நித்யா… அத்தியாயம் -21

  • 11

” என்ன நீ சிரிக்ற ? ” கோபத்துடன் கூறியவனைப் பார்த்து,

”நீங்க சொல்றது வேடிக்கயா இருக்கு… நானும் கண்டுபுடிச்சது தா இந்த விசயம்… அதுவல்ல இப்ப முக்கியம் எவிடன்ஸ் கெலக்ட் பண்றது தா… அத நா பாத்துகொள்றன்… எனக்கு இந்த கேஸ எப்படி சரி பொலீஸ்கு கொண்டு போகோணும்… அது தா முக்கியம்….”

பேயரைந்தது போல அவளைப் பார்த்து,

”இங்கபாரு… லூசுமாதி யோசிச்சி எந்த பிரயோசனமும் இல்ல… இத எங்கிட்ட விடு…”

”ஓ… அப்படி விட ஏலாது… நா இங்க வந்ததே இதுக்காக தா… புரிஞ்சிகோங்க…”

”சரி… அடுத்தகட்ட பிளேன் போட மொதல்ல நாம ஒரு விசயத்த பத்தி  யோசிக்கணும்… ” கண்களைச் சுருட்டி அவனைப் பார்த்தவள்.

”என்னது?”

”அது வந்து… நீ விக்னேஷ கவனி ஒபீஸ்ல புரிஞ்சுதா…. மத்தத அப்றமா பாப்போம்… ” பவித்ராவின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஊசலாடியது.

**************************

மறு நாள் காலையில் அலுவலகம் பிரயாணமானவளைப் பார்த்து

”பவி… நீ ஒபீஸ் விட்டு விக்னேஷ் கூட வந்துடு, இன்னிக்கி மச்சானுக்கு ஒரு முக்கியமான பயணமாம்….”

கல்யாணி கூறியதுமே,

‘என்னவாக இருக்கும் ‘ யோசித்தவளை நோக்கி  மீண்டும்,

”ஹே… நீ போ… என்ன யோசன?”

”அதுவந்து ஒன்னுமில்ல… சரி…”

அலுவலகத்தில் அன்று அதிகமான வேலைகள் அவளுக்கிருந்தது.  எனவே வீடு திரும்பத் தாமதமாகியது. கடிகாரத்தைப் பார்த்தவள் சற்று நடுங்கினாள். ‘ஐயோ…. மணி ஒன்பதாச்சு…. அக்காகு போன் பண்ணலாம்.’ அலைபேசியை எடுத்து கல்யாணிக்குத் தொடர்பை ஏற்படுத்தினாலும் அது செயலிழந்திருந்தது.

”சீ… இந்த டைம்ல பஸ்சும் இல்ல… என்ன செய்ய ?” முணுமுணுத்துக்கொண்டே பாதையில் நடந்தாள். பின்னால் ஏதோ வாகனத்தின் ‘ஹோர்ன்’ சப்தம் காதைப் பிளக்கவே திரும்பியவள் அதிர்ந்து நின்றாள். ஓர் நீண்ட உருவம் காரிருளில் காரிலிருந்து இறங்கி அவளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெடவெடத்துப் போனவளைப் பார்த்து சிரித்து,

”ஹேய்… நா ஒன்ன ஒபீஸ்லயெல்லா தேடிட்டு தா வாரதே… எங்க கிளம்பிட்ட? காலையில அக்கா சொன்னது ஞாபகமிருக்கா? ” விக்னேஷின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு காலையில் நடந்த நிகழ்வு ஞாபகம் வந்தது.

”என்ன மெடம் பேசாம நிக்றீங்க? வாங்க காருல போகலாம்…” அவனைக் கூர்ந்து பார்த்தவள்,

”வேணாமே… நா…நா. நடந்து போய்கிறன்” அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவன்,

”ஓ அப்படியா… அப்ப போங்க… நடந்து ஏதாவது ஆச்சுனா எனக்கு தெரியாது…”

வந்தவழியே நடந்து சென்று காரில் ஏறியவனையே பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி நடக்கத் தொடங்கியவள் ஒரு பாதையில் போகும் போது சற்று தாமதித்தாள். அங்கே குடித்துக் கொண்டு இருவர் ஆடியாடி வலம் வந்து கொண்டிருந்தனர். அவளின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியிருந்தது. ‘ஐயோ…. நா அவன் கூடவே போயிருக்கலாமே… இப்போ…’ விம்மிக் கொண்டு வந்தது. வந்த குடிகாரர்களின் கண்களில்இவள் சிக்க,

”டேய்… பாரு குட்டி…” பெரும் குரலெடுத்து ஒருவன் கத்தவே மற்றவனும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.

”ஆமாடா… செமயா இருக்கா…” இப்போது பவித்ரிவின் இருதய துடிப்புக் கூடியது. அவள் திரும்பிப் பார்த்து ஓடிக் கொண்டிருந்தாள்.

”ஏ… ஓடுதுடா அது புடி.. புடி அவள…” கத்திக் கொண்டே துரத்தி வந்தனர். ஏதும் தெரியாது தறிகெட்டுஓடிக் கொண்டிருந்தவள் முன்னால் வந்த வாகனத்தில் மோதுண்டு விழுந்தாள்.

”ஐயோ…. அது விழுந்துருச்சி…” குடிகாரர்கள் மறுவீதியால் ஓடி மறைந்தனர். காரிலிருந்து இறங்கிய விக்னேஷ் அவசரமாக பவித்ரா விழுந்த இடத்திற்கு விரைந்தான். அவள் மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்து தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி,

”என்னாச்சு?” என்றவனிடம் அனைத்தையும் கூறியதுமே,

”அது தானே ஆரம்பத்துலயே நா சொன்னது… சரி இப்பவாவது வா…. பாரு பத்துறமா எழும்பு…” அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.

”இங்க பாரு ஒன்னோட கைல காயம் இருக்கு இப்படியே வீட்டுகு போகாம மருந்து கட்டிடு போவம்… அக்கா பயப்படும்….” அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி மறுபடி,

”இங்க பாரு…. ஆரம்பத்துலயே ஏ பேச்ச கேட்டிருந்தா….” பெருமூச்சு விட்டுக் கொண்டே காரை வேகமாகச் செலுத்தியவன்  சற்று நேரத்தில் நிறுத்தினான்.

”பவித்ரா எடம் வந்திருச்சு….” அவள்  மயக்க நிலையிலிருந்து இன்னும் முழுமையாகத் தெளிந்திருக்கவில்லை. ஆயினும் மனம் எங்கோ ஓரத்தில் பதைபதைத்தது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

” என்ன நீ சிரிக்ற ? ” கோபத்துடன் கூறியவனைப் பார்த்து, ”நீங்க சொல்றது வேடிக்கயா இருக்கு… நானும் கண்டுபுடிச்சது தா இந்த விசயம்… அதுவல்ல இப்ப முக்கியம் எவிடன்ஸ் கெலக்ட் பண்றது தா……

” என்ன நீ சிரிக்ற ? ” கோபத்துடன் கூறியவனைப் பார்த்து, ”நீங்க சொல்றது வேடிக்கயா இருக்கு… நானும் கண்டுபுடிச்சது தா இந்த விசயம்… அதுவல்ல இப்ப முக்கியம் எவிடன்ஸ் கெலக்ட் பண்றது தா……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *