பறைசாட்டவா? படுத்துறங்கவா?

  • 7

ஓரிரவு தொலைந்து போனதால்
இட்டுக்கட்டப் பட்டார் அன்னை ஆயிஷா…
அல்லாஹ்வின் கட்டளையை வயிற்றில் சுமந்ததால்
இட்டுக்கட்டப் பட்டார் அன்னை மரியம்…

மக்கிப்போன மனிதமே
உக்கிப்போன உணர்வுகளே
சிக்கிக் கொண்டேன் நானும்
முக்கிவிட்டனர் வீண் கதைகளில் எனை…

யான் பத்தினி
யான் பரிசுத்தவாளி
யான் கபடமற்றவளென
யாவரின் வீட்டுக்கதவுகளிடமும்
யாசகனாய் பறைசாட்டவா??

பேசுவோன் பேசட்டும்
பெண்ணாப் போண்சேயென
பேதையிவள் நாற்சுவருள்
பேதலித்துப் படுத்துறங்கவா?

பறைசாட்டவும் மாட்டேன்
படுத்துறங்கவும் மாட்டேன்
பலியாகவும் மாட்டேன்
பங்கப்படவும் மாட்டேன்

மெய்யாகவென்றை
மெதுவாய்ச் சொல்லிவிட்டுக்
கடக்க நினைக்கிறேன்
எனதான வாழ்வுதனில்
நடந்தேறியதோர் கெட்ட கனவாய் இதை….

கேளும்…. எவர்கள்
ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது
அவதூறு செய்கிறார்களோ – அவர்கள்
இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்
இன்னும் கடுமையான வேதனையுமுண்டு.

இன்னொன்று… எவர்கள்
கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி
அதை நிரூபிக்க நான்கு
சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ
அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள்
பின்னர் அவர்களது சாட்சியத்தை
ஏற்றுக் கொள்ளாதீர்கள் எக்காலத்திலும்
நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

இதையும் கொஞ்சம்… கேளும்
சகித்துக் கொள்வதே நல்லது
நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில்
அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புக் கோருகிறேன்.

என்னோடு கரம் கோர்த்து
எனக்காய் கரமேந்தி
என்னிறைவனிடம் மன்றாடிய
என் சொந்தங்களே…

என் பின்னோடு முகங்கோணி
என்னவமானத்துக்காயுழைத்த
என் பந்தங்களே…

எனக்காய் அழுத
எனக்காய் பிரார்த்தித்த
என் அன்பன்களே…

உற்றாரே… உறவினரே…
அன்பர்களே… நண்பர்களே…
மனிதம் களைந்த மனிதவர்க்கமே…

யாவருக்கும் கோடான கோடி நன்றிகள்…
இன்முகமோ வன்முகமோ
திண்ணமாய் சந்திப்போம்
திட்டமான மஹ்ஷர் பெருவெளியினிலே…

சாந்தியுடன் சிலரையும்
கேந்தியுடன் சிலரையும்
நீதிக்காய்………….

உடைக்கப்பட்ட உள்ளத்துடனும்
வதைக்கப்பட்ட வதனத்துடனும்
இவள்

Sheefa Ibraheem
3rd year
SEUSL

ஓரிரவு தொலைந்து போனதால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை ஆயிஷா… அல்லாஹ்வின் கட்டளையை வயிற்றில் சுமந்ததால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை மரியம்… மக்கிப்போன மனிதமே உக்கிப்போன உணர்வுகளே சிக்கிக் கொண்டேன் நானும் முக்கிவிட்டனர் வீண் கதைகளில்…

ஓரிரவு தொலைந்து போனதால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை ஆயிஷா… அல்லாஹ்வின் கட்டளையை வயிற்றில் சுமந்ததால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை மரியம்… மக்கிப்போன மனிதமே உக்கிப்போன உணர்வுகளே சிக்கிக் கொண்டேன் நானும் முக்கிவிட்டனர் வீண் கதைகளில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *