நித்யா… அத்தியாயம் -22

  • 7

”நித்….. ” விக்னேஷின் வாயிலிருந்து இவ் வார்த்தைகளைக் கேட்டவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவளையே பார்த்தவனின் முகத்தில் பதற்றம் தெரியவே,

”நீங்க…. எங்க அக்கா பேர சொல்ல பாத்தீங்களா?” தட்டுத்தடுமாறி அரை மயக்கத்தில் வார்த்தைகளை வெளியிட்டவளைப் பார்த்து மறுபடி,

”ஐயோ இல்ல…. ஒன்ன பாக்க கிட்ட ஏதோ ஞாபகம் வந்திச்சு…. சரி எறங்கு…”

கார் கதவைத் திறந்து விட்டவன் அவளது கையைப் பிடித்து இறக்கி விட்டான். நின்ற இடத்தை இருள் ஆக்கிரமித்திருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே இருள் மயமாகவே இருந்தது. பவித்ராவுக்கு ஓரளவு சுயநினைவு திரும்பியதுமே,

”விக்னேஷ்…. இது எந்த எடம்… ஒரே இருட்டா இருக்கு…. ” அவளை உற்றுப் பார்த்து விட்டு,

”வாயேன் இதுவும் நம்ம வீடு தா…” அவளது பாதம் பின்வாங்கவே அதை அவதானித்தவன் போல அவளது வலக்கையைப் பற்றி,

”வா… ஒன்னோட காயத்துகு மருந்து போட்டுகிட்டே போ….”

முன்னேறிச் சென்றாலும் அவளது உள்ளமோ பின்னோக்கி வேகமாக ஓடவே துணிந்தது. அவளது உடல் பலவீனம் அதைத் தடுக்கவே ‘கடவுளே காப்பாத்து ‘ மனமோ கூக்குரல் எழுப்பியது. பாழடைந்த நிலையில் இருந்த அவ் வீட்டில் யாரும் இருக்கவில்லை. மெல்ல அவனைப் பார்த்து,

”இங்க யாருமில்லயா?” அவளை ஏற இறங்கப் பார்த்து,

”என்ன அப்படி கேக்குற?” சிரிப்பொலி அவளது உள்ளத்தில் இடியென இறங்கியது. அவளது காதருகே வந்து,

”என்ன பயமாயிருக்கா?” ஏதோ அருவருப்பு தோன்றவே அவனிடமிருந்து விலகி,

”விக்னேஷ் என்ன நெனச்சிகொண்டிருக்ற மனசில?” வார்த்தைகள் நெருப்பென தெறிக்கவே ,

”ம்…. பவிக்குட்டி இப்படி பேசக்கூடாதுடா…” புருவத்தை உயர்த்தி வார்த்தைகளை உதிர்த்தவன் சிரித்தான்.

”போதும் ஒன்னோட சிரிப்பு….” கத்தியதுமே, அவளை நெருங்கி,

”என்ன சொன்ன?” பற்களை நரநரவெனக் கடித்துக் கொண்டான்.

”ஆமாடா… ஒன்னோட அப்படித் தா பேசமுடியுது… பொம்புளப் பொருக்கி….” விக்னேஷின் கோபம் எல்லை தாண்டியது.

”என்னடி சொன்ன??” கையை ஓங்கப் போனவன் அப்படியே நிறுத்திக் கொண்டான்.

”ஓ… அடிக்க வேற வரியா? நீ நீ… தானேடா எங்கக்காவ….” அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தன. தொண்டையில் ஏதோ தட்டுப்படுவது போலுணரவே, உமிழ்நீரை விழுங்கிக் கொண்டே,

”சீ….நாயே….”

”ஓ…. ஒனக்கு என்ன பாத்தா நாய் மாதியா காணுது…”

”ஆமாடா… அதுக்கும் மேல… சீ…” துப்பியவளின் கைகளை இறுக்கிப் பிடித்தான்.

”வலி என்ன என்டு ஒனக்கு புரியுதா? சும்மா தெரியாத விசயதுல தல போட வராத…”

”ஐயோ… விடு வலிக்குது… அம்மா…” கதறியவளையே சற்று நேரம் பார்த்து விட்டு,

”சரி விடுறன். ஒனக்கு காதல் இப்படிபட்ட வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதுனு நெனக்கிறன்.”

‘போடா… பேய்… நீயாவது அதுக்கு எப்படி அர்த்தம் சொல்றதாவது’ மனதால் வைதவள்.

”கை வலிக்குது…” அழுதாள்.

”எங்க… ஒனக்கு அடி கூட பட்டிருச்சே அந்த கையா?” அவனது வார்த்தைகளில் கனிவைக் கண்டு வியந்தாள். சற்று நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. விக்னேஷ் அவசரமாக ஓடினான்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”நித்….. ” விக்னேஷின் வாயிலிருந்து இவ் வார்த்தைகளைக் கேட்டவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவளையே பார்த்தவனின் முகத்தில் பதற்றம் தெரியவே, ”நீங்க…. எங்க அக்கா பேர சொல்ல பாத்தீங்களா?” தட்டுத்தடுமாறி அரை மயக்கத்தில் வார்த்தைகளை…

”நித்….. ” விக்னேஷின் வாயிலிருந்து இவ் வார்த்தைகளைக் கேட்டவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவளையே பார்த்தவனின் முகத்தில் பதற்றம் தெரியவே, ”நீங்க…. எங்க அக்கா பேர சொல்ல பாத்தீங்களா?” தட்டுத்தடுமாறி அரை மயக்கத்தில் வார்த்தைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *