நித்யா… அத்தியாயம் -15

  • 8

”பிளீஸ்…. என்ன விடுடா…” கார்த்திக் கத்திக் கொண்டிருந்தான். அங்கு வந்த நெடியவன்,

”ஹேய்… கத்தாத…  இன்னிக்கி ஒன்ன விட்டுடறன்… ஆனா… நீ எனக்கு செல உண்மேகள செல்லணும்… அப்டி சொன்னா விட்டுடறன்…”

கார்த்திக்  அவனை அண்ணார்ந்து பார்த்தான். முகத்திலிருந்து வியர்வை வடியத் தொடங்கியிருந்தது. மெல்ல

”என்ன? ” என்றவனது முகத்தைப் பிடித்து,

”அடே… நீ கண்டிப்பா உண்ம தா சொல்லணும். புரிஞ்சுதா?” அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

”ம்… சொல்லு, ஒனக்கு நித்யா எங்கிற பொண்ண தெரியுமா?”

அந்தக் கேள்வியால் திடுக்கிட்டு அவனை கண்களில் பயத்துடன் நோக்கினான். அந்த சமயம்  கேள்வி கேட்டவனுடைய அழைபேசி அலறியது. அதைப் பார்த்தவன்.

”ஏய்…. உண்மய சொல்லு  இப்போ எனக்கு முக்கியமான விஷயத்துகாக வெளியில போறன். ஜாக்றத.” மிரட்டிவிட்டுச் சென்றவனையே பார்த்தபடி இருந்தான்.

****************************************

பவித்ரா கோபத்துடன் வினோத்தினது அழைபேசிக்கு மறுபடியும் அழைத்தாள். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

”சீ… இந்தாள்  என்ன போன எடுக்க மாட்டேங்குறாரு?”

மெல்ல முணுமுணுத்துக் கொண்டே   வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். பின்னாலே ஏதோ வாகனம் வண்டியை இடிப்பது கேட்கவே மீண்டும் கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள். காரிலிருந்து  எட்டிப் பார்த்தவனது முகம் தெரியவே அவளது எரிச்சல் கூடியது.

”பவித்ரா… என்ன போன் பண்ணீருந்த? வண்டிய ஒரமாக நிறுத்து….”

வினோத் அவனது காரை ஓரமாக நிறுத்தி விட்டு,  பார்க்கும் போது  அவளும் அவனருகே நின்றுகொண்டிருந்தாள்.

”ஹாய் பவித்ரா… என்ன விசயம்?”

அவனையே சற்று நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முன்பு கையசைத்து,

”என்ன பவித்ரா… சும்மா பாத்துகவா நீ வரச்சொன்ன? ” அவனது கேலிப் பேச்சு உறைக்கவே,

”அது… அப்படியொன்னுமில்ல…”

”ஓஹோ… அப்ப சொல்ல வேண்டியது தானே?” அலட்சியமாகக் கூறியவனை அடித்து நொறுக்க வேண்டும் போல கோபம் கொந்தளிக்கவே,

”நீங்க ஏ பொய் சொன்னீங்க?”

கூச்சலிட்டவளை ஒருகணம் பதற்றத்துடன் பார்த்தான்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”பிளீஸ்…. என்ன விடுடா…” கார்த்திக் கத்திக் கொண்டிருந்தான். அங்கு வந்த நெடியவன், ”ஹேய்… கத்தாத…  இன்னிக்கி ஒன்ன விட்டுடறன்… ஆனா… நீ எனக்கு செல உண்மேகள செல்லணும்… அப்டி சொன்னா விட்டுடறன்…” கார்த்திக்  அவனை…

”பிளீஸ்…. என்ன விடுடா…” கார்த்திக் கத்திக் கொண்டிருந்தான். அங்கு வந்த நெடியவன், ”ஹேய்… கத்தாத…  இன்னிக்கி ஒன்ன விட்டுடறன்… ஆனா… நீ எனக்கு செல உண்மேகள செல்லணும்… அப்டி சொன்னா விட்டுடறன்…” கார்த்திக்  அவனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *