சலசலத்து ஓடும் அழகு மிகு நில்வள கங்கைத் தீரத்தில் தலைநிமிர்ந்து நிற்பது தான் “போர்வை முஹியந்தீன் பள்ளிவாசல்” அழகுக்கு அழகூட்டும் எழிலான பக்தாதிய கலை அம்சத்தை உள்ள்டக்கி பார்ப்போரின் மனதை ஈர்க்கும் வசிகர சக்தியையும் பக்தியையும் தரக்கூடியதாக அமைந்து இருக்கும் இப்பள்ளிவாசல் தென்னிலங்கையில் மாத்திரமல்ல இலங்கையில் எங்கு முஸ்லிம்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இதன் நாமம் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது என்றால் இதக் சிறப்பு சொல்லாமலே விளங்கும். சிறப்பு மிகு தியாரமும் சிந்தை கவரும் இதன் தோற்றமும் இதற்கு காரணங்கள் எனலாம். இஸ்லாமியர் மாத்திரதமல்ல அந்நிய மதத்தவர்கள் கூட இப்பள்ளிவாசலில் காட்டும் நம்பிக்கையும் பற்றும் வியந்துறைக்கதக்கது இத்தகு மேன்மை பொருந்திய பள்ளிவாசலின் வரலாற்றை சற்று பின்னோக்கி புரட்டிப் பார்ப்போம்.
17 ஆம் நூற்றாண்டில் இலங்கையானது ஒல்லாந்தர் பிடியினுள் சிக்கி இருந்த நேரம். கரையோரப் பகுதிகள் யாவற்றையும் கைக்குள் வைப்பதற்காகப் பிரயத்தனம் புரிந்து கொண்டிருந்த இவர்கள் மாத்தறை நகரையும் கைப்பற்றினர். முஸ்லிம்கள் பால் குரோத மனப்பான்மை கொண்டிருந்த இவர்கள் அவர்களுக்கு சொல்லொனத் தீங்கு விளைவித்தனர்.
மாத்தறையிலும் தெவிநுவர பள்ளியவத்தையிலும் பரவலாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஒல்லாந்தர்களின் கொடுமைகளையும் தாக்குதல்களையும் தாங்க முடியாமல் தம் சொத்து¸ சுகம்¸ இல்லிடம் யாவற்றையும் துறந்து வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். இவ்வாறு குடியேறிய பகுதிகளாக ஹொரகொட, மாறம்ப¸ பள்ளிகே வத்த போன்ற இடங்களை குறிப்பிடலாம்.
இக்காலப்பகுதியில் இன்றுள்ள “போர்வை” உன்னிச்சை மரங்கள் நிறைந்h காடடர்ந்த குடியேற்றமற்ற பகுதியாக காணப்பட்டது. காலியைச் சேர்ந்த மாணிக்கம் அகழும் முஸ்லிம்கள் இங்கு வருவதும்¸ பாதுகாப்பாக தங்கி மாணிக்கப் “பத்தல்”கள் அகழ்வதும் சகஜாமாக இருந்தது. போர்வைக் கிராமத்தில் இதற்கான சுவடுகள் அங்காங்கு காட்சி தந்து சான்று பகர்ச்து கொண்டிருக்கின்றன.
அவ்வாறு வியாபார நோக்கமாக வந்த ஒருவர் இன்றுள்ள “ஸியாரம்” இடத்தில் ஒரு “மீஸானை” சுற்றி பல தென்னை மரங்கள் இருப்பதைக் கனவு கண்டார். இக்குறிப்பை வைத்து சென்று பார்த்த அவர் அங்கே தென்னை மரங்களும் இருக்க கண்டு இது அல்லாஹ்வின் நல்லடியார்களுல் ஒருவரினது ஸியாரமாக இருக்கலாம் என முடிவு பூண்டார். இதன்படி அல்லாஹ்வின் நல்லடியார்களான அவ்லியாக்கள் மேலுள்ள நம்பிக்கை காரணமாக மரம்ப. பள்ளிகே வத்த போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் படிப்படியாக ஸியாரத்தை சூழ குடியேறத் துவங்கினர். இந்நிகழ்ச்சியினால் முஸ்லிம்கள் பலர் இவ்விடத்திற்கு “ஸியாரத்” செய்வதற்கு வந்ததன் காரணமாக வெளியிடங்களிலும் இவ்விடம் பிரசித்தி பெற வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் இப் பெரியாரின் பெயரில் வருடாந்தம் ரபியுல் ஆகிர் பிறை 12 இல் கந்தூரி உற்சவமும் நிகழத் தொடங்கியது. நேர்ச்சையாக “ஸியாரத்”தை மூடி துணி போர்த்துவதும் வழக்காமாயிற்று இதனால் “கொடபிடிய” என பெயரிடப்பட்ட இச்சுற்று வட்டாரம் “போர்வை” என்ற நாமத்தை தாங்கி அழைக்கும் பண்பினை பெற்றது.
மக்கள் போக்குவரத்து அதிகரித்தமையினால் போதிய இடவசதி கொண்ட பள்ளிவாசல் அமைக்க வேண்டி ஏற்பட்டது. அன்றைய அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முடிக்குரிய காணியில் இருந்து தேவையான மரங்களை தரித்துக்கொள்ளும் அனுமதியை அரசாங்க அதிபர் வழங்கினார். நம் முதாதையரின் சிரமதானப் பணிகளுடன் அன்றைய போர்வை பள்ளிவாசல் உருவானது.
1914 இல் ஏற்பட்ட அசாம்பாவிதங்களால் இப்பள்ளிவாசல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை புணர்நிர்மானம் செய்யும் பொறுப்பு முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டது. அன்றைய ஆங்கில அரசுடன் தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக அரசாங்கத்தின் உதவி தாரளமாக கிடைத்தது. 1915 இல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு இன்றிருக்கும் நிலைக்கு அதனை அமைத்து முடிய நான்கு மாதங்களே சென்றன. முஸ்லிம் மக்களின் பண உதவி¸ சிரமாதனப்பணி என்பவற்றை தவிர அன்றைய அரசு 22¸500.00 கொடுத்துதவியதென்றால் அப்பள்ளிவாசலின் தன்மை சொல்லாமலே விளங்கும். பழைய பள்ளிவாசலின் நீண்ட படிகளும்¸ “ஹவுளும்” சிறப்பாக காட்சி தருகின்றன.
சகல கலையம்சங்களுடன் காட்சி தரும் போர்வை முஹியந்தீன் பள்ளிவாசலின் வரைபடம் மசங்க மரத்தடியை சேர்ந்த “யூசுப் பாஸ்” என்பவரால் வரையப்பட்டதாகும். தலைமை மேஸ்திரியாக கொழும்பு மரிக்கார் பிளேஸைச் சேர்ந்த அப்துல் மஹ்மூத் என்பவர் கடமையாற்ற அவரின் கீழ் 64 பேர் ஒத்துழைத்தார்கள். இவர்கள் சகலரும் கொழும்பு முஸ்லிம்களாவர்.
பெரிய பள்ளிவாசலோடு இணைந்து கட்டப்பட்ட புதுப்பள்ளிவாசலின் மத்ரஸா ஒன்று “மத்ரஸத்துல் காதிரியா” என்ற பெயரில் காலி மக்குளுவையை சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் ஹஸ்ரத் (காலி அப்துல் ஸமீஉ ஆலிம் அவர்களின் தகப்பன்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அவரே அதிபராகவும் கடமையாற்றினார். உள்ளூர் வெளியூர் மாணவர்களாக 14 பேர் ஓதினார்கள். 4 வருடங்ள் மாத்திரம் சிறப்பாக இயங்கிய இம் மத்ரஸா இடையில் ஸ்தம்மிதமடைந்தது கவலைக்குறியது. எனினும் பல வருடங்களின் பின்னர் வேலூர் மத்ரஸாவில் பட்டம் பெற்று வந்த ஐ.எல்.எம். அபூபக்கர் ஆலிம் அவர்களின் முயற்சியால் மீண்டும் இம்மத்ரஸா உள்ளூர் மாணவர்களை கொண்டு பல வருடங்கள் இயங்கியது. ஆயினும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அதனை மூட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.
தயாள சிந்தனை கொண்ட தனவந்தர்களினால் இப்பள்ளிவாசலின் எழில் மேலும் உயர்ந்தது. பள்ளிக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ளும் குழாய் வசதியை காலி கலுவல்லை மஹ்ரூப் ஹாஜியார் அவர்களும்.¸ பள்ளி முன்னிலையில் அமைந்துள்ள மதிலை பிரபல வர்த்தகர் W.M அப்துல் ஜப்பார் அவர்களும்¸ தர்காவுக்கான “மர்பலை” மர்ஹூம் எம். ஐ. எம் முஹியந்தீன் அவர்களும்¸ மின்சக்தி தேவைகளை கௌரவ போக்குவரத்து அமைச்சர் அல்ஹாஜ். எம். எச். முஹம்மத் அவர்களும்¸ பள்ளிவாசல் நிலத்திற்குரிய “தெராசோ” பதித்தல்¸ பள்ளிவாசலை சுற்றியுள்ள பாதைக்கு தார் போட்டு செப்பனிடுதல் என்பனவற்றை வர்த்தகர்களான எம். கே. எம். ஹைர் ஹாஜியார் அவர்களும்¸ கொழும்பை சேர்ந்த அல்ஹாஜ் ஏ. எம். பாரூக் அவர்களும் இணைந்து மேற்கொண்டனர். ஒலி பெருக்கி வசதிகள் யாவும் போர்வையைச் சேர்ந்த வர்த்தகர் ஏ. ஆர். எம். வஜுத் அவர்களால் செய்து கொடுக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க கூடிய வகையில் வயல் காணிகளையும்¸ தென்னந்தோட்டங்களையும்¸ முஸ்லிம் தனவந்தர்கள் கொடுத்து வக்புச் செய்துள்ளார்கள். அத்தோடு வருமானத்தை மேலும் பெருக்கக் கூடிய வகையில் மர்ஹூம்களான முஹம்மத் அப்துல்லாஹ் ஸாஹிப் மத்திச்சம்¸ அப்துர் ரஹ்மான் மத்திச்சம் (பெரிய மத்திச்சம்)¸ நூஹூ லெப்பை மத்திச்சம்¸ என். எல். எம். அப்துல் மஜீத் கலிபா¸ எஸ். எல். முஹம்மத் இஸ்மாயில் மத்திச்சம் ஆகியோரின் நன் முயற்சியால் பல கடைகள் கட்டப்பட்டன.
வருடாந்தம் பள்ளியை தரிசிக்கும் பக்தர்களின் வசதிக்காக புதிய பள்ளிவாசலை திருத்தி தங்குமிட வசதியை அமைத்துக் கொடுத்து பள்ளிவாசலுக்குரிய தென்னந்தோட்டங்களை புனர் நடுகை திட்டத்தை மேற்கொண்டு பள்ளி வருவாயை கூட்டிய முன்னால் கிராமத் தலைவர் மர்ஹூம் எம். எஸ். எம். ஷாபி அவர்களை இவ்விடம் நினைவு கூறாமல் இருக்க முடியாது.
1963 முதல் இன்று (1985) வரை பள்ளியை பரிபாலித்து வந்த அல்ஹாஜ் எம். ஐ. எம். சரீப்¸ மர்ஹூம் எம். ஐ. எம். சுலைமான்¸ சுலைமான்¸ மர்ஹூம் எம். எஸ். முஹம்மத்¸ ஜனாப் எஸ். ஏ. எம். எம். அஷ்ரப்¸ எம். ஸீ. எம். ஸாலி¸ மர்ஹூம் எம். எல். ஏ. சபீன்¸ ஏ. ஆர். எம். ஸஹீத்¸ மர்ஹூம் எம். ஐ. எம். ஜமால்தீன் ஆகியோரும் பள்ளிவாசலின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள் என்பதை மறந்து விட முடியாது.
பள்ளிவாசலின் வளர்ச்சி தடைபடா வண்ணம் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. சுற்றாடலில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் பள்ளிக்கு வருமானம் பெறும் நோக்கத்தோடும் தகர “டெண்ட்”களையும் கதிரை மேசைகளை வாங்கி குத்தகைக்கு கொடுப்பதோடு இறைவனில்லத்தை அலங்கரித்து மத்தியஸ்தருக்குரிய இலட்சணத்தோடு பள்ளிவாசல் முஸ்லிம்களின் மத்திய நிலையம் என்பதை நிரூபித்து பள்ளிவாசலைப் பரிபலிக்கும் விடயத்தில் இன்று கடமையாற்றும் நம்பிக்கையாளர்களின் சேவையை என்றும் மறக்காது.
பிரசித்தி பெற்ற ரிபான் ராத்திப்¸ புனித தப்லீஃ பணி¸ வெள்ளிதோறும் திக்ரு மஜ்லிஸ் என்பன இப்பள்ளிவாசலில் இறையருளால் இடம் பெறுவது அல்லாஹ் எமக்களித்த அருளாகும். அது மேலும் சீர் பெற்று விளங்க வல்ல நாயன் அருள்புரிவானக.
எம். ஹனீபா நிஸார்
(கிராமோதயத் தலைவர்)
அஸ் – ஸாதாத் பொன்விழா மலர் – 1985
[products]