நித்யா… அத்தியாயம் -18

  • 11

”நீ….நீங்களா? ”

அவனது வார்த்தைகள் தடுமாறின. முகமூடியைக் களைந்தவன் அவனருகே மெல்ல நடந்து வந்து,

”ஆமாடா…. நானே தா… நல்லா பாரு…. ஒன்ன பொலீஸ்கு குடுக்க போக பாக்ற…” கடினமாக மொழிந்தவனை நோக்கி,

”பிளீஸ்…. வினோத்… எங்கயும் என்ன கூட்டி போயிடாதீங்க… பெண்டாட்டி தவிச்சு போயிடுவா….” கண் கலங்கியவனை முறைத்துப் பார்த்து,

”ஹே…கார்த்திக் ஒன்ன பத்தி எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். நீ எப்படி வேஷம் போட்டேனும் தெரியும். ஆனா ஆனா அந்த கல்யாணியிட மொகத்துக்காக ஒன்ன விடுறன்” கார்த்திக் அண்ணார்ந்து அவனைப் பார்த்ததும்,

”என்ன பாக்ற..? ஓ…. என்னய போட்டு குடுக்கலாம்னு தானே அது நடக்காது” அங்கிருந்த ‘பட்டன் கமரா’வை அவனிடம் காட்டி,

”இதுல நீ சொன்னது எல்லாமே பதிவாயிருக்கு ஜாக்றத…” நாக்கை கடித்துக் கொண்டே அவனுக்கு எச்சரிக்கை விடுத்தான்.

”ஐயோ…. என்ன நம்பு… நா யார்கிட்டயும் சொல்ல மாட்டன் ஒங்கள.”

”ம்…. நீ சொன்னாலும் சொல்லிடுவ அதனால தா இது” அந்தக் கமராவை மறுதடவை அவனுக்குக் காட்டினான்.

”ம்…. சரி… நீ வா.. நானே கார்ல டிரோப் பண்றதுகு” வினோத் முன்னே செல்ல கார்த்திக் மெல்ல நடந்து அந்தக் காரினுள் ஏறினான்.

***********************************

வெளியே கார்ஹோன் சத்தம் கேட்டு ஓடிவந்தவள் கண்ட காட்சியால் சிலையானாள்.

”பவி…. பவி…. ஓடி வா… ஓ மச்சான்…… வந்திருக்காரு….” கூவிக்கொண்டே முன் கதவைத் திறந்து விட்டாள்.

”என்னது… மச்சானா?” ஏதோ வேலை செய்துகொண்டிருந்த பவித்ராவும் ஓடி வந்தாள். காரிலிருந்து கார்த்திக் இறங்கிய பின்னரே வினோத் இறங்கி நடந்து வீட்டை அடைந்தான். ஆனந்தக் களிப்பில் கல்யாணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள். நெஞ்சமும் விம்மிப் போயிற்று. ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

”நா…நா நெனச்சது நீங்க இதுகு பொறகு வர மாட்டீங்கன்னு… யாரோ ஒங்கள கடத்தினாங்க தானே கார்த்திக்…” வார்த்தைகள் மெல்லிய குரலில் வெளிவந்தது. அவன் வினோத்தை திரும்பிப் பார்த்து விட்டு,

”ஆமாடா… ஏதோ பணம் வேணுமாம்… அதான் கடத்திடானுக வா உள்ள போலாம்.” கைத்தாங்கலாக அவளை அழைத்துக் கொண்டே உள்ளே போனான். வெளியே நின்று கொண்டிருந்த வினோத்தை,

”நீங்களும் வாங்க… உள்ளுகு….” அவனும் வர,

”பவி காபி போட்டுடு வா…” வினோத்தை முறைத்துப் பார்த்து விட்டு,

”சரிக்கா” உள்ளே சென்றதும் அவனின் பக்கமாக கைகளைக் கூப்பி,

”ஒங்களுக்கு ரொம்ப நன்றி வினோத்… ஏ புருசன ஏகிட்டயே நீங்க சொன்ன மாதி சேத்துட்டீங்க….” கண் கலங்கியவளை,

”ஐயோ… அதெல்லாம் பெரிய விஷயமேயில்ல இதுகு பொறகு நடக்கும் பாருங்க அது தா பெரிய விஷயமே”கார்த்திக்கைப் பார்த்தபடி கூறி விட்டு,

”நா கெளம்புறன்… நெறய வேலயிருக்கு….”

”காபி….”

”அது பரவாயில்ல…இன்னொரு நாள் குடிச்சுகலாம்….” வினோத் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு,

”ஏங்க… அவரு நல்ல மனிசன் தானே….”

”ம்… ஆமா…ஆமா…..” கார்த்திக் நக்கலாகக் கூறினான்.

**************************************************

”ஹலோ…. ஒன்ன மீட் பண்ணலாமா?” அந்தக் குரல் ஓங்கியொலித்தது.

”ஓகே ஈவினிங் பார்க்ல நானும் ஓ கிட்ட சொல்ல தா இருந்ததே நம்ம செஞ்சதெல்லா அவனுக்கு தெரிஞ்சிருச்சி”

கார்த்திக் கூறிவிட்டுத் திரும்பியதுமே அங்கே பவித்ராவைக் கண்டு ஒரு கணம் நடுங்கினான்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”நீ….நீங்களா? ” அவனது வார்த்தைகள் தடுமாறின. முகமூடியைக் களைந்தவன் அவனருகே மெல்ல நடந்து வந்து, ”ஆமாடா…. நானே தா… நல்லா பாரு…. ஒன்ன பொலீஸ்கு குடுக்க போக பாக்ற…” கடினமாக மொழிந்தவனை நோக்கி, ”பிளீஸ்….…

”நீ….நீங்களா? ” அவனது வார்த்தைகள் தடுமாறின. முகமூடியைக் களைந்தவன் அவனருகே மெல்ல நடந்து வந்து, ”ஆமாடா…. நானே தா… நல்லா பாரு…. ஒன்ன பொலீஸ்கு குடுக்க போக பாக்ற…” கடினமாக மொழிந்தவனை நோக்கி, ”பிளீஸ்….…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *