குரங்கு மனசு பாகம் 16

  • 12

“உம்மா உம்மா..”

“சொல்லு அதீக் என்னா?”

“கொஞ்சம் வாங்களே..”

“ஏன்டா?  இங்க கொஞ்சம் வேல நீ வாயே அதீக்”

“உம்மா..”

“என்னடா?” பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த  தாயின் அருகே சென்று  தோள் பற்றிக் கொண்டவன்,

“உம்மா…”

“அதீக் என்ன விஷயம்பா சொல்லு..”

“இல்ல உம்மா உங்ககிட்ட சொல்லாம எல்லாம் செஞ்சி முடிச்சதுக்கு முதல்ல மன்னிச்சிக் கோங்க, என்னன்டா வார செவ்வாய்கிழம நான் வெளிநாடு போக போறன்மா.. எப்படியோ  நல்ல எடத்துல வேல கெடச்சிருக்கு.”

“அதீக் என்னடா சொல்ற?”

கையில் வைத்து கழுவிக் கொண்டிருந்த பாத்திரம் கீழே நழுவிவிழ, மகனின் முகத்தை கவலையுடன் பார்த்தாள் தாய் வாஹிதா.

“இல்லம்மா சர்மி வீட்டுல நான் உங்கள அவமதிச்சிட்டன். உங்க புள்ளக்கி இதுக்கு மேல ஆட்டோ டிரைவராக இருக்க முடியாதுமா. அன்னக்கி அந்த குடும்பம் கிட்ட ஒருநாள் என் புள்ள நல்ல எடத்துக்கு வரும்னு சொன்னீங்க தானேமா? நான் கைநிறைய சம்பாதிக்கனும் அப்போ தான் இந்த சமூகம் மதிப்பாங்க போய் வாரன்மா பிளீஸ்..”

அதீகின் கலங்கிய கண்களைத் துடைத்து விட்ட தாய் வாஹிதா,

“இந்த விஷயத்த இன்னமும் மனசுல வெச்சிட்டு இருக்கியா அதீக்?

“எப்படிமா மறக்க ஏலும்? நான் விரும்பின முதல் புள்ளம்மா அவள்.”

“சரிடா அவளே உன்ன வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் உனக்கு அவள் தேவல்ல. இந்த உம்மா நல்ல புள்ளயா தேடி உனக்கு முடிச்சி வெப்பன், கவல படாத அதீக்”

தன்னால் தன் தாய் வருத்தம் கொள்ளக் கூடாது என்பதற்காய் போலிச் சிரிப்பை வரவழைத்துக் கொண்ட அதீக், பரிவோடு தாயை அணைத்துக் கொண்டான்.

“இப்போ வெளிநாடு போறதுதான் முடிவா அதீக்?”

“போய் வாரன்மா..”

“இங்க ஏதாவது நல்ல வேலயா பாரேன்டா..”

“வேணும்னா கடை ஒன்னுல கூலிக்கு போகலாம். என்னபோல ஆள்களுக்கு இதவிட நல்ல வேல இங்க இல்லம்மா..

“ஹ்ம்ம்ம்..”

மகனின் வெளிநாட்டுப் பயணத்துக்கு தலையாட்டவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் வாய்மூடி இருந்த தாயின் முகவாட்டம் அதீகை கலங்கச் செய்தாலும், தன் முடிவை மாற்றிக்கொள்ள முடியவில்லை அவனால். அந்த ஞாயிறு தான் கிளம்புவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருக்க, தேவையான ஏற்பாடுகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தான் அதீக். அப்பொழுது தான் அவனைநாடி இன்னுமோர் கவலை செய்திகிட்ட

“இது எப்போடா?” கண்ணீருடன் அமர்ந்து கொண்டான்.

“கவல படாதடா மச்சீ.. இப்போ தான் உனக்கு அவள் இல்லயே. அந்த ஏமாத்துக்காரி எவனசரி முடிச்சி தொலையட்டும். நீ கவல படாதடா பிளீஸ்.”

“இவ்வளவு காலமா எனக்குன்னு இருந்தவள் வேற ஒருத்தன்கு போக எப்படிடா தாங்கிப்பன்?”

“அந்த கவல அவளுக்கு இல்லாதப்போ நீ மட்டும் ஏன் கஷ்டப்பட்ற அதீக்? உன் உம்மாவ நெனச்சி பாரு, ஒரே என்கிட்ட புலம்புறாங்கடா. நீ சிரிச்சி சந்தோஷமா பேசின நாள் கூட அவக்கு ஞாபகமில்லயாம், பாவம்டா உன் உம்மா. அவட சந்தோஷத்துக்காக சரி நீ நல்லா இருக்கனும்.”

“சரி விடு ரினோஸ்.. இனி எல்லாம் முடிஞ்சிடா”

சர்மிக்கு கலியாணம் சரி வந்து விட்டதாக தன் நண்பன் எத்திவைக்க தாங்க முடியாது துவண்டு போன அதீக், அதே நண்பனின் ஆறுதல் வார்த்தைகளால் தன்னை சமாளித்துக் கொண்டான். ஆனால் உண்மையில் தான் உயிராக நினைத்திருந்த அதீகின் இடத்துக்கு வேறொருவர் என்பது சர்மியால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாயிருக்கையில் கண்ணீர் வற்றிப் போகுமளவுக்கு அழுது முடித்திருந்தாள்.

“சர்மி… புள்ள.. மாப்புள ஏதோ உன்கூட பேசனும்னு சொல்றாங்களாம் கொஞ்சத்துல கோல் பண்ணுவாரு.. பழசு எல்லாம் மறந்துட்டு நல்லா பேசுமா” பதறிக் கொண்டே ஓடி வந்த வாஹிதா சொல்லி முடிக்கும் முன்னதாகவே, வீட்டு லேன்போன் “ஹோ” வென்று  சிணுங்கியது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“உம்மா உம்மா..” “சொல்லு அதீக் என்னா?” “கொஞ்சம் வாங்களே..” “ஏன்டா?  இங்க கொஞ்சம் வேல நீ வாயே அதீக்” “உம்மா..” “என்னடா?” பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த  தாயின் அருகே சென்று  தோள் பற்றிக் கொண்டவன்,…

“உம்மா உம்மா..” “சொல்லு அதீக் என்னா?” “கொஞ்சம் வாங்களே..” “ஏன்டா?  இங்க கொஞ்சம் வேல நீ வாயே அதீக்” “உம்மா..” “என்னடா?” பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த  தாயின் அருகே சென்று  தோள் பற்றிக் கொண்டவன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *