உறவுகளின் உதயம்

  • 10

பத்துத் திங்கள் சுமந்து
பத்தினி அவள் பாடுபட்டு
பாரினில் என்னை மிளிர செய்தவள்
பாசத்தின் உருவான அன்னை…

தொட்டதெல்லாம் நான் கேட்க
தொடர்ந்தும் வாங்கித் தந்து
தொலினிலே தினம் சுமக்கும்
தொட்டிலில் தொடங்கிய உறவே என்-தந்தை..

அடிக்கடி அடிபட்டு – எனக்காய்
அப்பாவிடம் திட்டு பட்டு
அன்பால் அரவணைப்பவன்
அன்புள்ள என் அண்ணன்…

அழகின் இளவரசி என்று
அனுதினம் எனை கொஞ்சி
அன்னையை மிஞ்ச நினைப்பவள்
அகிலத்தின் தாரகை என்- அக்கா…

குரும்புகளின் பிறப்பிடம்
கழகத்தின் முதலிடம்
குதுகளத்தில் தினம் நாம் – காரணம்
குட்டித் தங்கையும் சுட்டித் தம்பியும்…

கதைகளுக்கு கதாபாத்திரம் குடுத்து
கதாநாயகியாய் என்னையும் மாற்றிடும்
கருணையின் உறுவான
கலைஞர்கள் தாத்தா, பாட்டி..

குட்டிக் குடும்பம்
ஒற்றை கூட்டில்
சந்தோசம் மிகுதி
சஞ்சலங்கள் விரோதியாக…

உறவுகளை நினைப்போம்- தினம் அவர்
உணர்வுகளை மதிப்போம்..
உல்லாசப் பறவை போல
உலகினையெ ஆள்வோம்..

Asana Akbar
Seu of srilanka
Anuradhapura

பத்துத் திங்கள் சுமந்து பத்தினி அவள் பாடுபட்டு பாரினில் என்னை மிளிர செய்தவள் பாசத்தின் உருவான அன்னை… தொட்டதெல்லாம் நான் கேட்க தொடர்ந்தும் வாங்கித் தந்து தொலினிலே தினம் சுமக்கும் தொட்டிலில் தொடங்கிய உறவே…

பத்துத் திங்கள் சுமந்து பத்தினி அவள் பாடுபட்டு பாரினில் என்னை மிளிர செய்தவள் பாசத்தின் உருவான அன்னை… தொட்டதெல்லாம் நான் கேட்க தொடர்ந்தும் வாங்கித் தந்து தொலினிலே தினம் சுமக்கும் தொட்டிலில் தொடங்கிய உறவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *