குரங்கு மனசு பாகம் 20

  • 8

இங்கு தன் வாழ்க்கைத் துணைவன் அதீகா? பிலால் ஆஹ்? என்ற நிலையில் உள்ளம் நொந்தவளாய் அன்றைய இராப்பொழுது நகர, ஆதவன் தலைகாட்டும் வரை சர்மி நித்திரை செய்திருக்கவில்லை.

“ஏன்ட லெய்ப்ல திரும்ப கஷ்டம் தாராயே அல்லாஹ்! என் உம்மாவுக்காக அதீக் வேணாம்னு விட்டு போட்டன் தானே? இப்போ வேற ஒருத்தர் என் லெய்ப்ல வந்ததுக்கு அப்புறம் திரும்ப அதீக் நல்லம்னு உம்மா சொல்றாங்க. எப்படி அல்லாஹ் நான் இதுக்கு சம்மதிப்பன்? என் அதீக் நல்லா இருக்கனும் தான் ஆனா பிலால் போதும்… பிலால் எனக்கு போதும் அல்லாஹ். நான் அவனத் தான் கலியாணம் முடிக்கனும்.” தன் முடிவில் உறுதியாய் நின்ற சர்மி, தாய் ராபியாவின் திட்டங்கள் குறித்து உண்மையில் அறிந்திருக்கவில்லை.


“ஓம் தம்பீ. அவங்க முதல்லயே அப்புடி சொல்லி இருந்தா நான் வேணாம்னு தான் சொல்லிருப்பன். தொழில் இல்லாத ஒருத்தருக்கு என் புள்ளய குடுக்க முடியாது தம்பீ. நாங்க மன்னிப்பு கேட்டதா சொல்லுங்க.” ராபியா யாருடனோ அழைப்பில் மும்முரமாய் பேசிக்கொண்டிருக்க சத்தம் கேட்டு வெளியே வந்த சர்மி, விடயம் குறித்து ஊகித்துக்கொள்ள  கவலை வந்து அடைக்கவே தாங்க முடியாமல் உணர்ந்தாள்.

“யார் கூட உம்மா போன்ல பேசினீங்க?”

மகளைக் கண்டதும் தடுமாறிப் போன தாய், அடுத்தநொடியே தன்னை சுதாகரித்துக் கொண்டு,

“அந்த புரோக்கருக்கு தான் புள்ள. கோல் பண்ணி நல்லா ரெண்டு சொன்னன். இருந்தும் என் புள்ள தொழிலே இல்லாத ஒருவன் கையில போகனுமா? அது தேவல்ல புள்ள.

“உம்மா… போதும், இதுக்கு மேல பேச வேணாம்.” என்றுமில்லாதவாறு தன் குரலுக்கு மேலாக மகள் சர்மியின் குரல் உயர, ஒருகணம் நடுங்கிப் போனாள் ராபியா.

“நல்லா கேட்டுகோங்க, பிலால் இல்லாம வேற யாரயும் நான் கலியாணம் முடிக்க மாட்டன். இப்படியே இருந்துட்டு போனாலும் இதுதான் என் முடிவு” உம்மாவுக்கு எச்சரிக்கை விடுக்குமளவுக்கு தாயின்  செயற்பாடுகளால் சர்மியின் நிலை மாறிப்போயிருக்க, ராபியாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் இருந்தது. இங்கு மறுபக்கத்தில் ராபியா சொன்ன விடயங்களை பிலால் வீட்டில் அந்த புரோக்கர் எத்திவைத்திருக்க, சர்மியின் மொபைல் கணீரென்று சினுங்கியது

என்னடீ உன் மனசுல நெனச்சிட்டு இருக்க? நீ என்னயா விரும்பின? என் தொழிலயா? சொல்லு நீங்க சொல்ற டெய்ம் நாங்க தலையாட்டனும். நமக்கு என்னசரின்னா விட்டுட்டு போவீங்க. இது பொம்புளட குணம் தானே உன்கிட்டயும் இல்லாம இருக்குமா? இங்ககேளு,  உனக்கு என்ன தவிர வேற யாரயும் கலியாணம் முடிக்க ஏலாது. அப்புடி நடந்திச்சி அப்புறம் நான் யாரென்று புரியும்

விடயம் தெரியாத பிலால் சர்மி மீது கண்டபடி பொறிந்து விழ,

“பி..பி..பிலா.. பிலால் இங்க கொஞ்சம் கேளுங்க பெஸ்ட்டுக்கு” சர்மியின் பதிலை வாங்கிக் கொள்ளாமலே அழைப்பைத் துண்டித்தான்.

“எல்லாம் முடிஞ்சி உங்களால என் மானம் பறக்குது. பிலால் கூட நான் தான் தப்புன்னு சொல்றான். உங்களால அதீக், பிலால் எல்லோர்கிட்டவும் நான் கெட்டவளா போயிட்டன். வாழ்றத பாக்க பேசாம சாவனும் போல இருக்கு” தன் தாய் ராபியாவை சாடி விம்மி அழுதாள் சர்மி.

“புள்ள”

“பேச வேணாம்மா, போங்க… போங்க இங்கிருந்து நீங்க பேச வேணாம் என் கூட…”

“புள்ள அப்புடி இல்லடா நா… நான் என்ன சொல்றன்டா…”

“நீங்க எதுவும் சொல்ல வேணாம்” தாயின் மீது சீறிப் பாய்ந்தவள், ஓடிச்சென்று அறைக்கதவை அடைத்துக் கொண்டாள்.

“பு.. புள்ள.. சர்மி.. சர்மி.. சர்மி கதவ திற புள்ள ஏய் சர்மி பிளீஸ்டா சர்மி”

“நான் சாவுறன், நீங்க சந்தோஷமா இரீங்க…”

“வேணாம்டா தங்கம் பிளீஸ்மா. கதவ திற புள்ள”

“கத்திக் கத்தி தாய் ராபியா சோர்ந்து போன நிலையிலும், கதவு இன்னும் திறபடவுமில்லை, சர்மியின் புறமிருந்து எந்தப்பதிலும் வரவுமில்லை.

கதை தொடரும்…
Aathifa Ashraf

இங்கு தன் வாழ்க்கைத் துணைவன் அதீகா? பிலால் ஆஹ்? என்ற நிலையில் உள்ளம் நொந்தவளாய் அன்றைய இராப்பொழுது நகர, ஆதவன் தலைகாட்டும் வரை சர்மி நித்திரை செய்திருக்கவில்லை. “ஏன்ட லெய்ப்ல திரும்ப கஷ்டம் தாராயே…

இங்கு தன் வாழ்க்கைத் துணைவன் அதீகா? பிலால் ஆஹ்? என்ற நிலையில் உள்ளம் நொந்தவளாய் அன்றைய இராப்பொழுது நகர, ஆதவன் தலைகாட்டும் வரை சர்மி நித்திரை செய்திருக்கவில்லை. “ஏன்ட லெய்ப்ல திரும்ப கஷ்டம் தாராயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *