படபடக்க வைக்கும் பதகளிப்பு

  • 60

எதிர்காலம் பற்றிய பயம் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. இறப்பு பற்றிய எண்ணம் அடிக்கடி ஊசலாடுகிறது. நிகழ்பவை அனைத்தும் பயங்கரமானதாக திகழ்கிறது. எதிலும் சந்தேகம். குறிப்பாக தான் இறந்தால் அல்லது நோயில் விழுந்தால் கணவன் அல்லது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று வேறொருவரை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்வாரோ என்ற அதீத பயம்.

எதைச் செய்தாலும் கை கழுவ வேண்டும் என்று தோன்றுகிறது. திரும்ப திரும்ப எத்தனை தடவைகள் கழுவினாலும் இலகுவில் திருப்தியளிப்பதில்லை. மீண்டும் மீண்டும் அதே எண்ணம் வருகிறது. என் செயல்கள் அர்த்தமற்றது என்று புரிகிறது. ஆனால் அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது நேரம் தண்ணீரிலே கரைகிறது

வகுப்பில் நன்றாகக் கற்கிறேன். மிக இலகுவாக விடையளிக்கிறேன். ஆனால் பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியாதுள்ளது. பரீட்சையின் போது நினைவில் நின்றது கூட மறதிக்கு இரையாகிறது. பரீட்சையை நினைத்தாலே பயம் , இனங்காண முடியாத பதற்றம்.

என்னிடம் பல திறமைகள் இருந்தும் பயனில்லை. மேடையேறியதும் இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. உலரல்களே வெளிவருகின்றன. நிதானத்தை இழக்கிறேன். இப்போது அதை நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. கருத்தரங்குகளில், வகுப்பில் ஆசிரியர் என்னிடம் கேள்வி கேட்பாரோ என்ற பயம், அனைவருக்கும் முன்னிலையில் அவமதிப்பாரோ என்ற பயம். இதனால் அமைதியை இழக்கிறேன்.

இங்கணம் இன்று பல பேரின் மனதில் குழப்பத்தை உண்டாக்கி நிம்மதியை இழக்க வைத்து கவலையில் மூழ்க வைக்கும் ஓர் உளநோயே என்சைட்டி (Anxiety) எனப்படும் பதகளிப்பு நோய். கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள், இருள்மயமான எதிர்காலம், பயத்துடன் கூடிய வாழ்க்கை போன்றவை பதகளிப்பின் படபடப்பின் வீரியத்தை பறைசாற்றுகின்றன. பதகளிப்பு ஏற்படுவதற்கு பல உடல், உளவியல் மற்றும் சமூக காரணங்கள் அடித்தளமிடுகின்றன. அதீத பயம் ( Phobia), பொதுவான பதகளிப்பு (General Anxiety), எண்ண மீள் சுழற்சி (OCD (obsessive compulsive disorder ) போன்றன பதகளிப்பின் ஒரு சில வகைகள்.

இவற்றை ஆரம்ப கட்டத்திலே அடையாளப்படுத்தி முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டால் முற்றும் முழுதாக மருந்துகள் இன்றி உளவளத்துணை மற்றும் ஹிப்னோடிஸம் , NLP போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். இருப்பினும் நோயின் ஆழம் மற்றும் தாக்கங்கள் அதிகரிக்கும் போது அதன் அடிப்படையில் மருந்துகளும் சிலவேளைகளில் அவசியப்படும். இதற்கான சரியான விழிப்புணர்வைப் பெற்று ஆரம்பத்திலே இனங்கண்டு முறையான சிகிச்சைகளைப் பெற வழிவகுப்பதன் மூலம் பல சிதைந்த உள்ளங்களை சீரமைக்க முடியும். இன்ஷா அல்லாஹ் !!!

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

எதிர்காலம் பற்றிய பயம் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. இறப்பு பற்றிய எண்ணம் அடிக்கடி ஊசலாடுகிறது. நிகழ்பவை அனைத்தும் பயங்கரமானதாக திகழ்கிறது. எதிலும் சந்தேகம். குறிப்பாக தான் இறந்தால் அல்லது நோயில் விழுந்தால் கணவன் அல்லது…

எதிர்காலம் பற்றிய பயம் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. இறப்பு பற்றிய எண்ணம் அடிக்கடி ஊசலாடுகிறது. நிகழ்பவை அனைத்தும் பயங்கரமானதாக திகழ்கிறது. எதிலும் சந்தேகம். குறிப்பாக தான் இறந்தால் அல்லது நோயில் விழுந்தால் கணவன் அல்லது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *