு சோஃபி ஏற்கனவே அவன் மனசு குழப்பத்தில் இருக்கு…” என்றாள் கோரின்.

“அப்படி சொல்லுங்க இளவரசி. எப்போபாரு அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைச்சிக்கிட்டு.” என்று கியோன் சீண்டினான். அவனை கோபத்தில் முறைத்தவள்.

“அப்பறமா உன்னை கவனிச்சிக்கிறேன்.” இவர்களின் எந்த பேச்சையும் காதில் போட்டு கொள்ளாமல் அன்று அலைஸ் காதலை சொன்னதையும், அதற்கு அவன் கொடுத்த பதிலையும் எண்ணி எண்ணி வருந்தி கொண்டே ரியூகி நடந்தான்.

**********************************

சின் கேயின் வீட்டில் தான் அலைஸ் இன்னும் இருக்கிறாள்.

“அலைஸ் நான் கொஞ்சம் வெளியே போகணும் வீட்டில் தனியா இருக்குறதும் அவ்வளவு பாதுகாப்பில்லை. உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா என் கூடவே வரலாம்.” என்றான்.

“ந.. நானா… சரி..”

என்றவள் அவனுடன் வெளியேறினாள். தன்னை பற்றி எந்த உண்மையையும் வெளிப்படுத்தவில்லை. அவளால் ரியூகியின் எண்ணங்களை விட்டும் அகலவும் முடியவில்லை. அந்த எண்ணங்களில் வந்தவளை சின் கே அழைத்தான்.

“ரியூகி..”

“ரியூகியா.. அலைஸ்…”

“ஓஹ்.”

“உன்னை பற்றி இதுவரையில் ஒண்ணுமே சொல்லவில்லையே!” அவள் தயங்குவதை அவதானித்த சின் கே.

“சரி.. விடு… உனக்கு தோணும் போது சொல்லிக்கே. நான் என்னை பற்றி சொல்லிர்றேன்.

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த ஊர்லதான் இருக்கேன். அம்மா அப்பா. யாருன்னு தெரியாது. ஒருவேளை அவங்க இறந்திருக்கலாம். இல்லேன்னா என்னை பிடிக்காம விட்டுட்டு போய் இருக்கலாம்.” என்றதும் அலைஸ்.

“அப்படி ஏன் சொல்லுறீங்க. உங்களை போய் யாருக்காவது பிடிக்காம போகுமா.”bஎன்று கேட்டாள்.

“அப்போ உனக்கும் என்னை பிடிக்குமா?” என்று வார்த்தைகளால் அவளை மடக்கினான் சின் கே.

“இதுல என்ன இருக்கு எல்லாருக்கும் தான் அதுல எனக்கும் தான் நீங்க என்னோட உயிரை காப்பாற்றியவராச்சே” என்றாள்.

“ஓஹ் அப்படி என்கிறீர்களா?”

இருவரும் கலகலவென சிரிக்க திடீரென முகத்தை மூடிய ஒருசிலர் இருவரையும் சூழ்ந்து கொண்டனர். அலைஸ் பயத்தில் சின் கே பின்னாடி ஒளிந்து கொண்டாள்.

 

அலைஸ் கண்களை திறந்து பார்த்தாள்.ஏதோ ஒரு குடிசை போன்ற வீடு அது. “நா… நான் எங்க இருக்கேன்…” என்று புலம்பிக்கொண்டே எழுந்தவள் கடைசியாக நடந்த சம்பவங்களை மீட்டினாள். அப்போது அவளை காப்பாற்றியவன் அங்குதான் இருந்து…

அலைஸ் கண்களை திறந்து பார்த்தாள்.ஏதோ ஒரு குடிசை போன்ற வீடு அது. “நா… நான் எங்க இருக்கேன்…” என்று புலம்பிக்கொண்டே எழுந்தவள் கடைசியாக நடந்த சம்பவங்களை மீட்டினாள். அப்போது அவளை காப்பாற்றியவன் அங்குதான் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *