மாற்றம் ஒன்றே மாறாதது

  • 14

என் ஈமானிய சகோதரிகளே!.பிறப்பும் இறப்பும் ஒருமுறை என்பது போல அவை இரண்டிற்குமிடைப்பட்ட வாழ்வும் ஒருமுறைதான். இறைவனால் அழகாய் படைக்கப்பட்ட நாம் அவன் எமக்களித்த வாழ்வை அவனுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஒவ்வொரு நொடிகளையும் பயனாகவும் பக்குவமாகவும் கழித்து கொண்டிருக்கின்றோமா? நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் எம் மரணத்தை நோக்கிய எட்டுக்கள் என்பதை நினைவில் கொண்டுள்ளோமா? இக்கேள்விகளுக்கு நாம் நம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள “ஆம் “ என்று தலையசைத்தாலும் எம் மனசாட்சி எங்கோ ஒரு மூலையிலிருந்து “இல்லை”என கைசேதப்பட்டு கூறுவது எம் காதுகளுக்கு கேட்காமலிருக்க சாத்தியமில்லை.

உண்மையில் இன்று நாம் ஒவ்வொரு நொடியையும் பொடுபோக்குத்தனமாகவும் மரணத்தை பற்றிய நினைவேயின்றி கழித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய நவீனமும் நாகரிகமும் எம் நேரத்தை வீணடிக்கவே உருவாக்கப்பட்டதாய் உலாவருகிறது. அவற்றில் ஒன்றுதான் நாம் அனைவரும் உயிருக்கு உயிராய் இல்லை இல்லை உயிருக்கும் மேலாய் நேசிக்கும் எம் கையடக்கத் தொலைபேசிகள். தாய் – பிள்ளை உறவு, கணவன் – மனைவி உறவு அனைத்தையும் விட அன்னியோன்யமாய் அந்த சடத்துடனான உறவுகள்.

இளைஞர்களும் யுவதிகளும் தம் வாழ்வை அந்த இலக்ட்ரோனிக் திரையினுள் தொலைத்து கொண்டிருக்கிறனர். அதிலும் ஆண்கள் வெளியே வேலைக்குச் செல்வதனாலும் சிலவேலைகளில் பிஸியாக திரிவதனாலும் அவர்களின் தொலைபேசி பாவனையை விட பெண்களாகிய நாம் வீடுகளில் அதிகமாய் அடிமைப்பட்டு கொண்டிருக்கிறோம். அவசரமாய் வீட்டு வேலைகளை முடித்துவிட்டோ அல்லது சிலவேளைகளில் அவற்றை அரைகுறையாய் செய்துவிட்டோ தொலைபேசியினுள் தேவையின்றி தொலைந்து போகின்றோம்.

அன்பின் உறவுகளே! சற்று சிந்திப்போம். அந்த தொலைபேசிகள் இல்லாது விடின் எம் வாழ்வு எவ்வாறு இருந்திருக்கும்?உண்மையில் அந்த வாழ்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும். என நான் எண்ணுகிறேன். இதை வாசிக்கையில் ”நாங்களும் இதை உணர்கிறோம். ஆனால் அதை தேவையின்றி பாவிப்பதை எவ்வாறு தவிர்ப்பது என்றுதான் எங்களுக்கும் விளங்குதில்லை” என நீங்கள் கூறுவது என் காதுகளுக்கு கேட்கின்றது. உண்மையில் நாம் மாற வேண்டும் என்று எண்ணி அதற்காய் முயற்சித்தால் மாத்திரமே இறைவன் மாற்றத்தை தந்தருள்வான்.

அதிலுள்ள வட்ஸ்அப், பேஸ்புக்களை குறிப்பிட்ட நேரம் ஒன்றை மாத்திரம் வைத்து பாவிப்போம். இறைவனிடம் அந்த அடிமைத்தனத்திலிருந்து மீள கையேந்துவோம். உண்மையில் அவை எம்மை இயக்குபவை அல்ல, மாறாக நாம் தான் அவற்றை இயக்குபவர்கள் என்பதை மனதில் கொள்வோம். தூங்க செல்ல முன் அடுத்த நாளை நாம் எவ்வாறு பயனுள்ளதாய் கழிக்கலாம் என திட்டமிடுவோம்.

அவற்றை அறவே பாவிக்ககூடாது என்பதல்ல. அந்த தொலைபேசிகள் எம் வாழ்வில் தொல்லை பேசிகளாய் மாறிவிடக்கூடாது என்பதுவே எனது ஆசையும் ஆர்வமும் ஆகவே, மாற்றம் ஒன்றே மாறாதது. இந் நொடியிலிருந்து எம் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிப்போம் எம் சிறந்த எதிர்காலத்திற்காய்.

ஹனா யூசுப்
கலை, கலாசார பீடம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

என் ஈமானிய சகோதரிகளே!.பிறப்பும் இறப்பும் ஒருமுறை என்பது போல அவை இரண்டிற்குமிடைப்பட்ட வாழ்வும் ஒருமுறைதான். இறைவனால் அழகாய் படைக்கப்பட்ட நாம் அவன் எமக்களித்த வாழ்வை அவனுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஒவ்வொரு நொடிகளையும் பயனாகவும் பக்குவமாகவும்…

என் ஈமானிய சகோதரிகளே!.பிறப்பும் இறப்பும் ஒருமுறை என்பது போல அவை இரண்டிற்குமிடைப்பட்ட வாழ்வும் ஒருமுறைதான். இறைவனால் அழகாய் படைக்கப்பட்ட நாம் அவன் எமக்களித்த வாழ்வை அவனுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஒவ்வொரு நொடிகளையும் பயனாகவும் பக்குவமாகவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *