குரங்கு மனசு பாகம் 18

  • 39

“ஹலோ யாரு…?”

“நா… நா.. நான்” தனக்கானவளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவன் ஹிருதய வேகம் இரட்டிப்பாக, கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டான்.

“சொல்லுங்க யாரிது?”

“ஆஹ் நான் அதீக், சர்மியோட ஆட்டோ டிரைவர். உங்ககூட கொஞ்சம் பேசலாமா?” எதிர்தரப்பில் எந்தப்பதிலும் வரவில்லை.

“சரி நீங்க பேச தேவயில்ல, நான் பேசுறத மட்டும் கொஞ்ச நேரம் காது கொடுத்து கேட்டு கோங்க. பிளீஸ்.”

“ஹலோ தம்பி மறுபடி என் பொண்ணு வாழ்க்கையில வராதிங்க. அவளுக்கு கலியாணம் சரி  வந்திருக்கு” பொறுமையை இழந்த ராபியா கோவத்துடன் உரும,

“ஓஹ் கேள்வி பட்டனே..! ஆனா நான் இப்போ நீங்க சொல்ற ஆட்டோ டிரைவரா இல்ல, உங்க புள்ள இல்லாம போனதும் அந்த கீழ்த்தரமான தொழில தூக்கி போட்டுட்டு வெளிநாடு வந்துட்டன். ஆன்ட்டீ உங்க மேல தப்பு சொல்ல வரல்ல, வெறும் ஆட்டோ டிரைவருக்கு தன் பொண்ணு வாழ்க்கைப்பட எந்த உம்மாவும் விரும்ப மாட்டாங்க தான். ஆனா இப்போ நீங்க ஆசபட்ட போல உங்க புள்ளய நல்லா வெச்சி பாக்குற அளவுக்கு கைநிறைய சம்பாதிக்குறன். இன்னமும் அவ ஞாபகமா தான் ஈரன். நல்ல முடிவு ஒன்ன தாங்க ஆன்ட்டீ பிளீஸ்”

எந்தப் பதிலும் இல்லாமல் மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப் படவே, அதீக் சொன்ன விடயங்கள் எதையும் சர்மியிடம் சொல்லவில்லை தாய் ராபியா.

“உம்மா உம்மா டின்ருக்கு என்ன சமைக்குற? இன்னக்கி என்னோட சாப்பாடு தான் சொல்லுங்களே!”

சமையலறையில் நின்றுகொண்டு சர்மி கூப்பாடு போட ஏதோ சிந்தனையில் சோபாவில் அமர்ந்திருந்த ராபியாவுக்கு மகளின் கூவல் கூடக் கேட்கவில்லை.

“உம்மா.. என்ன யோசின? இவ்வளவு நேரமா கத்திட்டு ஈரன். பதில் சொல்லாம இருக்கீங்க?”

தாயின் அருகில் வந்தமர்ந்து கொண்டவள் தாயின் முகத்தை திருப்பி தன்னைப் பார்க்கச் செய்ய,

“என்னடா புள்ள?”

“இன்னக்கி டினர் நான் சமைக்குறன்னு சொன்னன்மா, என்ன யோசின உங்களுக்கு?”

“எதுவும் இல்லடா நான் சமைக்குறன், நீ சும்மா இரி.”

“ஐயோ உம்மா அதுதான் வேணாம்னு சொல்றன், கடைசியில மாமி வீடு போனதும் உங்க புள்ளக்கி ஒன்னும் தெரியான்னு சொல்வாங்க. இப்போ பிலால்கு ரொம்ப புடிச்ச இட்லி எப்புடி சமைக்குறன்னு சொல்லித் தாங்களேமா…”

“ஹ்ம்ம் சரிடா கண்ணு வா..” ஏதும் காட்டிக் கொள்ளாமல் மகளோடு சமையலறை போனாள் ராபியா.

“உம்மா”

“என்ன சர்மி..?”

“நான் மாமி வீடு போனதும் எப்புடி நடந்துக்கனும்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தாங்கமா என்ன இருந்தாலும் என் உம்மா போல இருக்க மாட்டாங்களே?”

“அப்புடி இல்லம்மா. உன் உம்மாவவிட நல்லா இருப்பாங்க பயப்புடாத சர்மி.”

“ஹ்ம்ம் நான் போனதும் நீங்க இந்த வீட்டுல தனிய இருக்க வேணாம். போய் வாப்பா கூட சிடீல இரீங்க ஓகேவா?”

“என்ன இது?  என்னமோ நாளக்கி போக போற போல பேசிட்டு?”

“இல்லம்மா உங்கள விட்டு போறதுதான் ரொம்ப கஷ்டம்.”

சர்மி அப்படி சொன்னதும் எதுவும் பேசாது தனக்குரிய வேலைகளால் இயங்கிக் கொண்டிருந்தாள் ராபியா.

“அப்பாடா ஒருமாதிரியா இட்லி சமைக்க பழகிட்டன்.  இது என் பிலாலோட பேவரிட்பூட்… பொடோ புடிச்சி வட்ஸ்அப் பண்ணனும். நாளைக்கு டினர் என்னோட பேவரிட்பூட் தான் சமைப்போம்.”

ஏதோ பெரிதாக செய்து விட்டதான நினைப்பில் பெருமூச்சு விட்டவள், பிலாலுக்கு அனுப்புவதற்காக அழகான தட்டில் அடுக்கி விதம்விதமாய் பொடோ பிடித்தாள்.

“தன்னோட புருஷனுக்கு பிடித்தமானவைகள முதன்மைப் படுத்தினா லெய்ப் லோங் ஹெபியா இருக்கலாம்”

மருமகனாய் மனதார ஏற்றவனுக்கு பிடித்தமான இட்லிச் சாப்பாட்டை பொடோ பிடித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்து ராபியா சொல்லவே,

“நிச்சயமா அப்புடி நடந்துக்குவன்மா”

என்று வாய்நிறைய சொன்னாள் சர்மி. இவ்வாறு அந்த அழகிய இராப்பொழுதிலே தாயும் மகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது தான் சர்மியின் வாழ்க்கைக்குள் இன்னுமோர் பேரிடி விழுமாறான செய்தி வந்து எட்டியது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“ஹலோ யாரு…?” “நா… நா.. நான்” தனக்கானவளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவன் ஹிருதய வேகம் இரட்டிப்பாக, கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டான். “சொல்லுங்க யாரிது?” “ஆஹ் நான் அதீக், சர்மியோட ஆட்டோ டிரைவர். உங்ககூட…

“ஹலோ யாரு…?” “நா… நா.. நான்” தனக்கானவளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவன் ஹிருதய வேகம் இரட்டிப்பாக, கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டான். “சொல்லுங்க யாரிது?” “ஆஹ் நான் அதீக், சர்மியோட ஆட்டோ டிரைவர். உங்ககூட…

2 thoughts on “குரங்கு மனசு பாகம் 18

  1. 415512 941007jobs for high school students – Search for Jobs on our website, we offer several excellent links towards the very best and biggest Portals to acquiring a Job as a high school student! 751255

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *