நெறி‌தவறும் இளம் தலைமுறை

  • 9

காற்றுக்கு விலைகொடுத்து
கனவுலகில் சஞ்சரிக்கும் முதுகெலும்புகளே
அடியோடு துரந்திடு
உன் மாய விம்பத்தை

அக்கினிக்குஞ்சுகளாய் புறப்படு
தக்வா எனும் கட்டுபச்சாதனங் கொண்டு
வெளிச்சத்தைக் கண்டு
கூசிய கண் கொண்டு
எத்தனை நாள் வரை
வௌவாளாய் இருளில் மூழ்கிக்கிடப்பாய்

காலைக்கதிர் கண்களில் படிய
இறைக்காதல் உந்த
விழித்து சிந்திய விழிகள் போக
ஃபைட் எம்பிக்காய் நைந்து போன உள்ளத்தில்
வல்ல ரஹ்மானின் அருளை எட்டி உதைத்து
நீ சோம்பேறி களின் பட்டியலில் சேர்ந்து விடாதே

அன்று சாம்ராஜ்யங்கள் வென்று
மாறாது மிளிரும் ரத்தினங்களாய்
பத்தாஹ்கள் பலரை செதுக்கிச் செப்பனிட்டு வடிவமை
முஆத்களுக்கும் ‌‌முஹ்யத்தீன்களுக்கும் அன்று பஞ்சமில்லை
அறுசுவை உண்டி கொண்டு
தூக்கி காட்டும் ஒப்பனை கொண்டும்
களிம்புகளால் வர்ணமிட்டும் சதை கொண்டு பிழைக்கும்
சில மாக்காள் கண்டு
எம் உயிருக்கொப்பா மாநபி வழியதுவை மறந்தது ஏனோ

சுய அடையாளத்தை அடகு வைத்து
ஜாஹிலிய்ய இருளின் முகமூடிகயை
கிழித்தெறிந்து விழித்தெழு
ஈராறு வருடங்கள் தாணுண்டதை ஆசுவாசித்து
தன் வாணாள் முழுவதை இஸ்லாத்தின் கொடையாக்கிய
ஷாபி யின் உயிர்த்துடிப்புள்ள. ஆளுமைகள் எங்கே

பற்பல துறைகளில் தடம் பதித்த
உண்மை நாயகர்களாய் ஈருலகிலும் மிளிர்ந்து
மேற்கிடம் மண்டியிட்டு
குட்ட குட்டக் குனியும் இழிநிலை கண்டு
சிந்தனைப் புரட்சி செய்வோம்

காலம் நம் வசம் இஸ்லாத்தின் மறவர்களாய்
பாலையை‌ சோலையாக்கி நீதியின் தராசை
கை நழுவாது பற்றி கொண்டு மணம் பரப்புவோம்
வலைத்தளங்களெனும் மாய வலையின்
வன்வலையின் பிடிக்குள்
வந்து விழும் விட்டில் பூச்சிகளாய் மாறும்
கானல் காட்சிகள் இனி வேண்டாம்
தேடல்களுக்கும் அறிவாய்வுகளுக்கும்
உன்னை பட்டைதீட்டுவதிலும்
உன் கால முட்களை நகர்த்தி
மஹ்ஷரின் நிழலுக்கு
உன்பெயரையும் பதிந்து கொள்ள.

பாத்திமா சப்னா பஸ்லூன்
1ம் வருடம்
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம்

காற்றுக்கு விலைகொடுத்து கனவுலகில் சஞ்சரிக்கும் முதுகெலும்புகளே அடியோடு துரந்திடு உன் மாய விம்பத்தை அக்கினிக்குஞ்சுகளாய் புறப்படு தக்வா எனும் கட்டுபச்சாதனங் கொண்டு வெளிச்சத்தைக் கண்டு கூசிய கண் கொண்டு எத்தனை நாள் வரை வௌவாளாய்…

காற்றுக்கு விலைகொடுத்து கனவுலகில் சஞ்சரிக்கும் முதுகெலும்புகளே அடியோடு துரந்திடு உன் மாய விம்பத்தை அக்கினிக்குஞ்சுகளாய் புறப்படு தக்வா எனும் கட்டுபச்சாதனங் கொண்டு வெளிச்சத்தைக் கண்டு கூசிய கண் கொண்டு எத்தனை நாள் வரை வௌவாளாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *