எனக்கான நீ

வா தோழி தோழி… அன்புத் தோழி
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஏகப்பட்ட ஒற்றுமைகள்
உருவிலும் கருவிலும் கருத்திலும்
பண்பிலும் குணத்திலும்
”இரண்டும் ஒன்று” நாம்

உன்னைப் பிரிந்த பின்பு தானே
என்னைத் தொலைத்ததை உணர்ந்தேன்!
உன்னைப் பிரிந்த பின்பு தானே
உள்ளம் மிகவும் வலிக்கிறது!
வலியில் மனது கனக்கிறது!
இன்னும் நாளாக நாளாக
வலி மிகைக்கிறது!

தோழி… அன்புத் தோழி
உன்னோடு எடுத்த படங்களைப்
பார்க்கப் பார்க்க மனம் இனிக்கிறது!
இதயம் இதமாய் லயிக்கிறது!
மீண்டும் வராதா அந்த நாட்கள் என்றே
எந்தன் உள்ளம் ஏங்குகிறது!

நாம் இருவரும் நட்ட செடிகள் நலமா?
நட்பின் நல்ல சின்னங்கள் அவை
அது உனக்கும் எனக்கும் தான் தெரியும்!
செடிகள் வளரட்டும் உன் பார்வையில்
நட்பு தானே வளரும் என் பார்வையில்

தோழி… அன்புத் தோழி
கற்பனையிலாவது நாம் இருவரும்
கரம் கோர்த்து உரக்கச் சிரிப்போம்
ஊரெல்லாம் உலவுவோம்
அனைருக்கும் உதவுவோம்
அகம் மகிழ்வோம்
வா…… நீ நிதமும்
எந்தன் எண்ணத்தில்!!

சஸ்னா நிதார்.
BA SEUSL


Leave a Reply

Your email address will not be published.