நித்யா… அத்தியாயம் -19

  • 11

கள்ளப் பார்வை கொண்டு அவளைப் பார்த்து,

”ஆ… பவி… எப்ப வந்த…” ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி மழுப்பினான். அவனை ஒருபார்வை பார்த்து விட்டு,

”ஆ… நா இப்பதா வந்தது இந்த உடுப்புகள காய வெக்க…”

”அப்படியா?” கைகளை நெஞ்சில் வைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே சென்றவனை சந்தேகத்துடன்,

‘ஏ… இவரு என்ன கண்டதும் இப்படி நடுங்குறாரு….’

”ம்… அவர போலோ பண்ணி பாக்கலாம்” அவனை பின் தொடர்ந்தாள். ஒதுக்குப் புறத்துக்கு வந்ததுமே சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மறுபடி அழைபேசியைத் தொட்டான். பவித்ரா கதவினிடுக்கால் அவனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் பின்னால் வந்து யாரோ தோளைத் தொடுவது போலுணரவே,

”அம்மா…” கத்தினவளைப் பார்த்து,

”அடி… நான் தா… என்ன நீ இங்க பண்ற?” சுற்றுமுற்றும் பார்த்து விட்டு,

”இல்லக்கா… அது வந்து… எனக்கு ஏதோ சத்தம் கேட்டிச்சு… அதான் வந்து பாத்துட்டு போலாம்னு.” என்று இழுத்தவளை,

”ம்… சரி…சரி… வா உள்ளுகு…” அவள் சென்றதும் மீண்டும் நோட்டம் விட்டாள். அவன் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறான் என்பது விளங்கவில்லை

”ஷிட்… நடுவுல இவ வந்துட்டாவே… யார் கூட பேசியிருப்பான்” முணுமுணுத்துக் கொண்டே பின்னறையை நோக்கி நடந்தாள்.

சற்று நேரத்தில்,

”கல்யாணி…. நா என்னோட பிரண்ட பாக்க வெளிய பொறப்படுற நீ நைட்கு காக்காத…” கார்த்திக்கின் இந்த வார்த்தைகள் பவித்ராவின் காதுகளிலும் விழுந்தது.

”ஏங்க… அப்போ டினருக்கு வீட்டுகு வர மாட்டீங்களா? கவனமா போய் வாங்க” சோகமாக வழியனுப்பினாள். அறைக்குள்ளிருந்த பவித்ரா தனது அழைபேசியை தடவினாள்.

”ஹலோ… வினோத் அண்ணா கார்த்திக் மச்சான் வீட்டிலிருந்து கெளம்பிட்டாரு நைட்கு கூட வரமாட்டாராம்”

”ஓ… அப்படியா விசயம் போகுது? பங்காளிய தேடி போயிருப்பாரு சரி டேங்ஸ் ”

”ஓகே…” அழைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு, ‘இங்க என்ன நடக்குதுன்னே புரியல… சீ…’ அங்கலாய்த்துக் கொண்டாள்.

****************************************

அந்த பூங்காவுக்கு பதுங்கிப் பதுங்கியே வினோத் நுழைந்தான். முகமூடி அணிந்திருந்தான். ‘ம்… அவனுகள என்ன இன்னோம் காணோம்.’ எண்ணிக் கொண்டிருக்கும் போதே யார் யாரோ அந்த இருட்டில் நடந்து வரும் ஓசை கேட்கவே ஓடிப் போய் புதரினுள் ஒழிந்து கொண்டான். வந்தவர்கள் புதருக்கருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

”அடே.. நம்மள பத்தி அவன் தெரிஞ்சு கொண்டுனு நா நெனக்கிறன் என்ன அவன் தா கடத்தி வெச்சிருந்தான்.” முதலாவதாக கார்த்திக்கின் குரல் ஒலித்தது.

”அப்படியா நீ ஏதும் ஒலறல்லயே?” இரண்டாவதாக ஒலித்த குரலைக் கேட்ட வினோதினது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

கள்ளப் பார்வை கொண்டு அவளைப் பார்த்து, ”ஆ… பவி… எப்ப வந்த…” ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி மழுப்பினான். அவனை ஒருபார்வை பார்த்து விட்டு, ”ஆ… நா இப்பதா வந்தது இந்த உடுப்புகள காய…

கள்ளப் பார்வை கொண்டு அவளைப் பார்த்து, ”ஆ… பவி… எப்ப வந்த…” ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி மழுப்பினான். அவனை ஒருபார்வை பார்த்து விட்டு, ”ஆ… நா இப்பதா வந்தது இந்த உடுப்புகள காய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *