இன நல்லிணக்கம்

  • 7

இனமெனும் போர்வையினுள்
துவேசமெனும் ஆயுதத்தை
திட்டமிட்டு நுழைத் திட்ட
எதிரிகளின் சதிவலையில்
ஏமாளியாய் நாமின்றி
நல்லிணக்க சங்கிலியால்
பிணைத்திடுவோம் எம்மை – நாம்

இன, மத வேறுபாடு
இயற்கையிலே இருந்தாலும்
இரத்தச் செங்குருதி
ஒன்றுதானே! நம்முடலில்
இதை நாம் உணர்ந்திங்கு
இறைவழியில் வாழ்ந்திடுவோம்

பாரம்பரியம் நாமகற்றி
புதுமைகள் பல படைத்திங்கு
கரைந்து வாழச் சொல்லவில்லை – நாம்
கலந்து வாழச் சொல்கிறோம்

தேசமென்ற நேசமுடன்
தேசத்தின் விடிவுக்காய்
தேய்பிறையாய்த் தாம் தேய்ந்த
தலைவரது வரலாறு பல-சொல்லும் தருணமிது

நாட்டின் பல்துறைகள்
நன்றாய்த் தலைத்தோங்க
நல்லிணக்க நாதமது
நாற்றிசையும் ஒலித்தோங்க
நாமகற்றிடுவோம் – இன பேதமதை!

பொறாமைக் குணம் நாமகற்றி
சந்தேகக்கண் நாம் விலக்கி
வஞ்சகம் பாரா உள்ளமுடன்
வாழ்ந்திட்டால் – நாமிங்கு
வளர்த்திடலாம் தேசமதை!

சர்வதேச உலகினிலே
சாதனைகள் நாம் படைத்து
சமாதான மலரெங்கும்
புது மணம் வீசிடவே
இணைத்திடுவோம் – இணக்கமதை!

Jafeer Noorul Shifa
2nd Year
SEUSL

இனமெனும் போர்வையினுள் துவேசமெனும் ஆயுதத்தை திட்டமிட்டு நுழைத் திட்ட எதிரிகளின் சதிவலையில் ஏமாளியாய் நாமின்றி நல்லிணக்க சங்கிலியால் பிணைத்திடுவோம் எம்மை – நாம் இன, மத வேறுபாடு இயற்கையிலே இருந்தாலும் இரத்தச் செங்குருதி ஒன்றுதானே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *