அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 26

  • 55

“வாங்க நீங்க தங்க வேண்டிய இடம் வந்திடுச்சு.” என்று கூறி சின் அவளை இறக்கினான்.

“இது என்ன இடம்”

“முதலில் என்னை மன்னிச்சிடுங்க… நான் ரொம்ப முக்கியமான வேலை ஒன்றிற்காக இந்த ஊருல ஒருத்தரை சந்திக்கணும். சடோவ் ஏஞ்செல்ஸ் கொஞ்சமும் நெருங்க வாய்ப்பே இல்லாத இடம் இந்த விபசார விடுதி தான்  உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லேன்னா வேற இடம் பார்த்துக்கலாம்.” என்றான்.

“இல்ல பரவால்ல நான் இங்கேயே தங்கி கொள்ளுறேன்.” என்று சொல்ல ஒரு பெண்ணிடம் அவளை பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான். அலைஸ் அங்கிருந்த பெண்களுடன் அளவளாவி கொண்டே சமையலறையில் டீ போட்டு வெளியில் எடுத்து வந்து குடிக்க எண்ணினாள். அங்கிருந்த பெண்களில் ஒருத்தி அவளை தடுத்து அவளே டீ போட்டு கொடுத்தாள். அந்த ஊருக்கு அப்போது தான் ரியூகி குழுவினரும் வந்திருந்தனர்.

“இந்த ஊருல எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க கிட்ட நயோமி பற்றி ஏதாவது தெரியுமா என்னு கேட்டுட்டு வர்றேன்.” என்று புறப்பட்டான் ரியூகி.

அவனும் சரியாக அதே விடுதிக்குள் நுழைந்தான். அந்த விடுதி பெண்களுக்கு ரியூகியை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் ஜாடையால் அவனை அழைத்தார்கள். அப்போது கையில் டீ கப்புடன் அலைஸ் செல்வதை எதேச்சையாக கண்டுகொண்டான் ரியூகி. பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தான்.

“அலைஸ்! இவளுக்கு இந்த இடத்தில் என்ன வேலை.” என்றெண்ணி அவளை பின் தொடர்ந்து சென்றான்.

“அலைஸ்!” என்று அழைக்க திரும்பி பார்த்த அவள் அதிர்ச்சியில் கையில் இருந்த கப்பை நழுவ விட்டாள்.

“ரி…ரி… ரியூகி”

“அலைஸ்… இது நீதானே. இந்த இடத்தில் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே அலைஸ்..?” என்று கேட்டான். அவள் தட்டு தடுமாறி ஏதோ சொல்ல வருவதற்குள் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான் ரியூகி. அவள் கன்னங்களும் உதடுகளும் சிவந்து விட்டன. சற்று இடைவெளி கிடைக்க அலைஸ் “ரியூகி !”என்று மெல்ல மொழிந்தாள். சற்று நேர அமைதியின் பின்னர் ரியூகியே பேசினான்.

“நீ என்னை நேசித்த போது நான் அதை புரிஞ்சிக்கல்ல. இப்போ நான் புரிஞ்சிக்கிட்டு உன்னை நேசிக்கிறேன். இப்போ என்னை ஏத்துக்குவியா அலைஸ்.” அவள் அழுதுகொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டே.

“என் மனசில உன்னை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை…” என்றாள்.

“சரி வா போகலாம் எல்லோரும் நமக்காக காத்திருக்காங்க…” என்றான்.

சற்று தயங்கியவள், “இப்போ என்னால வர முடியாது” என்றாள்.

“ஏன் முடியாது?”

“சின் கே வந்ததும் போகலாம்.” என்றாள்.

“அது யாரது சின் கே?” அவள் நடந்த அனைத்து விடயங்களையும் கூற,

“நாம போகலாம்… இங்கு சொல்லிட்டு போவோம் அங்க எல்லோரும் உன்னை பார்க்க ஆவலா இருக்காங்க… அவன் வந்ததும் இங்க கேட்டுட்டு வந்து சேரட்டும். இந்த ஊருல தானே இருக்க போறோம்.” என்றான். இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

தொடரும்……
ALF. Sanfara.

“வாங்க நீங்க தங்க வேண்டிய இடம் வந்திடுச்சு.” என்று கூறி சின் அவளை இறக்கினான். “இது என்ன இடம்” “முதலில் என்னை மன்னிச்சிடுங்க… நான் ரொம்ப முக்கியமான வேலை ஒன்றிற்காக இந்த ஊருல ஒருத்தரை…

“வாங்க நீங்க தங்க வேண்டிய இடம் வந்திடுச்சு.” என்று கூறி சின் அவளை இறக்கினான். “இது என்ன இடம்” “முதலில் என்னை மன்னிச்சிடுங்க… நான் ரொம்ப முக்கியமான வேலை ஒன்றிற்காக இந்த ஊருல ஒருத்தரை…

5 thoughts on “அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *