நட்பு

  • 11

கணப்பொழுதுகள் ரணப்பொழுதுகளாய்
மாறும் வேளை
சுயநலம் பாரா உள்ளமுடன்
ஈமானிய உரமூட்டும்
நட்பு தேவை
அதுவே நமக்கின்று தேவை

தவறான வழியில் நாம் செல்ல – அதைத்
தடுத்து நிறுத்தும் நட்பு தேவை
நன்மைகள் பல நாம் செய்ய – அதைத்
தட்டிக் கொடுக்கும் நட்பு தேவை

தோழமை எனும் சங்கிலியால்
தோள் கொடுக்கும் நட்பு தேவை
அதுவே தோல்வியின் பாடமதை
கற்றுக் கொடுக்கும் நட்பு தேவை

உலக லாப நோக்கமின்றி
உறவாடும் நட்பு தேவை
அதுவே படைத்தவன் அல்லாஹ்விற்காய்
அன்பு கொள்ளும் நட்பு தேவை

நாகரிக உலக மோகமதில்
மூழ்கிடாத நட்பு தேவை
அதுவே நாளைய சமூகத்தின் விடிவுக்காய்-பல் சிந்தனைகள்
விதைக்கும் சீரிய நட்பு தேவை

மறுமையெனும் வீட்டினிலே
மஹ்ஷரெனும்  மைதானமதில்
அர்ஷின் நிழலினிலே
இளைப்பாறும் நட்பு தேவை
அதுவே நமக்கென்றும் வெற்றி!!

நாம் கொண்டுள்ள நட்பை
ஒரு கணம் சிந்தித்து அதை
அல்லாஹ்விற்காக அமைத்து ஈருலகிலும்
வெற்றி பெற வல்லவன்
அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!
இன்ஷா அல்லாஹ்

J.Noorul Shifa
2nd Year
SEUSL

கணப்பொழுதுகள் ரணப்பொழுதுகளாய் மாறும் வேளை சுயநலம் பாரா உள்ளமுடன் ஈமானிய உரமூட்டும் நட்பு தேவை அதுவே நமக்கின்று தேவை தவறான வழியில் நாம் செல்ல – அதைத் தடுத்து நிறுத்தும் நட்பு தேவை நன்மைகள்…

கணப்பொழுதுகள் ரணப்பொழுதுகளாய் மாறும் வேளை சுயநலம் பாரா உள்ளமுடன் ஈமானிய உரமூட்டும் நட்பு தேவை அதுவே நமக்கின்று தேவை தவறான வழியில் நாம் செல்ல – அதைத் தடுத்து நிறுத்தும் நட்பு தேவை நன்மைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *