விழிப்பூட்டல் நீயும் செய்தாய்!

  • 18

பாலகனே சுர்ஜித்
வாழ்வெனும் வீணையை
வாசிக்க முடியாமல்
சுருதி சேராமல்
தாளம் தப்பியதோ
உந்தன் மூச்சு சுவாசம்!
உன்னை உயிரோடு
மீட்க முடியாமல் பலரதும்
உணர்வுகள் உறங்கியதோ!

தந்தை வெட்டிய குழியில்
வீழ்ந்தாயோ நீயும்!
இதன் பழி யார் மீதோ…
இறை நியதி என்பதா
உனது துரதிஷ்டம் என்பதா
மனித முயற்சியின் முடியாமை என்பதா
விஞ்ஞான வளர்ச்சியின் வளராமை என்பதா
எது எப்படியோ…..

இருப்பவர்களது கண்களை திறந்து
இனி வரப்போவோர்களது விழிகளை
அகலத் திறந்து வைத்து
உன் கண்களை மூடிக் கொண்டாயே!
இரண்டு வயதில் இத்தனை வலிகள்!
எப்படி முடியும் இது என சிந்திக்கிறேன்!
எத்தனை கொடுமை!

பலரும் சிந்திய கண்ணீரும்
கதறல்களும் பிரார்த்தனைகளும்
வீணானதே!
மீண்டு வா மீண்டு வா
என்று தானே உள்ளங்களில்
தியான கோஷமிட்டோம்!
நீயும் மீளாத்துயரை
பரிசாய்த் தந்துவிட்டு
மீளாத் துயில் கொண்டாயோ!

இரண்டு வயது
மாணிக்க முத்து ஒன்று நீயும்
மனித சக்திக்கு மேல்
தெய்வ சக்தி ஒன்று உண்டென்று
நினைவூட்டல் செய்தாயோ!
முழு உலகையும் முயன்று
மூன்றே நாட்களில் முழுதாய்
விழிப்பூட்டல் நீயும் செய்தாய்!
உயிரோடு மண்ணரை வாழ்க்கையை
வாழ்ந்து சென்ற உத்தமன் நீ!
எல்லோர் மனங்களிலும்
மணம் வீசுவாய் அருமை சுர்ஜித்!
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS -2
பஸ்யால
இலங்கை

பாலகனே சுர்ஜித் வாழ்வெனும் வீணையை வாசிக்க முடியாமல் சுருதி சேராமல் தாளம் தப்பியதோ உந்தன் மூச்சு சுவாசம்! உன்னை உயிரோடு மீட்க முடியாமல் பலரதும் உணர்வுகள் உறங்கியதோ! தந்தை வெட்டிய குழியில் வீழ்ந்தாயோ நீயும்!…

பாலகனே சுர்ஜித் வாழ்வெனும் வீணையை வாசிக்க முடியாமல் சுருதி சேராமல் தாளம் தப்பியதோ உந்தன் மூச்சு சுவாசம்! உன்னை உயிரோடு மீட்க முடியாமல் பலரதும் உணர்வுகள் உறங்கியதோ! தந்தை வெட்டிய குழியில் வீழ்ந்தாயோ நீயும்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *