உன் வாழ்க்கை, உன் திருப்தி, நீ வாழ்.

வாழ்க்கை அழகு, வாழ்வதும் அழகு இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய நியதி யாதெனில் தனக்கென எது கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் (Allow yourself to accept the reality) தனக்கு கிடைக்காததை நினைத்து வருத்தம் கொள்ளாது இருப்பதுமே.

முதலில் நீ உன்னை புரிந்து கொள்ள வேண்டும், நீ உன்னை நேசிக்க வேண்டும், நீ உன்னை மனப்பூர்வமாய் உணர வேண்டும்; வாழ்க்கை பேரழகாகும் வாழ்வதும் பேரின்பமாகும். நான் செலவிடும் ஒவ்வொரு வினாடியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும். தூய்மையான எண்ணங்களும் ஒழுக்கமான நடத்தைகளும் எப்போதும் நம்மிடத்தில் இருக்க வேண்டும். (Discipline brings prosperity) எந்த ஒரு விடயத்திலும், நிலையிலும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

மனிதர்களுக்கு மத்தியில் உயர்ந்த பண்புகளால் நன்னடத்தையால் நீ உயர்ந்து நில். உன் சொல் செயல் அனைத்திலும் வெற்றியை வெளிப்படுத்து. உனக்கு கிடைத்திருப்பது அழகான வாழ்க்கை அதை அழகாய் அன்பாய் வாழ்!.

ஜாஸிரா ஜுணைதீன்
கொழும்பு பல்கலைக்கழகம்
தொழிநுட்ப பீடம்.

Leave a Reply

Your email address will not be published.