மன ஒருமைப்பாடு

  • 15

இன்று நம்மில் அதிகமானவர்களுக்கத் தேவையான ஓர் விடயமே மன ஒருமைப்பாடு எனும் அம்சமாகும். அந்தவகையில் இவ் மன ஒருமைப்பாடு என்பதால் கருதப்படுவது யாதெனில், எம்மில் உருவாகும் சிந்தனைகள், எண்ணங்கள், அபிலாஷைகள் போன்றவற்றை நாலா பக்கங்களிலும் சிதற விடாது அவற்றை ஓர் வரையறைக்குள் வைத்து கட்டுப்பாட்டுடன் அவற்றை பிரயோகிப்பதாகும். இன்று எம்மில் பெரும்பாலானவர்களிடத்தில் இவ் மன ஒருமைப்பாடு இல்லாததன் காரணத்தால் அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கும் தேவையற்ற பல பிரச்சினைகளுக்கும் முகங் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

எனவே நாம் எம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டுமென்றால் ஆரம்பமாக எம் சிந்தனைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் எம்மில் உருவாகும் சிந்தனைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த எத்தனிப்பது ஆபத்தானதாகும். எனவே அவற்றில் நன்மை பயக்கும் சிந்தனைகளின்பால் எம் முழுக்கவனத்தையும் செலுத்தும் அதேவேளை எவ்விடயத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமோ அவற்றிற்கு முக்கியத்துவமளிக்கும் பழக்கத்தையும் எம்மில் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வேலைகளும் நேர்த்தியாக முடிவதோடு மனமும் ஒருமுகப்படும்.

இன்னும் இயற்கைக் காட்சிகளை இரசித்தல், அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி சிந்தித்தல், இஸ்லாமியக் கடமைகளை திறம்படச் செய்தல், துஆ, திக்ர் போன்றவற்றில் ஈடுபடல், நல்ல நூல்களை வாசித்தல், பொருத்தமான பயனளிக்கக் கூடிய பொழுதுபோக்குகளில் ஈடுபடல் மற்றும் நேரமுகாமைத்துவத்தோடு கருமமாற்றல் போன்ற நடைமுறைகள் மூலமும் எம்மில் மன ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறாக எம்மில் மன ஒருமைப்பாடு குடிகொள்ளும் போது அது எம்மில் பல ஆளுமைப் பண்புகளை உருவாக்குவதோடு அதனூடாக எம்மில் நாமே பல தனித்துவமான அம்சங்களையும் உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இவ் மன ஒருமைள்ளாட்பின் மூலம் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாகவும் கூட பல பயன்களைப் பெற முடியும்.

(இன்ஷா அல்லாஹ்)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. [ Al-Ahzab – 21 ]

J.Noorul Shifa
SEUSL

இன்று நம்மில் அதிகமானவர்களுக்கத் தேவையான ஓர் விடயமே மன ஒருமைப்பாடு எனும் அம்சமாகும். அந்தவகையில் இவ் மன ஒருமைப்பாடு என்பதால் கருதப்படுவது யாதெனில், எம்மில் உருவாகும் சிந்தனைகள், எண்ணங்கள், அபிலாஷைகள் போன்றவற்றை நாலா பக்கங்களிலும்…

இன்று நம்மில் அதிகமானவர்களுக்கத் தேவையான ஓர் விடயமே மன ஒருமைப்பாடு எனும் அம்சமாகும். அந்தவகையில் இவ் மன ஒருமைப்பாடு என்பதால் கருதப்படுவது யாதெனில், எம்மில் உருவாகும் சிந்தனைகள், எண்ணங்கள், அபிலாஷைகள் போன்றவற்றை நாலா பக்கங்களிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *