அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 27

  • 56

சின் கே அங்கு வந்து பார்த்த போது அலைஸ் இல்லை என்பதையும், வேறொரு ஆணுடன் அவள் சென்றுவிட்டதையும் அவர்கள் கூறிச்சென்ற இடத்தையும் அறிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கே சின் கே சென்றுவிட்டான். முதலில் அவனை கண்டு மகிழ்ச்சியோட அலைஸ் வரவேற்றாள்.

“அலைஸ்… நீங்க இங்க?”

என்று சந்தேகத்துடன் கேட்டவனுக்கு நடந்த விடயங்கள் அனைத்தையும் சொல்லி புரியவைத்தாள். சின் கே மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தும் அலைஸ் முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்காக பொறுத்து கொண்டான்.

“வாங்க எல்லோரும் சாப்பிடலாம்.” என்று கோரின் அழைக்க அவர்களின் வற்புறுதலின் பெயரில் சின் கே அவர்களுடன் இணைந்து சாப்பிட்டான்.

“ஓகே,பிரின்ஸஸ்! அப்போ நான் போய்ட்டு வரேன்.” என்று சொல்லி புறப்பட இருந்தவனை அலைஸ் தடுத்து நிறுத்தினாள்.

“நீங்க போகக்கூடாது சின் கே. “

“நீங்க சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திட்டீங்க இனி இந்த சின் கே உதவி உங்களுக்கு தேவைப்படாது” என்றான் வருத்தத்துடன்.

“அப்படியெல்லாம் சொல்லாதே, நான் ஆபத்தில் இருக்கும் போது எனக்கு உதவி பண்ணியிருக்கே. என் உயிரை காப்பாற்றி இருக்கே. நீ கண்டிப்பா எங்க கூட இருந்து எங்களுக்கு உதவ வேணும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே” என்று சொல்ல,

“கண்டிப்பா முடியாது”என்றான்.

அவன் காதலித்த பெண்ணை வேறொருவன் சொந்தம் கொண்டாடுவதை எப்படி பொறுத்து கொண்டு அவர்களுடன் இருக்க முடியும் என்றெண்ணினான். அவன் மௌனமாக இருக்க அலைஸ் கொஞ்சம் கம்பீர குரலில்,

“சின் கே! நான் கோன்மன் உலகத்தோட இளவரசி அலீஸியா. என்னோட கட்டளை பிரகாரம் நீங்க எங்களோட எங்க பயணத்தில் இணைந்து எங்களுக்கு உதவ வேண்டும்.” என்று சொல்ல,

சோஃபி “சபாஷ் அப்படி போடு” என்றாள்.

போவதற்கு திரும்பிய சின் கே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“அவ சொல்றது தான் சரி. நீ எங்க கூடத்தான் இருக்க வேண்டும்.” என்றாள் கோரின். கியோன் லேசாக ரியூகியிடம்,

“மச்சான் உனக்கு ஆப்பு கன்ஃபோர்ம் ஆயிடுகிச்சு.” என்று சொல்ல,

“வாயை மூடு. என்னோட அலைஸை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். நீயும் அதே போல என் தங்கையை யாருக்கும் விட்டு கொடுத்து விடாதே!”

என்று சொல்ல கியோன் அதிர்ச்சி அடைந்தான். தான் சோஃபியை காதலிப்பது ரியூகி அறிந்துள்ளான் என்பதை எண்ணி அடைந்த அதிர்ச்சி அது.

“நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால நான் இங்கேயே இருக்கேன்.” என்றான்.

“இன்னொரு முக்கியமான விஷயம், யாரும் இங்க என்னை நீங்க வாங்க போங்க என்னு கூப்பிடக்கூடாது.”என்று சொன்னாள்.

எல்லோரும் சேர்ந்து உடன்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த சத்திரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் இருந்தனர். கியோன் ரியூகி அறைக்கு சென்றான்.

“வா கியோன் எனக்கெப்படி தெரியும் என்றுதானே யோசிக்குறே? எனக்கு எல்லாம் தெரியும் . சோஃபிக்கு உன்னைவிட சிறந்த கணவன் கிடைக்கவே மாட்டான்.” என்றான்.

மிகுந்த மகிழ்ச்சி பொங்க கியோன் சோஃபி கிட்ட இதை கூற புறப்பட்டான்.

“ஒரு நிமிஷம் கியோன் அவ அழற மாதிரி நடந்துகிட்டே உன்னை உண்டு இல்லை என்னு பண்ணிடுவேன்.” என்று சொன்னான்.

“அவ்வளவு தானே அவளை எப்போதும் சந்தோசமா வெச்சிருப்பேன் ஏன்னா அவ என்னோட உயிர்.” என்று விட்டு வெளியே போனான் கியோன்.

அதன் பிறகு அலைஸை பார்க்கவென ரியூகி அவள் அறையை நோக்கி செல்ல சின் கேவும் அங்கு வர இருவரும் அவள் அறைகதவுக்கு முன்னால் சந்தித்து கொண்டனர்.

“இந்த நேரத்தில் நீ என்ன பன்ற இங்கே?” என ரியூகி கேட்டான்.

“அலைசுக்கு பாதுகாப்புக்கு வந்தேன்.”

“அதுக்கு தான் நான் இருக்கேன் .நீ போகலாம் என்றான் ரியூகி.

“அதை சொல்ல நீ யாரு? என்னை இங்க இருக்க சொன்னது அலைஸ் அவளை நீதானே அழவச்சே” என்றான் சின் கே.

“நீ ரொம்ப பேசுரே… நானும் அவளும் லவ் பண்றோம். எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். மரியாதையா எங்க வாழ்க்கையில குறுக்க வராம போய்டு.” என்றான் ரியூகி.

“என்னால உன்னை மாதிரி எல்லாம் இருக்க முடியாது.” இருவரும் சத்தமிட்டு வாய்க்கு வாய் பேச தடால் என கதவு திறந்தது.

“ரியூகி! சின் கே! ரெண்டு பேரும் என்ன பண்றீங்க?” இருவரும் தாங்கள் சண்டையிட்டதை காட்டிக்கொள்ளாமல் பிடரியில் கை வைத்து சமாளித்து சிரித்து கொண்டே,

“காற்று வாங்க வந்தோம்.”என்று பொய் கூறினர். அப்போது திடீரென அலைஸின் கையில் அந்த அம்புக்குறி தோன்றியது. மூவரும் அதிர்ச்சியில் அவள் கையை பார்த்தனர்.

தொடரும்……
ALF. Sanfara.

சின் கே அங்கு வந்து பார்த்த போது அலைஸ் இல்லை என்பதையும், வேறொரு ஆணுடன் அவள் சென்றுவிட்டதையும் அவர்கள் கூறிச்சென்ற இடத்தையும் அறிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கே சின் கே சென்றுவிட்டான். முதலில்…

சின் கே அங்கு வந்து பார்த்த போது அலைஸ் இல்லை என்பதையும், வேறொரு ஆணுடன் அவள் சென்றுவிட்டதையும் அவர்கள் கூறிச்சென்ற இடத்தையும் அறிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கே சின் கே சென்றுவிட்டான். முதலில்…

7 thoughts on “அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 27

  1. Right now it sounds like BlogEngine is the preferred blogging platform available right now. (from what I’ve read) Is that what you are using on your blog?

  2. This design is steller! You most certainly know how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job. I really loved what you had to say, and more than that, how you presented it. Too cool!

  3. Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! However, how can we communicate?

  4. I’ve learn several just right stuff here. Definitely worth bookmarking for revisiting. I surprise how much effort you put to create such a great informative site.

  5. Hey there! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My web site looks weird when browsing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to resolve this issue. If you have any recommendations, please share. With thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *