குரங்கு மனசு பாகம் 15

  • 23

இரவு நேரம் எங்கும் நிசப்தம் பேச ஏதோ உம்மாவின் வற்புறுத்தலினால் இரண்டு தோசைகளை விழுங்கிவிட்டு நேரகாலத்துடனே கட்டிலுக்குச் சென்றான் அதீக். ஆயினும் தன் காதலின் தோல்விக்கு காரணமாயிருந்த  தன் தொழில் மீது அவனுக்கு வெறுப்புவரவே தூங்க முடியாமல் தவித்தான். சர்மியின் வார்த்தைகள் அவனை வலிக்கச் செய்தன.

“ஏன் அவள் அப்படி செய்தாள்?”

என்ற வினாவுக்கு விடை தெரியாமல் கண்ணீர் விட்டழுதான்.

“சும்மா தானேடீ இருந்தன். வழியா வந்து லவ் பண்ணிட்டு எங்க உம்மா விருப்பம் தான் என் விருப்பம்னு சொன்னா எப்புடி தாங்கிப்பன்? ஏன்டீ இந்த வேல பண்ணினாய்?”

தனியாகப் புலம்பிக் கொண்டிருந்த அதீகின் வலிகளுக்கு ஒத்தடமாக அந்த இரவு இருக்காவிட்டாலும், தன் வாழ்க்கை போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்டான். ஆம்! காதல் தோல்வி கண்டால் தன் வாழ்வே தோல்வியென்று முடங்கிப் போகும் இளைஞர்களுக்கு மத்தியில் அதீக் கொஞ்சம் வித்தியாசமானவன் தான். இரவெல்லாம் கவலை தீர அழுதவன் அந்த இராப்பொழுதோடு தன் கவலைகளுக்கு முடிவு கொடுத்தவனாய் காலையாகும் முன்னே விழித்துக் கொண்டான். தன்னை தயார்படுத்திக் கொண்டு வெளியிறங்கிப் போக தன் திட்டங்கள் குறித்து யாருக்கும் சொல்லிக் கொள்ளவில்லை.

மாறாக இங்கு அதீகை விட பன்மடங்கு கவலையில் ஆழ்ந்த சர்மியால் காலையைக் கண்டும் கண் விழிக்க முடியவில்லை.

“ஐ யம் சொறி அதீக். இப்புடி எல்லாம் நடக்கும்னு நான் நம்பல்ல, எங்க உம்மா சார்பா நான் மன்னிப்பு கேக்குறன். மன்னிச்சிக்கடா, இந்த பெமிலிக்கு வந்து உனக்கு இருக்குற மரியாதய இழக்க தேவல்ல. நீ ஆம்புளடா. உன்னால நல்லா வர ஏலும்”

அதீகாகத் தன் தலையணையை உருவகித்துப் பேசிக் கொண்டிருந்தாள் சர்மி. மகளின் கவலைக்கு தான் காரணமாயிருந்தும் அதனைக் காட்டிக் கொள்ள விரும்பாத தாய் ராபியா, கட்டிலில் சுருண்டிருந்தவளைத் தட்டி எழுப்பினாள்.

“புள்ள எல்லாம் மறந்துட்டு எழும்புங்க… இப்படியே எத்துன நாளக்கி இருக்கப் போற? ஏதோ அல்லாஹ் நாடில்ல அவ்வளவு தான். எழும்புங்க.. எழும்புங்க.. ஊத்தின டீயும் ஆறப்போகுது.”

“எனக்கு தலவலிக்குதுமா. கொஞ்சத்துல எழும்புறன். நீங்க போங்க.”

“என்னசரி செஞ்சிக சர்மி. உனக்கு நாங்க தார செல்லம் கூட, உம்மா வாப்பா இருக்ககுல்ல உங்க இஷ்டத்துக்கு மாப்புள தேடி கொள்வீங்க, அப்புறம் என்னசரி சொன்னா பொத்திட்டு வந்துடும். நல்லா வளத்து வெச்சா மாப்புள ஒன்ன தேடித்தர மாட்டோமா என்ன?”

“சரி உம்மா போதும் பிளீஸ்..”

“எந்த உம்மாவும் தன்னோட புள்ள நல்லா இருக்கனும்னு தான் விரும்புவாங்க சர்மி, கைநிறைய காசு சம்பாதிச்சுற ஒருநல்ல எடத்துல தன்னோட புள்ள வாழ்க்க பட்டு அங்க நல்லா இருந்தா அது தான் சந்தோஷம்.”

“சரி உம்மா. இப்போ நான் தானே அவன முடிக்குற இல்லன்னு சொல்லிட்டனே. இனி இந்தக் கதை வேணாம்மா, விடுங்க பிளீஸ்..”

“அப்போ எழும்பி பழையபடி இரி சர்மி. ஏதோ பறிகொடுத்தவள் போல இருக்காத”

தனக்கானவனையே பறிகொடுத்து விட்ட நிலையில் உம்மாவின் வார்த்தைகள் அவளுக்கு நகைப்பாக இருந்தாலும், ஏதோ தாயுடனான பாசத்தின் விளைவாக தன்னை சுதாகரித்துக் கொண்டு இயல்பாயிருக்க முயற்சித்தாள் சர்மி. இப்படியே சர்மி அதீக் உறவு விசாலமாக சர்மிக்கு துணை தேடும் படலம் ஆரம்பித்து விடவே, அதீகின் எதிர்பார்ப்பும் வெற்றியளிக்கும் போல் தான் இருந்தது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

இரவு நேரம் எங்கும் நிசப்தம் பேச ஏதோ உம்மாவின் வற்புறுத்தலினால் இரண்டு தோசைகளை விழுங்கிவிட்டு நேரகாலத்துடனே கட்டிலுக்குச் சென்றான் அதீக். ஆயினும் தன் காதலின் தோல்விக்கு காரணமாயிருந்த  தன் தொழில் மீது அவனுக்கு வெறுப்புவரவே…

இரவு நேரம் எங்கும் நிசப்தம் பேச ஏதோ உம்மாவின் வற்புறுத்தலினால் இரண்டு தோசைகளை விழுங்கிவிட்டு நேரகாலத்துடனே கட்டிலுக்குச் சென்றான் அதீக். ஆயினும் தன் காதலின் தோல்விக்கு காரணமாயிருந்த  தன் தொழில் மீது அவனுக்கு வெறுப்புவரவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *